Sunday, March 29, 2009

பூமி நேரமும் நிலாச்சோறும்

மனைவியைப் பார்த்து "என்னம்மா முடிச்சாச்சா, இன்னும் பத்துநிமிஷம்தான் இருக்கு..?" என்றேன் "இன்னும் ஐஞ்சு நிமிஷம் ரெடியாகிடும்"என்றார். "மேகி செய்ய ரெண்டு நிமிட போதுமே, எதுக்கு இவ்வளவு நேரம்?"என்றேன் முறைப்பு மட்டுமே பதிலாக வந்தது (அவ்வவ்!). சிலநொடிமௌனத்திற்கு பின் "சேர், டேபிள் கொண்டுபோய் போட்டு ரெடி பண்ணுங்கவர்றேன்" (அப்பா தப்பிச்சேன்!).

அடுத்த ஐந்து நிமிடத்தில் அம்மா, நான், மனைவி, குழந்தை எனஅனைவரும் அபார்ட்மென்ட்டின் பால்கனியில் அமர்ந்திருந்தோம், வீட்டின்அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன. "பூமி நேரம்"கடைபிடிப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு.

தெரு விளக்குகள் ஓரளவுக்கு பால்கனியை வியாபித்தன. சாப்பிடுவதற்கும்,குழந்தை பயப்படாதிருக்கவும் போதுமானதாயிருந்தது. அம்மாவின் கைகளால் சாத உருண்டை வாங்கிச் சாப்பிடவில்லையே தவிர,முழுமையாக நிலாச்சோறு சாப்பிட்ட அனுபவத்தை தந்தது.

இடையில் அம்மா கேட்டார்கள் "என்னப்பா பூமி நேரம்னு சொல்ற, அனாநம்ம வீட்டைத்தவிர எல்லா வீட்டுலையும் விளக்கு எரியுதே?". விடை எனக்கும் தெரியவில்லை.

--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

"நூறு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது", "ஐந்து நாட்களுக்குள் தொடர்புகொள்ளவும், தாமதித்தால் வாய்ப்பு பறிபோய்விடும்".

"இருநூறு மில்லியன் டாலர்கள்" நைஜீரியா வங்கியில் கேட்பாரற்றுகிடக்கிறது தங்களின் பெயரும் இறந்துபோன அந்த கணக்குக்கு சொந்தக்காரரின் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால் உங்களை அணுகினேன். உடனேதொடர்புகொள்ளவும் பணத்தை சரிபாதியாக பங்கிட்டுகொள்வோம்".

மின்னஞ்சலில் பல வருடங்களாக வரும் இது போன்ற டுபாக்கூர்கள் அனைவரும் அறிந்ததே. இன்னும் சிலர் அப்பிராணிகள் இவர்களின் வலையில் விழுந்தாலும்,பெரும்பான்மையான மக்கள் முழித்துக் கொண்டார்கள்.

ஆனால், இந்தக்கும்பல் இப்போது புதிய யுக்தியை கையாள்கிறார்கள் .
குறுந்தகவல் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். அதே தகவல்தான் அனான் ஊடகம்தான் வேறு. மக்கா சாக்கிரதை!!

"யாரும் எந்த தொடர்பும் இல்லாமல் நமக்கு கோடிக்கணக்கில் பணத்தைதரமாட்டார்கள், மீறி நம்புவது முட்டாள்த்தனம்" . (நான் சொல்றதசொல்லிபுட்டேன், அம்புட்டுதேன்!!)


--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

அப்பா: "பையனை எப்படியாவது மருத்துவராக்கிப் பார்க்கணும்"
அம்மா: "நேரம்காலம் பார்க்காமல் உழைக்கவேண்டும், அதனால் அத்துறை வேண்டாம்"
அப்பா: "அப்படியென்றால் மேலான்மைத்துரைதான் சரிவரும்"
அம்மா: "இல்லை, இல்லை! என் மகனை விமானி ஆக்குவதுதான் என் நோக்கம்".
அப்பா: "அதுபோக கண்டிப்பா விளையாட்டுத்துறையிலும் பிரகாசிக்கச் செய்யனும்"
விவாதம் தொடர்ந்தது.

ஆயாவின் கையில் இருந்த குழந்தை: "அவ்வ்வ்வ்வ்! இப்ப என்கூட ஒரு பத்து நிமிடம் விளையாட நேரம் ஒதுக்குங்க, போதும்"


Tuesday, March 24, 2009

வழக்கொழிந்த சொற்கள் (எதிர்ப்பதிவு!)

பதிவர் நண்பர்களுள் பலர் நாம் மறந்துபோன நல்ல தமிழ் சொற்களைப் பட்டியலிட்டு நினைவூட்டினர். அவர்களுக்கு என் நன்றிகள் பல.

அவற்றை தவறவிட்டவர்கள் படிக்க சுட்டிகள் கொடுத்துள்ளேன்...

நம்மால் தொலைக்கப்பட்டவை என சுட்டிக்காட்டுகிறார் பூர்ணிமா
இருப்பதும் இல்லாமல் இருப்பதும் என்கிறார் நட்புடன் ஜமால்.
வால் பையன் தன் பங்கிற்கு சொற்களை பட்டியலிட்டுள்ளார்.
அமிர்தவர்ஷினி அம்மாவின் பாட்டியலுக்கு இங்கே சொடுக்கவும்.
அமுதா அவர்களின் பாட்டியல் இங்கே.


என் பட்டியல் சற்று மாறுபட்டவை. இவையெல்லாம் நன்றாகவே வழக்கத்தில் இருப்பவைதான். இந்த சொற்களும், அதுசார்ந்த நம் வழக்கங்களும் ஒழிந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தொடுத்துள்ளேன்.


தீண்டாமை -- முதலாவதாக நாம் மறக்கப்பட வேண்டிய சொல். என்னதான் நாம் கணினி யுகம் என்று கூறிக்கொண்டாலும், வாழ்வில் புதிய சௌகரியங்கள் கண்டு அடுக்குமாடிகளில் குடிபுகுந்தாலும், பல நாடுகள் பறந்து திரும்பினாலும், இந்தச் சொல்லை மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டே இருக்கிறோம். நகர்ப்புறங்களில் கொஞ்சம் தாக்கம் குறைந்திருக்கிறதே தவிர நம்மைவிட்டு விலகவில்லை. இன்னும் பல பெரியார் பிறக்கவேண்டுமா?


வரதட்சணை - இது சட்டப்படி தவறு என எவ்வளவுதான் பிரச்சாரம் செய்தாலும், நம்மைவிட்டு நீங்காமல் இருக்கிறது. சிந்தித்துப் பார்த்தால், இந்த ஒரு சொல் மட்டும் இல்லையெனில் மக்கள் ஏன் கள்ளிப்பால் தேடிச் செல்கிறார்கள். இந்த ஒரு சொல்லால்தானே பெண் குழந்தைகளை வெறுப்பதும், பிறக்குமுன்னரே அழிக்கும் கொடூரங்களும் நடைபெறுகின்றன.

மலடி - குழந்தைப்பேறு என்பது ஆண், பெண் ஒரு பாலருக்கும் பொதுவானது. குழந்தை பெறுவதில் சிக்கல் என்றால் அதன் காரணம் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம். அப்படியிருக்க பெண்களை மட்டுமே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி வசைபாடும் சொல் இது. மருத்துவத்துறையில் நாம் பல-காத தூரங்கள் கடந்து வந்துவிட்டோம். குழந்தைப் பெற்றுக்கொள்ள மாற்று வழிகள் வந்துவிட்டன. அதனால், செக்கு மாடு போல் மீண்டும் மீண்டும் பெண்களை இந்தச் சொல்லால் அடிப்பது பெருங்குற்றம்.

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் புதியதாக "கல்யாணம்" என்றொரு தொடர் நாடகம் ஒளிபரப்புகிறார்கள். அதில் ஒரு தம்பதியினருக்கு ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லையாம். அதனால் கணவன் மனைவியை மலடி என்று சாடுவதாக வரும். குழந்தை இல்லாமையால் மனைவியின் தங்கையை திருமணம் செய்ய அவன் விரும்புவதாக காட்டுகின்றனர். வேடிக்கை என்னவெனில் கணவன் ஒரு நன்கு படித்த காவல்துறை அதிகாரியாம். இவ்வாறு எழுதிய கதாசிரியர் கிடைத்தால் சட்டையை பிடித்து உலுக்கி "டேய்! நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?" என கேட்கவேண்டும்.

"மெகா-தொடர்கள்" சினிமாவைக் காட்டிலும் மக்களிடம் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, அதனால்தான் இங்கே சுட்டிக்காட்டினேன்.


வஞ்சம் - நமக்கு ஒருவர் மீது ஏதோவொரு காரணத்தால் எரிச்சலோ, கோபமோ வந்தால் நேருக்குநேர் காட்டிவிடலாம் அல்லது பேசி தீர்த்துக்கொள்ளலாம். அதுவிடுத்து கோபத்தை மனதில் புதைத்து வைப்பது வஞ்சத்திற்கு விதைதூவும். சில நாட்களில் அது வேரூன்றி வளர்ந்து மரமாகி நிற்கும். ஐந்து நிமிடம் பேசி தீர்க்கவேண்டிய விடயங்களெல்லாம் மாதக்கணக்கில் ஏன் வருடக்கணக்கிலும் தொடரும், தொல்லைதரும். இருசாராருக்கும் நன்மைபயக்காத இந்த "வஞ்சம்" குழி தோண்டி புதைக்கப்படவேண்டும்.அடிமை - அடிமை என்றால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை தனக்கு அடிமையாக்கி கொடுமை படுத்துவது மட்டுமல்ல. நம்மில் பலர் "குடிக்கு-அடிமை", "புகைக்கு-அடிமை", "கிரிக்கெட்-அடிமை", என பலவகையான அடிமைகளாகத்தான் இருக்கிறோம். நான் "இனிப்புக்கு அடிமை", ஒரு தட்டு நிறைய இனிப்பு வைத்தால் முழுவதுமாக முடிக்காமல் எழ என்னால் முடியாது. நண்பர் ஒருவர் "பதிவுலகத்தின் அடிமை" இரவெல்லாம் பதிவுகளைத் தேடித்தேடி படித்துக் கொண்டேயிருக்கிறார், தூக்கம் இழக்கிறார்.

இவ்வாறு அடிமையாய் இருப்பதால் வரும் நேரடி விளைவுகள் அனைவரும் அறிந்ததே. அனால், மறைமுகமாகவும் நிறைய இழக்க நேரிடுகிறது. உதாரணத்திற்கு சிலர் "தொலைக்காட்சிக்கு அடிமை" எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். நம் கண்களுக்கு நல்லதல்ல என்பது நேரடிவிளைவு. குடும்பத்தாருடன் பேசுவது குறைந்துபோகும், சோம்பேறித்தனம் நம்மில் குடிகொள்ளும் என்பதெல்லாம் மறைமுகமான விளைவுகள். மொத்தத்தில் எந்தவொரு விடயத்திற்கும் அளவுகோல் தேவை அன்பையும் சேர்த்து.


இன்னும் பல ஒழிக்கப்பட வேண்டிய சொற்கள் (வழக்கங்கள்) நம்முள் இருந்துகொண்டு மகிழ்ச்சியைப் குலைக்கின்றன. பட்டியலின் நீளம் கருதி இத்தோடு முடிக்கிறேன் (அப்பாடா!).


நன்றி.


Saturday, March 14, 2009

கொஞ்சம் கடிக்கலாம் வாங்க

மின்னஞ்சலில் வந்தது ரசித்தேன்

"
யான் பெற்ற "கடி" பெருக இவ்வையகம்"


_______________

காதல் Justify Full ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.

------------------------------

வாழை மரம் 'தார்' போடும் ஆனால்
அதை
வச்சு
நம்மால 'ரோடு' போட முடியாதே!

----------------------------------
கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது
வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...


---------------------------------------

நாய்க்கு நாலு கால் இருக்கலாம்,
ஆனால்
, அதால
லோக்கல் கால்,
எஸ்
.டி. டி.கால்,

.எஸ்.டி. கால்
ஏன் ஒரு மிஸ்டு கால் கூடப் பண்ண முடியாது.

---------------------------------------------
நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா,
அது
என்ன நினைக்கும் தெரியுமா?

Intel inside Mental outside !!!
-----------------------------------------------
சார்,
டீ
மாஸ்டர்
டீ போடறாரு,
பரோட்டா
மாஸ்டர்
பரோட்டா போடறாரு,
மேக்ஸ்
மாஸ்டர்
மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...

______________________________________________

மூன்று நீச்சல் குளம்

புதிதாகக் கோடீசுவரரான ஒருவர் தம் பங்களாவில் மூன்று நீச்சல் குளங்கள் கட்டியிருந்தார்.

வந்த ஒருவர் "எதற்காக மூன்று?" என்று கேட்டார்?

"ஒன்று வெந்நீர் இன்னொன்று தண்ணீர், மூன்றாவது வெறுமையாக இருக்கும்" என்றார் கோடீசுவரர்.

"தண்ணீர் இல்லாமல் ஏன் வெறுமையாக நீச்சல் குளம் கட்டியிருக்கீங்க?" என்று கேட்டார் வந்தவர்.

"நீச்சல் தெரியாதவர்களுக்காக" என்று பதில் சொன்னார் அவர்.

______________________________________________

என்னதான் மனுசனுக்கு வீடு வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் , ரயிலேறணும்னா ப்ளாட்பாரத்துக்கு வந்து தான் ஆகணும் . இது தான் வாழ்க்கை.


______________________________________________

வார இறுதி நாட்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகள்.

நன்றி !


Friday, March 13, 2009

திக்..திக்..திக்.!!

கொஞ்சம் திகிலாத்தாங்க இருக்கு.

தினமும் காலைவேளையில் ஷார்ஜா - துபாய் ரோட்டில் ஆயிரக்கணக்கான கார்கள் செல்லும். அந்த நெரிசலில் நாங்கள் அலுவலகம் செல்ல குறைந்தது நாற்பது நிமிடங்கள் ஆகும். 5:30 க்கு துவங்கினால் 6:10 க்கு சென்று சேர்வோம்.
நேற்று காலை 5:30 க்கு துவங்கி 5:45 க்கெல்லாம் சேர்ந்துவிட்டோம். "ஹையா மகிழ்ச்சிதானே?" என்கிறீர்களா. அதுதான் இல்லை. வாகனங்கள் குறைந்து காணப்பட்டவுடன் பயம்தான் வந்தது. நண்பர் ஒருவர் "இன்றிலிருந்து பள்ளிகளில் இறுதித் தேர்வு ஆரம்பம், அதனால் நேரம் மாற்றியிருப்பார்கள்." என்றார். அதனால்தான் வாகன நெரிசல் குறைந்திருப்பதாக அவர் கூறியது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

அப்படி என்ன பயம் ?
"கட்டுமானத் தொழில் மொத்தமா கவுந்தடிச்சு படுத்துருச்சு.
அதை நம்பின குடும்பங்கள் நடு வீதிக்கு வந்தாச்சு.
மற்ற தொழில்களும் கொஞ்சம் "ரிஸ்செசன்" பூதத்திடம் அடி உதை வாங்கிக்கொண்டு இருக்கு.
வேருவழியில்லாம நிறைய சொந்த ஊர் திரும்பியாச்சு."

எங்கள் நிறுவனமும் செலவுகளை குறைக்க புதிய வழிகளைத் தேடிக்கொண்டு இருக்கிறது. புதிதாக ஆட்களை பணியில் சேர்க்க தடை போடப்பட்டிருக்கிறது. இருப்பினும் இதுவரை யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை என்பது ஆறுதல்.


பிள்ளைகளின் கல்வியாண்டு முடிந்ததும் மேலும் நிறையப்பேர் ஊர் திரும்பப்போவதாக சொல்கின்றனர். "அந்த பள்ளியில 3000 பேர் T.C. கேட்டு மனு கொடுத்திருக்காங்களாம்", "இந்த பள்ளியில 7500 பேர் T.C. கேட்டு மனு கொடுத்திருக்காங்களாம்" போன்ற செய்திகள் பரவலாக பேசப்படுகிறது.

இப்பொழுதே பல அடுக்குமாடிக் கட்டிடங்களில் "To-Let" போர்டு வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் இந்த போர்டு மிகவும் அரிதாகக் காணப்பட்டது. வான் தொட்டிருந்த வீட்டு வாடகைகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாய் குறையத் துவங்கியுள்ளன. ஆனால், குடியேரத்தான் ஆளில்லாமல் போய்விடும் போல.

கல்வியாண்டு இந்த மார்ச் இருபது திகதியோடு முடிகிறது. அதன்பின்னர்தான் "ரிஸ்செசன்" பூதத்தின் விளைவுகள் முழுதாய் தெரியவரும் என்கிறார்கள்.

இப்போது பதிவின் முதல் வரியைப் பாருங்கள்.

நன்றி.


Saturday, March 7, 2009

உணவின் உருவங்கள்

ரொம்ப தாகமா இருக்கேன்னு வந்தா தண்ணி வரலையே....என்ன செய்ய ?கவலைப்படாதீங்க,
வாங்க பழச்சாறு சாப்பிடலாம் ...

கொஞ்சம் கனமா இருக்கு ஒரு கை பிடிக்கலாமே...

அச்சச்சோ, மின்சாரம் இல்லையே இனி கையாலேயே பிழியனுமா .


பழச்சாறு வேணும்னா எல்லோரும் வரிசையா வாங்க

யாருப்பா அங்க அரட்டை அடிச்சிக்கிட்டு இருக்கறது.. வந்து வேலையப்பாருங்கயாருக்காவது இதை வாசிக்கத் தெரியுமா ?
மேக்கப் முகத்துக்கு செஞ்சா பரவாயில்லை, இப்படியெல்லாம் உள்ள இறங்கி
குளிக்கக் கூடாதும்மா..


எத்தனை நாளைக்குத்தான் நீங்க எங்களைக் கடிப்பீங்க. ஒரு தடவை நாங்க
கடிக்கறோம். ஹம்..இப்படித்தானே எங்களுக்கும் வலிக்கும்.
என்னையும் யாரும் கடிக்காதீங்க..இல்லை அவ்வளவுதான்


ச்சீ..ச்சீ.. அசிங்கம் அசிங்கம் . மாத்திரை வேண்டாம்னா
சொல்லவேண்டியதுதானே.


ஒரு பட்டாம்ப்பூச்சி ஆப்பிள் சாப்பிடுகிறது..
இதுக்குமேல அறுத்தா..க்ர்ர்ர்ர்!

ஓகே.ஓகே..வுடு ஜூட் !!Monday, March 2, 2009

ஏன் இப்படி?

ஒரே குத்துதான் குத்தினாள்
அவன் வலியில் துடித்தான்
கத்தினான், கதறி அழுதான்

கனப்பொழுதில் எல்லாம்
நடந்தேறியது
ஏன் இப்படி?
எதற்கிந்த கொடூரம்
கொஞ்சமும் இரக்கமில்லாமல்


உதவ முடியாமல்
செய்வதறியாமல்
உறைந்து போய்
நான் நிற்க

"பீஸ் வெளியில கட்டிடுங்க"
என்றாள் எங்கள் ஐந்து
மாதக் குழந்தைக்கு
தடுப்பூசியிட்ட நர்ஸ்!!

அவளைத் திட்டிக்கொண்டே
பணத்தைக் கட்டிவிட்டு
வருவதற்குள் குழந்தை
வலி மறந்திருந்தான்
வழமையான புன்முறுவல் பூத்தான்
எனக்கும் வலி குறைந்தது.


பிறக்குமுன் செய்யும் குறும்பு!

குழந்தைகள் கருவறையில் என்ன செய்வார்கள் என்று ஒரு கற்பனை மிகவும் ரசித்தேன்.


டிஸ்கி: மின்னஞ்சலில் வந்தது.