Tuesday, October 14, 2008

மத்தாளக்கொம்பு நீர் ஊற்று


சமீபத்தில் விடுமுறையில் எங்கள் ஊரான திருப்பூருக்கு சென்றிருந்தேன். அப்போது சிறிய சுற்றுலாவாக கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள மத்தாளக்கொம்பு நீர் ஊற்றுக்கு சென்று வந்தோம்.

வழி நெடுகும் இருபுறமும் இருந்த மரங்களும், பசுமை நிறைந்த வயல்வெளிகளும், ஆறுகளும் மற்றும் ஆங்காங்கே இருந்த சிறு குறு வாய்க்கால்களும் மனதிற்கு குளிர்ச்சியை தந்தன. இதை எல்லாம் விட்டுவிட்டு பாலைவனத்தில் ஏன் சென்று வாழ்கிறாய் என கேட்டன.

திரும்பும் வழியில் எனக்கு பன்னீர் சோடா ஆசை வந்தது. கொளப்பலூர் எனுமிடத்தில் நிறுத்தி சில கடைகளை விசாரித்து பின் ஒரு சோடா கடையை கண்டுபிடித்தோம். மிகச்சுவையான பன்னீர் சோடாவை இன்றண்டுமுறை வாங்கி குடித்தும் போதாமல், Aquafina Bottle நிரப்பியும் வாங்கினோம். இனத்துடன் விட்டோமா, Rose மில்க்-கையும் விட்டுவைக்கவில்லை. அதுவும் குடித்தபின் இன்னொரு Aquafina Bottle நிரப்பப்பட்டது (அலம்பல் தாங்க வில்லை என்கிறீர்களா?).

மிகவும் மகிழ்ச்சியான அந்த பயணத்தின் புகைப்படங்கள் இங்கே உங்களுக்காக..






எங்கள் ஊரைப்பற்றி ...

தொழில் நகரமான திருப்பூர் மிகவும் சுறுசுறுப்பான ஊர். இரவு பகல் பார்க்காது பின்னலாடை மற்றும் அது சார்ந்த தொழில்களில் உழைக்கும் மக்கள் வாழுமிடம். இந்தியாவின் மொத்த பின்னலாடை உற்பத்தியில் 60 சதவிகிதம் தயாரித்து வருடத்திற்கு 10,000 கோடி அளவிற்கு தொழில் செய்யும் நகரம். இங்கே விடுமுறை என வந்துவிட்டால் மக்கள் வீட்டில் இருப்பது அரிது என்றே சொல்லலாம். சிறகை விரித்துக்கொண்டு சுற்றுலா புறப்பட்டுவிடுவார்கள். அதற்கு ஏற்றாற்போல் நகரத்தை சுற்றி நிறைய சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளது. நானும் அப்படி நிறைய முறை சென்றிருக்கிறேன். அனால் இப்பொழுதெல்லாம் திருப்பூருக்கு செல்வதே சுற்றுலாதான்.



3 comments:

Raveendran said...
This comment has been removed by the author.
Raveendran said...

நிழலின் அருமை வெய்யலில்..
வெய்யலில் விழுவது தவறில்லை, வாழ்வது வருத்தத்திற்குரியதே.
குறுந்தளிர், குளிர்காற்று,
செவ்வானம், செந்நாரை,
மதி மயக்கும் மர நிழல்,
வயல் நிறைக்கும் வாய்கால்கள்,
மணக்கும் மண்வாசனை,
மனிதம் நிறைந்த மனிதர்கள்....
இவை என் மனம் மறந்தவை ... உண்மையில் மன மருந்தவை.
நினைவூட்டிய நிழற்படத்திற்கும், தங்களுக்கும் நன்றிகள் பல.

கணினி தேசம் said...

கவிதை கவிதை.. !

வாங்க ரவி!

உங்க கவிதைத்துவமான பின்னூட்டத்திற்கு நன்றி.