Monday, October 20, 2008

பிஞ்சு விரல்கள்


  • பௌர்ணமி ஒளியில் கடற்கரை மணலில், தென்றலின் தீண்டலில் நீண்டநேரம் அமர்ந்திருத்தல்.
  • கல்கி அவர்கள் வருணித்த வீர நாராயண ஏரியின் அழகை மீண்டும் மீண்டும் யோசித்து பார்த்து இன்புறுதல்.
  • மாலை நேரத்தில் மழை பெய்யும்போது அம்மா செய்து கொடுக்கும் வெங்காய பஜ்ஜியை சுடச்சுட சாப்பிடுவது.
  • கொடைக்கானலில், சில்லென்ற குளிரில் காலை பொழுதில் நடந்து செல்வது.
  • நண்பர்களுடன் சேர்ந்து விடிய விடிய Age Of Empires விளையாடுவது.
  • அர்த்தராத்திரியில் Ice Cream சாப்பிடுவது.
  • அலுவலகத்தில் Pressure இல்லாத Project மற்றும் குழப்பம் இல்லாத Team அமைவது.
  • வார விடுமுறையன்று பத்து மணிவரை தூங்குவது. தவறி ஆறு மணிக்கு விழித்தால் கோவில் சென்று வருவது.
இது போன்ற நிறைய விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன....





சென்ற மாதம் பிறந்த எங்கள் குழந்தை விஷ்ணுவை காணும் வரை..! அவன் மென்மையான சின்னஞ்சிறிய விரல்களை வருடும் வரை. !


அழுதாலும், தூங்கும் போது முனகினாலும் சந்தோசம் கொடுக்கும் பிஞ்சு குரலை கேற்கும் வரை..!

பிறந்து ஒரு நாள் வரை கையில் எடுக்காமல் பழகியவர்கள் தூக்குவதை பார்த்து கற்றுக்கொண்டு இரண்டாம் நாள் மிக பொறுமையாக என் கையில் எடுத்து அமர்ந்தபோது பொங்கிய சந்தோசம் வரை...!

குழந்தைக்கு முன் மற்ற சந்தோசமெல்லாம் மறந்து போனது எனக்கு.




7 comments:

tamilraja said...

உங்கள் இருவரின் கைகள்
மனிதனுக்கும்,இறைவனுக்குமான தொடர்பு போல் இருக்கிறது!

கணினி தேசம் said...

வாங்க tamilraja,

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். அது மிகச்சரியான கூற்றுதான்.
தாங்களும் அதையேதான் எழுதிருக்கின்றீர். :-)))

தங்கள் பின்னூட்டதிருக்கு நன்றி.

ரிதன்யா said...

அட எப்படிங்க,
இதே போல் என் குட்டி மகளின் கைகளும், என் கைகளும் சேர்த்து இதே போல் ஒரு புகைப்படம் என்னிடமும் உள்ளது,

இப்போதும் என் மகளிடம் காட்டி சந்தோசம் கொள்வதுண்டு.

கணினி தேசம் said...

வாங்க "கோவை" ரிதன்யா !
பின்னூட்டத்திற்கு நன்றிங்க !

//அட எப்படிங்க,
இதே போல் என் குட்டி மகளின் கைகளும், என் கைகளும் சேர்த்து இதே போல் ஒரு புகைப்படம் என்னிடமும் உள்ளது//

நாம ஒரே ஊர்க்காரங்க இல்லீங்களா அதான் !

pudugaithendral said...

உணர்வுகளை அருமையாக பதித்திருக்கீறிர்கள்.

வாழ்த்துக்கள்

இந்த வர்ட் வெரிபிகேஷனை தூக்கிடுங்களேன்.

கணினி தேசம் said...

வாங்க புதுகைத் தென்றல் !

பின்னூட்டத்திற்கு நன்றி.

// இந்த வர்ட் வெரிபிகேஷனை தூக்கிடுங்களேன்.///
எப்படி ? முயற்சி செய்கிறேன் .

கணினி தேசம் said...

புதுகைத் தென்றல் !

கண்டேன் Blog Setup' இல் !
தூக்கினேன் வர்ட் வெரிபிகேஷனை !

இனி கருத்துக்களை சுலபமா சொல்லுங்க...சொல்லிக்கிட்டே இருங்க !! :-)