முதலில் Positives பார்ப்போம்.
கேள்வி கேட்க ஆள் இல்லாததால், நன்றாக ஊர் சுற்றலாம். ஓரிரு நாட்கள் வீட்டின்பக்கம் வராமலும் சுற்றலாம். நண்பர்களுக்காக நிறைய நேரம் ஒதுக்கலாம். வீட்டிலேயே பார்ட்டி வைக்கலாம். நமது சமையல் கைவண்ணத்தை நன்பர்களிடம் காட்டலாம். தொலைக்காட்சியில் அறுவை-நாடகங்கள் தவிர்த்து பிடித்த நிகழ்ச்சிகள் பார்க்கலாம். முக்கியமாக Sports மற்றும் English channels பார்க்கலாம்.
வீட்டில் தனியாக இருப்பதால் சண்டை சச்சரவு ஏதுமின்றி அமைதியாக இருக்கும். அலுவலகத்தில் வேலைநேரம் முடிந்தவுடன் "கிளம்பியாச்சா?" என்ற தொலைப்பேசி அழைப்பு இல்லாதலால் பணிகளை செவ்வனே முடித்து பனி-உயர்வு பெற முயற்சி செய்யலாம்.
இப்படி சிலபல விஷயங்களுக்கு சௌகர்யாம்தான்.
சரி, இனி Negatives என்னவென்று பார்ப்போம்
என்னதான் சந்தோசமாக ஊர் சுற்றினாலும், திரும்பி வந்து வீட்டின் கதவை திறக்கும்போது "யாருமில்லா வீட்டினுள் செல்லத்தான் வேண்டுமா?" என்ற எண்ணம். மீறி செல்லும்போது ஏற்படும் வெறுமையும் கோபமும்.
பணியிலிருந்து திரும்பி வீட்டினுள் நுழைந்தவுடன் கிடைக்கும் புன்னகை கலந்த காபி (கிடைக்காது! ). கேண்டினில் சாப்பிடும்போது "பார்த்து பார்த்து செய்து கொடுப்பாளே! திரும்ப வர்ற வரைக்கும் இதுதானா?" என்ற சலிப்பு. அலுவலகப்பணியில் சிக்கலோ அல்லது வேறு கவலை ஏதுமிருந்தால், தோள்சாய்த்து ஆறுதல் கூற ஹூ...கும். தினமும் நிகழும் சிறுசிறு சண்டைகளும், கோபங்களும், ஆறுதல்களும் இன்றி தனிமையில் இருப்பது கொடுமை.
தனிமையிலே இனிமை காண முடியமா? முடியாது என்றே தோன்றுகிறது.
என்னதான் தினமும் இணையத்தின்மூலம் பேசினாலும், செய்திகளைப் பரிமாறிக் கொண்டாலும்...சிரமம் சிரமம்தான்.
உங்களுக்கு தோன்றும் Postives மற்றும் Negatives ஐ பின்னூட்டமிடுங்கள்
நன்றி !
5 comments:
இந்த பதிவு ரொம்ப டெக்னிகலா இருக்கு -
அதனால அப்பீட் ஆய்கிறேன்.
(பாட்டில் நைனா.... ஒன்ன்ன்னும் புரியல !!!)
வொண்ணும் மெர்ஸலாவத, கல்யாணம் கட்டிகினா எல்லாம் புரியும்.
சரியான உண்மையான பதிவு
வாங்க வடிவேலன்,
பின்னூட்டத்திற்கு நன்றி.
//சரியான உண்மையான பதிவு //
அனுபவம் பேசுதுங்கோ... வேற ஒன்னும் இல்ல. :-)
தலைப்பே விவகாரமாயிருக்கே ...
ரொம்ப நாள் ஆச்சி போல
சீக்கிரம் எழுதுங்கோ...
Post a Comment