கொஞ்சம் திகிலாத்தாங்க இருக்கு.
தினமும் காலைவேளையில் ஷார்ஜா - துபாய் ரோட்டில் ஆயிரக்கணக்கான கார்கள் செல்லும். அந்த நெரிசலில் நாங்கள் அலுவலகம் செல்ல குறைந்தது நாற்பது நிமிடங்கள் ஆகும். 5:30 க்கு துவங்கினால் 6:10 க்கு சென்று சேர்வோம்.
நேற்று காலை 5:30 க்கு துவங்கி 5:45 க்கெல்லாம் சேர்ந்துவிட்டோம். "ஹையா மகிழ்ச்சிதானே?" என்கிறீர்களா. அதுதான் இல்லை. வாகனங்கள் குறைந்து காணப்பட்டவுடன் பயம்தான் வந்தது. நண்பர் ஒருவர் "இன்றிலிருந்து பள்ளிகளில் இறுதித் தேர்வு ஆரம்பம், அதனால் நேரம் மாற்றியிருப்பார்கள்." என்றார். அதனால்தான் வாகன நெரிசல் குறைந்திருப்பதாக அவர் கூறியது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
அப்படி என்ன பயம் ?
"கட்டுமானத் தொழில் மொத்தமா கவுந்தடிச்சு படுத்துருச்சு.
அதை நம்பின குடும்பங்கள் நடு வீதிக்கு வந்தாச்சு.
மற்ற தொழில்களும் கொஞ்சம் "ரிஸ்செசன்" பூதத்திடம் அடி உதை வாங்கிக்கொண்டு இருக்கு.
வேருவழியில்லாம நிறைய சொந்த ஊர் திரும்பியாச்சு."
எங்கள் நிறுவனமும் செலவுகளை குறைக்க புதிய வழிகளைத் தேடிக்கொண்டு இருக்கிறது. புதிதாக ஆட்களை பணியில் சேர்க்க தடை போடப்பட்டிருக்கிறது. இருப்பினும் இதுவரை யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை என்பது ஆறுதல்.
பிள்ளைகளின் கல்வியாண்டு முடிந்ததும் மேலும் நிறையப்பேர் ஊர் திரும்பப்போவதாக சொல்கின்றனர். "அந்த பள்ளியில 3000 பேர் T.C. கேட்டு மனு கொடுத்திருக்காங்களாம்", "இந்த பள்ளியில 7500 பேர் T.C. கேட்டு மனு கொடுத்திருக்காங்களாம்" போன்ற செய்திகள் பரவலாக பேசப்படுகிறது.
இப்பொழுதே பல அடுக்குமாடிக் கட்டிடங்களில் "To-Let" போர்டு வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் இந்த போர்டு மிகவும் அரிதாகக் காணப்பட்டது. வான் தொட்டிருந்த வீட்டு வாடகைகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாய் குறையத் துவங்கியுள்ளன. ஆனால், குடியேரத்தான் ஆளில்லாமல் போய்விடும் போல.
கல்வியாண்டு இந்த மார்ச் இருபது திகதியோடு முடிகிறது. அதன்பின்னர்தான் "ரிஸ்செசன்" பூதத்தின் விளைவுகள் முழுதாய் தெரியவரும் என்கிறார்கள்.
இப்போது பதிவின் முதல் வரியைப் பாருங்கள்.
நன்றி.

14 comments:
டெரர்ராதான் இருக்கு
\\அதன்பின்னர்தான் "ரிஸ்செசன்" பூதத்தின் விளைவுகள் முழுதாய் தெரியவரும் என்கிறார்கள். \\
ஓஹ்!
திக் திக் திக்
வாங்க ஜமால்.
//நட்புடன் ஜமால் said...
டெரர்ராதான் இருக்கு//
உங்க ஊர்ல நிலைமை எப்படி இருக்கு?
நிலைமை சீக்கிரம் சரியாக வேண்டுமென்பதே எல்லோர் விருப்பமும்.
இது பற்றி நான் எழுதிய பதிவு உங்கள் பார்வைக்கு...
துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…
http://sarukesi.blogspot.com/2009/02/blog-post_26.html
வாங்க கீழை ராஸா
முதல் வருகைக்கு நன்றி
// கீழை ராஸா said...
நிலைமை சீக்கிரம் சரியாக வேண்டுமென்பதே எல்லோர் விருப்பமும்.//
இதுவும் கடந்து போகும்னு நம்பிக்கை வைப்போம்
நிஜமாலுமே திகிலா தான் இருக்கு!
நல்லா கெலப்புராங்கய்யா பீதிய....
நல்லா இருங்க ...
@வால்பையன்,
@Ravee (இரவீ )
வருகைக்கு நன்றி
நிலைமை இவ்வளவு தூராமா...!
ஹேமா said...
நிலைமை இவ்வளவு தூராமா...!
//
வாங்க ஹேமா,
இதுக்கு மேல மோசமாகாம இருக்கணும்னு வேண்டுறோம்.
எல்லா இடத்திலேயும் இப்போது Deflation ஆதிக்கம்தானே.
இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ?
//வான் தொட்டிருந்த வீட்டு வாடகைகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாய் குறையத் துவங்கியுள்ளன. ஆனால், குடியேரத்தான் ஆளில்லாமல் போய்விடும் போல.
வாங்க தமிழ்நெஞ்சம்
//தமிழ்நெஞ்சம் said...
எல்லா இடத்திலேயும் இப்போது Deflation ஆதிக்கம்தானே.
இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ?
//
இந்தியாவில் Inflation 13 இல் இருந்து 2 சதவிகிதத்திற்கு வந்துவிட்டது.
நுகர்வோரின் வாங்கும்திரன் குறைந்திருப்பதையே இது காட்டுகிறது. பொருட்களின் தேவை குறையக் குறைய அதன் விலையும் குறையும்தானே.
கொஞ்சம் திகிலாத்தாங்க இருக்கு.. எப்ப என்ன நடக்குமோனு பயமாத்தாங்க இருக்கு...
நன்றி அமுதா
Post a Comment