Monday, August 17, 2009

சக பதிவருக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்

சக பதிவரான சிங்கையைச் சேர்ந்த செந்தில்நாதன் அவர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படுகிறது.

அவருக்கு நம்மால் இயன்றதைச் செய்வோம்.

இது தொடர்பான பதிவர் கே.வி.ஆர் அவர்களின் பதிவு
பதிவர் சிங்கை நாதனுக்கு உதவுங்கள் - Very Urgent

நரசிம் அவர்களின் பதிவு
சிங்கை நாதா... நாங்கள் இருக்கிறோம்...உதவ இதோ வழி...

மனமிருந்தால் மார்க்கமுண்டு. இதோ உதவி செய்ய பல வழிகள்
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
ICICI Account Details
Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details
Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings


அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் செந்திலின் மைத்துனரின் அக்கவுண்டுக்கு அனுப்பலாம். அவரது அக்கவுண்ட் விபரம்
LastName: Sethuraman
FirstName: Siddeswaran
Bank Name: WaMu (Washington Mutual Bank)
Bank Address; 21241 Hawthorne Blvd, Torrance, CA 90503
Bank A/cNo: 9282741060
Routing No: 322271627
A/c Type: Checking A/c
siddeswaran.s@gmail.com
Res No: 001 - 310 - 933- 1543

Western Union மூலமாக பணம் அனுப்புபவர்கள் பணத்தை அனுப்பிவிட்டு அனுப்பியவர் பெயரையும் Money Transfer Control Number (MTCN)யும் karunanithi.muthaiyan@credit-suisse.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்

Paypal details as follows:
e-mail id: rajan.sovi@gmail.com
Then choose the currency
Then choose the reason for transfer- if possible add a note "Senthil's treatment".

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, April 26, 2009

உக்கார்ந்து யோசிப்பாங்களோ...!!

மனிதனின் கற்பனைக்கு எல்லையேயில்லை என பறைசாற்றுகிறது இந்தமாறுபட்ட சிலைகளின் தொகுப்பு.


நன்றி

Saturday, April 11, 2009

உலகின் பிரும்மாண்ட வைரச் சுரங்கம்

சைபீரிய நாட்டின் கிழக்குப்பகுதியில்(Mirny) அமைந்துள்ள இந்த வைரச் சுரங்கம்தான் உலகின் மிகப்பெரிய திறந்தவெளிச் சுரங்கமாகும்.

கீழ் நோக்கி வீசும் காற்றின் வேகத்தால் சுரங்கத்தின் மேல் வானூர்திகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

500 மீ அகலமும் 1200 மீ ஆழமும் கொண்டது. (அவ்வளவு ஆழத்துக்கு தோண்டியும் தண்ணி வரலையா?)


இன்னும் உணர முடியவில்லையெனில் கீழுள்ள படத்தை (சிவப்பு குறியிட்ட இடம்). 220 டன் மற்றும் 20 அடி உயரம் கொண்ட பாறைகளை ஏற்றிச் செல்லும் பெரிய சரக்கு வாகனம் எள்ளலவாய் தெரிவதைப் பாருங்கள். (அப்பப்பா....இப்பவே கண்ணைக் கட்டுதே!).
நன்றி


Sunday, March 29, 2009

பூமி நேரமும் நிலாச்சோறும்

மனைவியைப் பார்த்து "என்னம்மா முடிச்சாச்சா, இன்னும் பத்துநிமிஷம்தான் இருக்கு..?" என்றேன் "இன்னும் ஐஞ்சு நிமிஷம் ரெடியாகிடும்"என்றார். "மேகி செய்ய ரெண்டு நிமிட போதுமே, எதுக்கு இவ்வளவு நேரம்?"என்றேன் முறைப்பு மட்டுமே பதிலாக வந்தது (அவ்வவ்!). சிலநொடிமௌனத்திற்கு பின் "சேர், டேபிள் கொண்டுபோய் போட்டு ரெடி பண்ணுங்கவர்றேன்" (அப்பா தப்பிச்சேன்!).

அடுத்த ஐந்து நிமிடத்தில் அம்மா, நான், மனைவி, குழந்தை எனஅனைவரும் அபார்ட்மென்ட்டின் பால்கனியில் அமர்ந்திருந்தோம், வீட்டின்அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன. "பூமி நேரம்"கடைபிடிப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு.

தெரு விளக்குகள் ஓரளவுக்கு பால்கனியை வியாபித்தன. சாப்பிடுவதற்கும்,குழந்தை பயப்படாதிருக்கவும் போதுமானதாயிருந்தது. அம்மாவின் கைகளால் சாத உருண்டை வாங்கிச் சாப்பிடவில்லையே தவிர,முழுமையாக நிலாச்சோறு சாப்பிட்ட அனுபவத்தை தந்தது.

இடையில் அம்மா கேட்டார்கள் "என்னப்பா பூமி நேரம்னு சொல்ற, அனாநம்ம வீட்டைத்தவிர எல்லா வீட்டுலையும் விளக்கு எரியுதே?". விடை எனக்கும் தெரியவில்லை.

--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

"நூறு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது", "ஐந்து நாட்களுக்குள் தொடர்புகொள்ளவும், தாமதித்தால் வாய்ப்பு பறிபோய்விடும்".

"இருநூறு மில்லியன் டாலர்கள்" நைஜீரியா வங்கியில் கேட்பாரற்றுகிடக்கிறது தங்களின் பெயரும் இறந்துபோன அந்த கணக்குக்கு சொந்தக்காரரின் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால் உங்களை அணுகினேன். உடனேதொடர்புகொள்ளவும் பணத்தை சரிபாதியாக பங்கிட்டுகொள்வோம்".

மின்னஞ்சலில் பல வருடங்களாக வரும் இது போன்ற டுபாக்கூர்கள் அனைவரும் அறிந்ததே. இன்னும் சிலர் அப்பிராணிகள் இவர்களின் வலையில் விழுந்தாலும்,பெரும்பான்மையான மக்கள் முழித்துக் கொண்டார்கள்.

ஆனால், இந்தக்கும்பல் இப்போது புதிய யுக்தியை கையாள்கிறார்கள் .
குறுந்தகவல் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். அதே தகவல்தான் அனான் ஊடகம்தான் வேறு. மக்கா சாக்கிரதை!!

"யாரும் எந்த தொடர்பும் இல்லாமல் நமக்கு கோடிக்கணக்கில் பணத்தைதரமாட்டார்கள், மீறி நம்புவது முட்டாள்த்தனம்" . (நான் சொல்றதசொல்லிபுட்டேன், அம்புட்டுதேன்!!)


--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

அப்பா: "பையனை எப்படியாவது மருத்துவராக்கிப் பார்க்கணும்"
அம்மா: "நேரம்காலம் பார்க்காமல் உழைக்கவேண்டும், அதனால் அத்துறை வேண்டாம்"
அப்பா: "அப்படியென்றால் மேலான்மைத்துரைதான் சரிவரும்"
அம்மா: "இல்லை, இல்லை! என் மகனை விமானி ஆக்குவதுதான் என் நோக்கம்".
அப்பா: "அதுபோக கண்டிப்பா விளையாட்டுத்துறையிலும் பிரகாசிக்கச் செய்யனும்"
விவாதம் தொடர்ந்தது.

ஆயாவின் கையில் இருந்த குழந்தை: "அவ்வ்வ்வ்வ்! இப்ப என்கூட ஒரு பத்து நிமிடம் விளையாட நேரம் ஒதுக்குங்க, போதும்"


Tuesday, March 24, 2009

வழக்கொழிந்த சொற்கள் (எதிர்ப்பதிவு!)

பதிவர் நண்பர்களுள் பலர் நாம் மறந்துபோன நல்ல தமிழ் சொற்களைப் பட்டியலிட்டு நினைவூட்டினர். அவர்களுக்கு என் நன்றிகள் பல.

அவற்றை தவறவிட்டவர்கள் படிக்க சுட்டிகள் கொடுத்துள்ளேன்...

நம்மால் தொலைக்கப்பட்டவை என சுட்டிக்காட்டுகிறார் பூர்ணிமா
இருப்பதும் இல்லாமல் இருப்பதும் என்கிறார் நட்புடன் ஜமால்.
வால் பையன் தன் பங்கிற்கு சொற்களை பட்டியலிட்டுள்ளார்.
அமிர்தவர்ஷினி அம்மாவின் பாட்டியலுக்கு இங்கே சொடுக்கவும்.
அமுதா அவர்களின் பாட்டியல் இங்கே.


என் பட்டியல் சற்று மாறுபட்டவை. இவையெல்லாம் நன்றாகவே வழக்கத்தில் இருப்பவைதான். இந்த சொற்களும், அதுசார்ந்த நம் வழக்கங்களும் ஒழிந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தொடுத்துள்ளேன்.


தீண்டாமை -- முதலாவதாக நாம் மறக்கப்பட வேண்டிய சொல். என்னதான் நாம் கணினி யுகம் என்று கூறிக்கொண்டாலும், வாழ்வில் புதிய சௌகரியங்கள் கண்டு அடுக்குமாடிகளில் குடிபுகுந்தாலும், பல நாடுகள் பறந்து திரும்பினாலும், இந்தச் சொல்லை மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டே இருக்கிறோம். நகர்ப்புறங்களில் கொஞ்சம் தாக்கம் குறைந்திருக்கிறதே தவிர நம்மைவிட்டு விலகவில்லை. இன்னும் பல பெரியார் பிறக்கவேண்டுமா?


வரதட்சணை - இது சட்டப்படி தவறு என எவ்வளவுதான் பிரச்சாரம் செய்தாலும், நம்மைவிட்டு நீங்காமல் இருக்கிறது. சிந்தித்துப் பார்த்தால், இந்த ஒரு சொல் மட்டும் இல்லையெனில் மக்கள் ஏன் கள்ளிப்பால் தேடிச் செல்கிறார்கள். இந்த ஒரு சொல்லால்தானே பெண் குழந்தைகளை வெறுப்பதும், பிறக்குமுன்னரே அழிக்கும் கொடூரங்களும் நடைபெறுகின்றன.

மலடி - குழந்தைப்பேறு என்பது ஆண், பெண் ஒரு பாலருக்கும் பொதுவானது. குழந்தை பெறுவதில் சிக்கல் என்றால் அதன் காரணம் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம். அப்படியிருக்க பெண்களை மட்டுமே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி வசைபாடும் சொல் இது. மருத்துவத்துறையில் நாம் பல-காத தூரங்கள் கடந்து வந்துவிட்டோம். குழந்தைப் பெற்றுக்கொள்ள மாற்று வழிகள் வந்துவிட்டன. அதனால், செக்கு மாடு போல் மீண்டும் மீண்டும் பெண்களை இந்தச் சொல்லால் அடிப்பது பெருங்குற்றம்.

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் புதியதாக "கல்யாணம்" என்றொரு தொடர் நாடகம் ஒளிபரப்புகிறார்கள். அதில் ஒரு தம்பதியினருக்கு ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லையாம். அதனால் கணவன் மனைவியை மலடி என்று சாடுவதாக வரும். குழந்தை இல்லாமையால் மனைவியின் தங்கையை திருமணம் செய்ய அவன் விரும்புவதாக காட்டுகின்றனர். வேடிக்கை என்னவெனில் கணவன் ஒரு நன்கு படித்த காவல்துறை அதிகாரியாம். இவ்வாறு எழுதிய கதாசிரியர் கிடைத்தால் சட்டையை பிடித்து உலுக்கி "டேய்! நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?" என கேட்கவேண்டும்.

"மெகா-தொடர்கள்" சினிமாவைக் காட்டிலும் மக்களிடம் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, அதனால்தான் இங்கே சுட்டிக்காட்டினேன்.


வஞ்சம் - நமக்கு ஒருவர் மீது ஏதோவொரு காரணத்தால் எரிச்சலோ, கோபமோ வந்தால் நேருக்குநேர் காட்டிவிடலாம் அல்லது பேசி தீர்த்துக்கொள்ளலாம். அதுவிடுத்து கோபத்தை மனதில் புதைத்து வைப்பது வஞ்சத்திற்கு விதைதூவும். சில நாட்களில் அது வேரூன்றி வளர்ந்து மரமாகி நிற்கும். ஐந்து நிமிடம் பேசி தீர்க்கவேண்டிய விடயங்களெல்லாம் மாதக்கணக்கில் ஏன் வருடக்கணக்கிலும் தொடரும், தொல்லைதரும். இருசாராருக்கும் நன்மைபயக்காத இந்த "வஞ்சம்" குழி தோண்டி புதைக்கப்படவேண்டும்.அடிமை - அடிமை என்றால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை தனக்கு அடிமையாக்கி கொடுமை படுத்துவது மட்டுமல்ல. நம்மில் பலர் "குடிக்கு-அடிமை", "புகைக்கு-அடிமை", "கிரிக்கெட்-அடிமை", என பலவகையான அடிமைகளாகத்தான் இருக்கிறோம். நான் "இனிப்புக்கு அடிமை", ஒரு தட்டு நிறைய இனிப்பு வைத்தால் முழுவதுமாக முடிக்காமல் எழ என்னால் முடியாது. நண்பர் ஒருவர் "பதிவுலகத்தின் அடிமை" இரவெல்லாம் பதிவுகளைத் தேடித்தேடி படித்துக் கொண்டேயிருக்கிறார், தூக்கம் இழக்கிறார்.

இவ்வாறு அடிமையாய் இருப்பதால் வரும் நேரடி விளைவுகள் அனைவரும் அறிந்ததே. அனால், மறைமுகமாகவும் நிறைய இழக்க நேரிடுகிறது. உதாரணத்திற்கு சிலர் "தொலைக்காட்சிக்கு அடிமை" எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். நம் கண்களுக்கு நல்லதல்ல என்பது நேரடிவிளைவு. குடும்பத்தாருடன் பேசுவது குறைந்துபோகும், சோம்பேறித்தனம் நம்மில் குடிகொள்ளும் என்பதெல்லாம் மறைமுகமான விளைவுகள். மொத்தத்தில் எந்தவொரு விடயத்திற்கும் அளவுகோல் தேவை அன்பையும் சேர்த்து.


இன்னும் பல ஒழிக்கப்பட வேண்டிய சொற்கள் (வழக்கங்கள்) நம்முள் இருந்துகொண்டு மகிழ்ச்சியைப் குலைக்கின்றன. பட்டியலின் நீளம் கருதி இத்தோடு முடிக்கிறேன் (அப்பாடா!).


நன்றி.


Saturday, March 14, 2009

கொஞ்சம் கடிக்கலாம் வாங்க

மின்னஞ்சலில் வந்தது ரசித்தேன்

"
யான் பெற்ற "கடி" பெருக இவ்வையகம்"


_______________

காதல் Justify Full ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.

------------------------------

வாழை மரம் 'தார்' போடும் ஆனால்
அதை
வச்சு
நம்மால 'ரோடு' போட முடியாதே!

----------------------------------
கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது
வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...


---------------------------------------

நாய்க்கு நாலு கால் இருக்கலாம்,
ஆனால்
, அதால
லோக்கல் கால்,
எஸ்
.டி. டி.கால்,

.எஸ்.டி. கால்
ஏன் ஒரு மிஸ்டு கால் கூடப் பண்ண முடியாது.

---------------------------------------------
நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா,
அது
என்ன நினைக்கும் தெரியுமா?

Intel inside Mental outside !!!
-----------------------------------------------
சார்,
டீ
மாஸ்டர்
டீ போடறாரு,
பரோட்டா
மாஸ்டர்
பரோட்டா போடறாரு,
மேக்ஸ்
மாஸ்டர்
மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...

______________________________________________

மூன்று நீச்சல் குளம்

புதிதாகக் கோடீசுவரரான ஒருவர் தம் பங்களாவில் மூன்று நீச்சல் குளங்கள் கட்டியிருந்தார்.

வந்த ஒருவர் "எதற்காக மூன்று?" என்று கேட்டார்?

"ஒன்று வெந்நீர் இன்னொன்று தண்ணீர், மூன்றாவது வெறுமையாக இருக்கும்" என்றார் கோடீசுவரர்.

"தண்ணீர் இல்லாமல் ஏன் வெறுமையாக நீச்சல் குளம் கட்டியிருக்கீங்க?" என்று கேட்டார் வந்தவர்.

"நீச்சல் தெரியாதவர்களுக்காக" என்று பதில் சொன்னார் அவர்.

______________________________________________

என்னதான் மனுசனுக்கு வீடு வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் , ரயிலேறணும்னா ப்ளாட்பாரத்துக்கு வந்து தான் ஆகணும் . இது தான் வாழ்க்கை.


______________________________________________

வார இறுதி நாட்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகள்.

நன்றி !


Friday, March 13, 2009

திக்..திக்..திக்.!!

கொஞ்சம் திகிலாத்தாங்க இருக்கு.

தினமும் காலைவேளையில் ஷார்ஜா - துபாய் ரோட்டில் ஆயிரக்கணக்கான கார்கள் செல்லும். அந்த நெரிசலில் நாங்கள் அலுவலகம் செல்ல குறைந்தது நாற்பது நிமிடங்கள் ஆகும். 5:30 க்கு துவங்கினால் 6:10 க்கு சென்று சேர்வோம்.
நேற்று காலை 5:30 க்கு துவங்கி 5:45 க்கெல்லாம் சேர்ந்துவிட்டோம். "ஹையா மகிழ்ச்சிதானே?" என்கிறீர்களா. அதுதான் இல்லை. வாகனங்கள் குறைந்து காணப்பட்டவுடன் பயம்தான் வந்தது. நண்பர் ஒருவர் "இன்றிலிருந்து பள்ளிகளில் இறுதித் தேர்வு ஆரம்பம், அதனால் நேரம் மாற்றியிருப்பார்கள்." என்றார். அதனால்தான் வாகன நெரிசல் குறைந்திருப்பதாக அவர் கூறியது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

அப்படி என்ன பயம் ?
"கட்டுமானத் தொழில் மொத்தமா கவுந்தடிச்சு படுத்துருச்சு.
அதை நம்பின குடும்பங்கள் நடு வீதிக்கு வந்தாச்சு.
மற்ற தொழில்களும் கொஞ்சம் "ரிஸ்செசன்" பூதத்திடம் அடி உதை வாங்கிக்கொண்டு இருக்கு.
வேருவழியில்லாம நிறைய சொந்த ஊர் திரும்பியாச்சு."

எங்கள் நிறுவனமும் செலவுகளை குறைக்க புதிய வழிகளைத் தேடிக்கொண்டு இருக்கிறது. புதிதாக ஆட்களை பணியில் சேர்க்க தடை போடப்பட்டிருக்கிறது. இருப்பினும் இதுவரை யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை என்பது ஆறுதல்.


பிள்ளைகளின் கல்வியாண்டு முடிந்ததும் மேலும் நிறையப்பேர் ஊர் திரும்பப்போவதாக சொல்கின்றனர். "அந்த பள்ளியில 3000 பேர் T.C. கேட்டு மனு கொடுத்திருக்காங்களாம்", "இந்த பள்ளியில 7500 பேர் T.C. கேட்டு மனு கொடுத்திருக்காங்களாம்" போன்ற செய்திகள் பரவலாக பேசப்படுகிறது.

இப்பொழுதே பல அடுக்குமாடிக் கட்டிடங்களில் "To-Let" போர்டு வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் இந்த போர்டு மிகவும் அரிதாகக் காணப்பட்டது. வான் தொட்டிருந்த வீட்டு வாடகைகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாய் குறையத் துவங்கியுள்ளன. ஆனால், குடியேரத்தான் ஆளில்லாமல் போய்விடும் போல.

கல்வியாண்டு இந்த மார்ச் இருபது திகதியோடு முடிகிறது. அதன்பின்னர்தான் "ரிஸ்செசன்" பூதத்தின் விளைவுகள் முழுதாய் தெரியவரும் என்கிறார்கள்.

இப்போது பதிவின் முதல் வரியைப் பாருங்கள்.

நன்றி.


Saturday, March 7, 2009

உணவின் உருவங்கள்

ரொம்ப தாகமா இருக்கேன்னு வந்தா தண்ணி வரலையே....என்ன செய்ய ?கவலைப்படாதீங்க,
வாங்க பழச்சாறு சாப்பிடலாம் ...

கொஞ்சம் கனமா இருக்கு ஒரு கை பிடிக்கலாமே...

அச்சச்சோ, மின்சாரம் இல்லையே இனி கையாலேயே பிழியனுமா .


பழச்சாறு வேணும்னா எல்லோரும் வரிசையா வாங்க

யாருப்பா அங்க அரட்டை அடிச்சிக்கிட்டு இருக்கறது.. வந்து வேலையப்பாருங்கயாருக்காவது இதை வாசிக்கத் தெரியுமா ?
மேக்கப் முகத்துக்கு செஞ்சா பரவாயில்லை, இப்படியெல்லாம் உள்ள இறங்கி
குளிக்கக் கூடாதும்மா..


எத்தனை நாளைக்குத்தான் நீங்க எங்களைக் கடிப்பீங்க. ஒரு தடவை நாங்க
கடிக்கறோம். ஹம்..இப்படித்தானே எங்களுக்கும் வலிக்கும்.
என்னையும் யாரும் கடிக்காதீங்க..இல்லை அவ்வளவுதான்


ச்சீ..ச்சீ.. அசிங்கம் அசிங்கம் . மாத்திரை வேண்டாம்னா
சொல்லவேண்டியதுதானே.


ஒரு பட்டாம்ப்பூச்சி ஆப்பிள் சாப்பிடுகிறது..
இதுக்குமேல அறுத்தா..க்ர்ர்ர்ர்!

ஓகே.ஓகே..வுடு ஜூட் !!Monday, March 2, 2009

ஏன் இப்படி?

ஒரே குத்துதான் குத்தினாள்
அவன் வலியில் துடித்தான்
கத்தினான், கதறி அழுதான்

கனப்பொழுதில் எல்லாம்
நடந்தேறியது
ஏன் இப்படி?
எதற்கிந்த கொடூரம்
கொஞ்சமும் இரக்கமில்லாமல்


உதவ முடியாமல்
செய்வதறியாமல்
உறைந்து போய்
நான் நிற்க

"பீஸ் வெளியில கட்டிடுங்க"
என்றாள் எங்கள் ஐந்து
மாதக் குழந்தைக்கு
தடுப்பூசியிட்ட நர்ஸ்!!

அவளைத் திட்டிக்கொண்டே
பணத்தைக் கட்டிவிட்டு
வருவதற்குள் குழந்தை
வலி மறந்திருந்தான்
வழமையான புன்முறுவல் பூத்தான்
எனக்கும் வலி குறைந்தது.


பிறக்குமுன் செய்யும் குறும்பு!

குழந்தைகள் கருவறையில் என்ன செய்வார்கள் என்று ஒரு கற்பனை மிகவும் ரசித்தேன்.


டிஸ்கி: மின்னஞ்சலில் வந்தது.

Friday, February 27, 2009

பழக்கூடைவிடுமுறையில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடும் நாளிலிருந்து மனதில் ஒரு குதூகலம், மகிழ்ச்சி வந்து தங்கிவிடும். பிரயாணம் செய்யும் நாள் நெருங்க நெருங்க அவ்வுணர்வு அதிகரித்து ஊர் சேர்கையில் இரட்டிப்பாகிவிடும். இது ஒவ்வொரு முறையும் நான் அனுபவிப்பது, அடிக்கடி பயணித்தாலும் கூட!

இந்தமுறையும் இவை எல்லாம் அனுபவித்து திருப்பூர் சென்று திரும்பியிருக்கிறேன். அதுசார்ந்த சில அனுபவங்களும் செய்திகளும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.


"பழசா புதுசா?"
முதல் முறையாக சென்னை தவிர்த்து, பெங்களூர் வழியாக சென்றேன் (துபாய் - பெங்களூர் - கோயம்புத்தூர் ). பெங்களூர் புதிய விமான நிலையம் எப்படி இருக்கிறது எனப் பார்க்க ஆர்வத்தோடு சென்றேன், ஓரளவு வசதியாகத்தான் இருந்தது, பாராட்டுக்கள். ஆனால் அதன் உள்-கட்டமைப்பு, குன்றிய வெளிச்சம் மற்றும் தேர்வு செய்த நிறங்களின் காரணத்தினால் எனக்கு என்னவோ ஒரு பழைய கட்டிடம் போலவே தோன்றியது.

"திகில்"
திருப்பூர், நான் சைக்கிளிலும் பைக்கிலும் சுற்றித் திரிந்த நகரம் என்றாலும், இம்முறை பைக் ஓட்டும்போது கொஞ்சம் திகிலாக இருந்தது. போக்குவரத்து நெரிசல் வழமைபோல் இருக்கிறது அது மாறவில்லை.
தாறுமாறாக ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதா, இல்லை தெருக்கள் குறுகி விட்டதா இல்லை வண்டிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா, விளங்கவில்லை.

" திருப்பூர் ரோட்டுல வண்டி ஓட்டுறது கொஞ்சம் குஷ்டமப்பா ச்சீ..கஷ்டமப்பா!! தனி மாவட்டமா அறிவிச்சாச்சு, இனிமேலாவது போக்குவரத்து நிலைமைய சீர் செய்வாங்களா?"


"வசூல் தளபதிகள்"
தனி மாவட்டம் என்றவுடன் திருப்பூர் முழுக்க வைத்திருந்த "மாவட்ட துவக்க விழா" விளம்பர பலகைகள்தான் நினைவுக்கு வருகிறது. தளபதி(?) ஸ்டாலின் வருகிறாராம். மேட்டர் என்னவென்றால் தளபதி வருகிறார் பராக் பராக் என்று சொல்லி ஒவ்வொரு கம்பெனியிலும் வசூல் வேட்டை நடக்கிறது. குறைந்தது ரூ.10,000/-. பெரிய கம்பெனி என்றால் கன்னாபின்னா வென்று தொகை அதிகரிக்கும்.

"யாரு காசுல யார் கொண்டாடுறது? என்ன கொடுமை சரவணா இது?"

"தில்லுமுல்லு டீச்சர்"
பள்ளியில் இரண்டாவது ரேங்க் வாங்கும் பையன், முதலிடத்தை பிடிக்க என்ன யோசனை சொல்வோம்? "அவன் செய்யும் சிறு தவறு என்ன என்பதை கண்டறிந்து, திருத்திக்கொள்ள வழி செய்வோம்" இல்லையா? அனால் எங்களூரில் ஒரு டீச்சர் தன் மகன் முதலிடம் பிடிக்க இன்னொரு சுலபமான முறையை கையாள்கிறார்.

மகனின் வகுப்பு ஆசிரியரை எப்படியோ சரிசெய்து வகுப்பில் முதலிடம் பிடிக்கும் பெண்ணுக்கு மதிப்பெண்களை குறைக்கச் செய்கிறார் (எப்பிடி ஐடியா சோக்காக்கீதா?).

அந்த முதலிடம் பிடிக்கும் பெண் எங்கள் உறவுக்காரப் பெண். பள்ளி தலைமையிடம்
இந்த தில்லிமுல்லு பற்றி ஒரு முறை முறையிட்டும் ஆசிரியர்கள் திருந்தவில்லை.
நான் ஊரில் இருந்தபோது "தில்லு முல்லு" பற்றி தலைமை ஆசிரியருக்கு மேலும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்கள், பயனளிக்குமா தெரியவில்லை.


"பயன்தரா வசதிகள்"
எப்படியோ சொந்தபந்தங்களைப் பார்த்துவிட்டு, நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு விடுமுறை முடிந்து கிளம்பினோம். கோவையிலிருந்து ஷார்ஜா வருவதாய் திட்டம். அதிகாலை 3:30 விமானத்திற்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்து பயணச்சீட்டு, லக்கேஜ் சோதனை, சுங்கம் என அனைத்து formalities முடித்துக்கொண்டு காத்திருப்பு அறையில் அமர்ந்தபோது மணி 1:30. ஷார்ஜாவில் பனிமூட்டம் காரணமாக விமானம் காலை 6:15 மணிக்குத்தான் கிளம்பியது, ஆக ஐந்து மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. "இதுல மேட்டர் இன்னான்னா, ஒரு காபி டீ சாப்பிடக்கூட வசதி இல்லை. நிலையத்தின் வெளிப்புற (யாருமே காத்திருக்காத) ஹாலில் "Coffee Day" மற்றும் சில கடைகள் உள்ளன ஆனால், விமானத்திற்காக காத்திருக்கும் பயணிகளுக்கு உள்ளே பச்சை தண்ணி மட்டும்தான், நிர்வாகம் இத்துனூண்டு கூட யோசிக்காதா? "நன்றி!


Monday, February 23, 2009

வாழ்த்துக்கள் எ.ஆர்.ரகுமான் !!

வணக்கம் வந்தனம்..!!

விடுமுறையில் சொந்த ஊரான திருப்பூருக்கு சென்றிருந்ததால்
சில நாட்களாக வலைப்பூக்கள் பக்கம் வரவில்லை..(இல்லாட்டி மட்டும் ரொம்ப எழுதுவியோ? ஹ்ம்ம். உஸ்ஸ்ஸ்ஸ்!! ).

இன்று மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். காரணம் அனைவரும் அறிந்ததே. எ.ஆர்.ரகுமான் அவர்கள் தமிழகம் தாண்டி...இந்தியா தாண்டி அமெரிக்க நாட்டிலும் தனது வெற்றிக்கொடி நாட்டி இரண்டு ஆஸ்கார் விருதுக‌ளைப் பெற்றுள்ளார்.

“ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்” ப‌ட‌த்தில் சிற‌ப்பாக‌ இசை அமைத்த‌த‌ற்காக‌வும், “ஜெய் ஹோ” என்ற‌ அந்த‌ப் ப‌ட‌த்தின் பாட‌லுக்காக‌வும் இர‌ண்டு ஆஸ்க‌ர் விருதுக‌ளைப் பெற்று சாத‌னை ப‌டைத்துள்ளார்.


இந்தத் திரைப்படத்தை விட ரகுமான் மிகச்சிறப்பாக இசையமைத்த படங்களும் பாடல்களும் இருந்தாலும், அவரை மேற்கத்தியர்களுக்கு வெளிச்சமிட்டு காட்ட உதவியதில் மகிழ்ச்சி.


விருதைப் பெற்றுக்கொண்டு அவர் பேசும்போது "எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே" என்ற வழமைப்போல் பணிவாய்ப் பேசினார். நெகிழ்ந்தேன்.!!

ரகுமானுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!!


Saturday, January 31, 2009

தமிழா..இன்னுமா தூங்குகிறாய்?

தோழா முத்துக்குமரா,
தூங்கிக்கொண்டிருக்கும் தமிழர்களை சாட்டையால் அடித்து எழுப்பிவிட்டு நீ தூங்கிவிட்டாயே.
தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:
பதிவுலக நண்பர்கள் இதை வெளியிடுங்கள். மற்ற நண்பர்கள் இதை மெயிலில் பரப்புங்கள். குறைந்த பட்சம் இதை முழுமையாகப் படியுங்கள்.

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன், அநீதிகளுக்கெதிரான

உங்கள் சகோதரன்,

கு.முத்துக்குமார்,
கொளத்தூர், சென்னை-99


அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.


Sunday, January 18, 2009

உலகின் உச்சியில்...


உலகின் உச்சியில் வாழ விருப்பமா?

படத்தை பார்த்துவிட்டு...இருக்கின்ற 160 மாடியில எதுவேனும்னு சொல்லுங்க..!!

(படங்களை முழுதாய் பார்க்க அதன் மீது சொடுக்கவும்).
சமீபத்தில் புதிதாய் திறக்கப்பட்ட "துபாய் வணிக வளாகம் (Dubai Mall)" சென்றிருந்தோம்.

அதன் அருகாமையில்தான் உலகத்தின் மிக உயரமான கட்டிடமான இந்த "Burj Dubai" இருக்கிறது. விடுவோமா..முன்னால் நின்று கிளிக்கு..கிளிக்கு'னு கிளிக்கி விட்டேன். எனது Canon கேமிராவில் படத்தை தைக்கும் "Photo-stitching" முறையில் நான்கு படங்களாக எடுத்து, ஒன்றாக்கி இருக்கிறேன் (சோக்காக்கீதா?) .கட்டிடத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்.

மேலும் ஒரு புகைப்படம், காரில் செல்லும்போது எடுத்தது... வித்தியாசமாக வந்துள்ளது.
அன்று துபாய் வணிக வளாகத்தில் எடுத்த மேலும் சில படங்கள் உங்கள் பார்வைக்குநன்றி