Wednesday, November 5, 2008

சாதனை வாரம்





சைனா (Saina Nahiwal) இந்தியாவின் புதிய சாதனையாளர். ஆந்திரா ஹைதிராபாத் நகரைச்சேர்ந்த, பதினெட்டு வயதேயான இவர் சிறகுப்பந்தாட்ட(Badminton) விளையாட்டில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

மூன்று நாற்கள் முன்பு "World Junior Badminton Championship" போட்டியில் வெற்றிபெற்றார். இத்தகைய போட்டியில் இந்தியர் வெல்வது இதுவே முதல்முறை.

இது எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்பதாலும், நான் ஓரளவுக்காவது விளையாடிய விளையாட்டு எம்பதாலும் (எதுக்கு இந்த விளம்பரம்??) இந்த செய்திமிகவும் மகிழ்ச்சியை தந்தது.


Gagan Narang :
இவர் சுடுவதில் வல்லவர் (அதில்லப்பா...துப்பாக்கி சுடுற போட்டியில !!).
தாய்லாந்து தலைநகர் பங்காக்கில் நடைப்பெற்ற உலகக்கோப்பைபோட்டியில் கலந்துகொண்டு 10 Metre Air Rifle பிரிவில் வென்று சாதனைசெய்துள்ளார்.

பி.கு இவரும் ஆந்திரா மாநிலம் ஹைதிராபாத் நகரைச்சேர்ந்தவரே !!

ஒருபுறம் ஒலிம்பிக்கில் தங்கம் இப்போது உலகக்கோப்பை !! ( நல்லாத்தான் சுடுறாங்க!! )

சச்சினும் டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்தது அனைவரும் அறிந்தசெய்தி.



இவர்கள் அனைவரையும் விட முக்கியமான சாதனையாளர் நம்ம சதுரங்கத்தின் உலக-நாயகன் ( சொல்லலாம்ல?) விஸ்வநாதன் ஆனந்த் தான். ஜெர்மனிநாட்டில் போன் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ருஸ்ய வீரர் விளாடிமிர் கிராம்னிக்கை (Vladimir Kramnik) வென்று சதுரங்கத்தில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளார்.

எனக்கு சதுரங்கம் ஆடத்தெரியாது என்றாலும் ஆனந்த் பற்றிய செய்திகளை தேடிப்படிபேன். (ஒரு ஊர்க்காரப்பய பாசந்தான்!!)

ஆகமொத்தம் விளையாட்டை பொறுத்தவரை இந்த வாரம் சாதனை வாரம் !!!.


3 comments:

- இரவீ - said...

வாருங்கள் இந்த வாரம் நாம் ஏ வோ இ யில் சாதனை புறிவோம்...

Tech Shankar said...

வாழ்த்துக்கள் - சாதனை புரிந்தவர்களுக்கும் பதிவிட்ட உங்களுக்கும்

கணினி தேசம் said...

//Sharepoint the Great said... //

&

//ரவி //


பின்னூட்டத்திற்கு நன்றி.

இந்தியர்கள் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுக்களிலும் சோபிப்பது நல்ல முன்னேற்றமே