Tuesday, November 25, 2008

பழக்கூடை

ஐக்கிய அரபு நாட்டில் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகம், குறிப்பாக கேரளா மாநிலத்தவர்கள் அதிகமாக வாழ்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் எவ்வளவு சதவிகிதம் இருப்பார்கள்? சமீபத்தில் இதற்கான விடை கிடைத்தது... பார்த்ததும் மலைத்துப்போனேன் !! (அம்மாடியோவ்.. இத்தினி பேரா ??) .

நீங்களும் பாருங்கள்.



உள்நாட்டு மக்களைவிட மூன்று மடங்கு இருக்கிறார்கள். டவுன்பஸ் புடிச்சி வந்துருவாங்களோ!! பழக்கூடையில் இது திராட்சைக்கொத்து (Numbers அதிகமா இருக்கும்ல அதான்!)


--------------==========**********==============-----------------

என்னதான் பொருளாதார பிரச்சினைகள் வந்தாலும், வேலையில்லா திண்டாட்டம் வந்தாலும் போனாலும், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்கவே முடியாது. கண்டிப்பாக!! பொறுமை!! பொறுமை!! அதற்குள் ஆச்சர்யப்படாதீர்கள்.

மக்கள்தொகை வளர்ச்சியில்தான் !! கூடிய விரைவில் சீனர்களை ஓரம்கட்டிவிட்டு முதலிடத்தை அடைந்துவிடுவோம் (ம்க்கும்... இதெல்லாம் அரைச்ச மாவுதானே என்ன புதுசு??) !!

அந்த சாதனையோடு பார்வையற்றோர் எண்ணிக்கையிலும் முதலிடம் பிடித்துவிடுவோம் என்பது வருத்தத்திற்குரியது. அதைத்தடுக்கும் வழியை நண்பர் நந்தா அனுப்பினார்(அவருக்கு நன்றி!!)
.


இந்தியாவின் மக்கள்தொகை : 110 கோடி

தினமும் பிரப்போரின் எண்ணிக்கை : 86,853

தினமும் இறப்போரின் எண்ணிக்கை : 62,389
பார்வையற்றோரின் எண்ணிக்கை : 6,82,497


இறப்பவர்களின் கண்கள் தானம் செய்யப்பட்டால், வெறும் பத்து நாட்களில் அனைவருக்கும் பார்வை கிடைத்துவிடும். நல்ல விசயம்தானே, உடனே செய்துவிடலாமே.
இவ்வளவு சுலபமா? அதுதான் இல்லை!

கொஞ்சம் அலசினால், பல தடைகள் கண்முன்னே தலைவிரித்தாடும். தானம் செய்யும் வழிமுறைகள் என்ன என்பது, மிகக்குறைவான தொகுதியினருக்கே தெரியும். இது குறித்த சட்டங்கள் என்னென்ன? இருந்தால், ஏதாவது சிக்கல்கள் உண்டா? இவை அனைத்திற்கும் மேல், மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கை! "எந்த கடவுளும் பிறருக்கு தானம் செய்வது தவறு எனக்கூறியதில்லை. "


ஹித்தேந்திரனுக்கு பிறகு மக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் பற்றிய தெளிவு கூடியிருக்கிறது. இருப்பினும் முழுமையான விழிப்புணர்ச்சி இல்லை. இதற்கு உதாரணம் "சமீபத்தில் உயிருடன் இருக்கும் குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்ததுதான்".


மருத்துவத்துறையில் இந்தியா வெளிநாட்டவர்கள் கூட தேடிவந்து பார்க்குமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் மிகுதியாக உள்ளன. இந்த மருத்துவமனைகள் ஊரெங்கும் விளம்பரப் பலகைகள் மற்றும் சாலை தடுப்புகளில் விளம்பரம் செய்கிறார்கள். இவற்றுடன் உடல் உறுப்பு தானம் பற்றிய வழிமுறைகளையும் சேர்த்து உதவவேண்டும்.

உயிரிழப்பு நிகழும் அந்த கடினமான நேரத்தில் தானத்தைப்பற்றிய நடவடிக்கைகள் செய்வது மிகசிரமான ஒன்றுதான் என்றாலும், அப்படி தானம் செய்வதால் கிடைக்கும் பயனோ மிகவும் பெரியது. பழக்கூடையில் இது பழாப்பலம்.!!
--------------==========**********==============-----------------

அதிகமான் வில்லனாக நடித்துக்காட்டு என யாரைக்கேட்டாலும் உடனே அவர்கையைப் பிசைந்துகொண்டே "டேய் பக்கிரி, டேய் ரங்கா.! எல்லாரும் இங்கவாங்கடா..." என வசனம் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவிற்குபிரபலமானவர் திரு.நம்பியார் அவர்கள். எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் இவரை அனைவருக்கும் பிடிக்கும். திரைப்பட நிகழ்வுகள் நிழலா நிஜமா என பிரித்துப்பார்க்க தெரியாத மக்கள், அவர் திரையில் செய்யும் வில்லத்தனத்தைக்கண்டு கண்டபடி திட்டித் தீர்ப்பார்கள். "நம்பியார் கிட்ட புடிச்சி கொடுத்துருவேன், ஒழுங்கா சாப்பிடு" என குழந்தைகளை பயமுறுத்தக்கூட அவரை இழுப்பார்கள். அவற்றை நேரில்கண்ட அனுபவம் எனக்குண்டு.

ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு நல்ல மனிதராகவே வாழ்ந்தார். அவரின் ஐய்யப்ப பக்தி அனைவரும் அறிந்தததே. வருடாவருடம் குருசாமியாக சபரிமலை சென்று வருவார். அவரின் மறைவு, இந்த பழக்கூடையில் பாகற்காய் !!

--------------==========**********==============-----------------





7 comments:

- இரவீ - said...

எனக்கு பல்-பழ சாரு பிடிக்கும் என்றாலும்...
தனி தனியாக சாப்பிடும் போது - அதன் சுவை உணர்வு அதிகம்...
இது என் நிலை ...

திராட்சை - அப்ப இது நம்ம நாடு.
அது சரி - நீங்க அதிகம் விஜகாந்த் படம் பார்க்கும் ஆளா?
புள்ளிவிவரம் பலமா இருக்கு ...
எவ்ளோ மக்கள் வந்தாலும் பரவாயில்ல ... அதான் நிலவுல குடிச போட்டுடோம்ள.

பலாபழம் - நாம இதுவரைக்கும் என்ன பண்ணிருக்கோம்? யோசிச்சேன் ... யோசிக்கறேன் ...

பழகூடயில பாகற்காயா??? அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் ...

கணினி தேசம் said...

வாங்க ரவி,

//அது சரி - நீங்க அதிகம் விஜகாந்த் படம் பார்க்கும் ஆளா?
புள்ளிவிவரம் பலமா இருக்கு ...//

விஜயகாந்த் என்ன புள்ளியியல் துறைல்ய குத்தகைக்கு எடுத்துகிட்டாரா என்ன? நாங்களும் சொல்லுவோம்.!!

//எவ்ளோ மக்கள் வந்தாலும் பரவாயில்ல ... அதான் நிலவுல குடிச போட்டுடோம்ள.//
Ground ரூ.2000 தானாமே? அப்படியா?

- இரவீ - said...

//விஜயகாந்த் என்ன புள்ளியியல் துறைல்ய குத்தகைக்கு எடுத்துகிட்டாரா என்ன? நாங்களும் சொல்லுவோம்.!!//

அப்ப நீங்க குமரகாந்தா?

//Ground ரூ.2000 தானாமே? அப்படியா?//

இந்த சலுகை - முதலில் வரும் முப்பது மூணு பேருக்கு மட்டும்,
(முன்பதிவு மற்றும் நாம விவரங்களுக்கு -
கரன்சியுடன் வந்து என்னை கண்டுக்கவும்.)

கணினி தேசம் said...

குசும்பு :-)

கணினி தேசம் said...

உடல் உறுப்பு தானம் தொடர்பாக, தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்கள்.

தெரிந்துகொள்ள, கீழே சொடுக்கவும்.
http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=8883&cls=&ncat=TN

பேசுவதோடு நிற்காமல், செயலிலும் காட்டினால் நன்றாக இருக்கும்.

- இரவீ - said...

இதுமாதிரியான பயன்மிகு தகவல்களை - தனி பதிவாய் வெளியிட்டால் மிக உபயமாக இருக்கும்.

Tech Shankar said...

bitter gourd - aha