Saturday, November 15, 2008

"சோதனைகள்" ஆயிரம்

ஆயிரம் அல்ல பத்தாயிரம் என்று கூட சொல்லலாம்.

எதனால்? எல்லாம் இன்று மாலை நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த ஒரு சிறிய முடிவினால் வந்தது.
அப்படி என்ன முடிவு? வாரணம் ஆயிரம் திரைப்படம் பார்க்கச்செல்வது என்பதே!

அந்த மிகச்சிறந்த திரைப்படத்தை பற்றி எழுதாமல் தூங்குவதில்லை என்று 2:40am மணிக்கு மெனக்கெட்டு எழுதுகிறேன்.


ஆரம்பிக்குமுன் திருவாளர், ஆங்கிலத் திரைப்படங்களுக்கு நிகரான படங்களை தந்து பொதுச்சேவையாற்றும் இயக்குநர் திரு. கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு முதற்கண் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ( சும்மா சொல்லக்கூடாது ஒவ்வொரு Frame-லயும் அசத்தரார்யா ???? ).


படம் வெளியான முதல் நாள். ஆதலால், திரை அரங்கிற்கு தொலைப்பேசியில் அழைத்து அமர்விடங்கள் இருக்கின்றன என்பதை உறுதி செய்துகொண்டோம். "காட்சி நேரம்" இரவு 10:30 மணி.இன்று விடுமுறை நாள் என்பதால் கூட்டத்தை எதிர்பார்த்து 8:30 மணிக்கெல்லாம் அரங்கிற்கு சென்று நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டோம். பின்னர் சென்று உணவருந்திவிட்டு சரியான நேரத்திற்கு திரும்பினோம்.

சரியான நேரத்தில் திரைப்படமும் துவங்கியது... ஒரு மணிநேரம் கழித்து அருகிலிருந்த நண்பன் கேட்டான் "மச்சி கதை எப்போ ஆரம்பிக்கும்?" என்று. கதைக்களம் பற்றிய முன்னோட்டம் சொல்வது போலவே காட்சிகள் முடிவில்லாமல் நகர்ந்ததுதான் காரணம்.

திரைப்படத்தில் இல்லாத கதையைபற்றயோ அல்லது ஒவ்வொரு காட்சியாகவோ இங்கே விமர்சிக்க விரும்பாததால் (முக்கியமா தூக்கம் சொக்குது!) பொதுவான கருத்துக்களை மட்டும் சொல்கிறேன்.

திரைப்படத்தின் கரு "தந்தை-மகன்" சொந்தம் பற்றியது என நினைக்கிறேன், அனால் அதற்கான முயற்சி திரைக்கதையில் துளிகூட காணோம்.
திரைப்படமே சூர்யாவின் Fashion Show போல மட்டுமே இருந்தது. பள்ளி மாணவன், நீளமுடி, அழுத்தமாக வெட்டியமுடி, தாடி வைத்த முகம், தாடி வைக்காத முகம், ஒல்லியான உடல், உடற்பயிற்சி செய்து மெருகேற்றிய உடல், வயதான உருவம், ராணுவ மேஜர் உடை... இதுபோல இன்னும்பல வேடங்கள். கதை ஏதும் இல்லாததால் இந்த்தனை வேடங்களும், சூர்யாவின் கடும் முயற்சியும் வீண்.

திரைக்கதையை இதற்குமேல் யாரும் குழப்ப முடியாது.. முடியவே முடியாது. ஒரு காட்சிக்கும் அடுத்ததுக்கும் ஒற்றுமையே இல்லை. ஒரு காட்சியில் தந்தைதான் இனி வாழ்க்கை என்கிறார். மறுகணமே புதிய காதல், உடனே போதைக்கு அடிமை. மறுகணம் அடிதடி பின் இராணுவம். (உஸ்ஸ்ஸ்...அப்அப்பா.... இப்பவே கண்ணகட்டுதே!!) இன்னும் நிறைய சொல்லலாம்.

திரைப்படத்தின் நடுவே சகிக்க முடியாத ரசிகர்களின் கதறல்கள் கேட்டன "அய்யா போதும், வலிக்குது விட்டுவிடுங்கள்", "இனிமே சினிமாக்கு கூட்டிட்டு வரவேமாட்டேன்" என்றெல்லாம்.


திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் சூரியாவின் உழைப்பு தெரிகிறது.. ஆனால் அத்தனையும் வீனடிக்கப்பட்டுவிட்டது.

(இல்ல... சும்மாதான் கேக்கிறேன், வருஷக்கனக்குல விழுந்து உருண்டு பிரண்டு படம் எடுக்கிறாங்க, கோடிக்கணக்குல செலவழிக்கிராங்கோ, அநியாயத்திற்கு விளம்பரம் செஞ்சு Hype கொடுக்கறாங்கோ, கதை திரைக்கதையப்பத்தி துக்குணூண்டு கூட யோசிக்கவே மாட்டாங்களா? )

திரைப்படத்தில் ஒரு மிகச்சரியான் வசனம் உள்ளது.. இப்படி மனம்நொந்து படத்தை பார்த்ததற்கு அதுவே மருந்தாகவும் அமையும் "Whatever happens, life has to go on" என்பதே.

இதற்கு மேல் எழுத ஒன்றுமில்லை.

நன்றி.


5 comments:

Raveendran said...

இவ்வளவு கதை உங்களுக்கு புரிஞ்சிருக்குரத்தை நினச்சி ரொம்ப பெருமை படுறேன்,

எனக்கு இன்னமும், பின் சீட்டில் இருந்து ஒரு குழந்தை கேட்ட கேள்வி காத கொடயுது ...
- யாரும்மா இது - சூர்யாவா ?.
- நீ ஏம்மா தூங்குற?
- ஏம்மா இன்னும் படம் முடியல?

அது கூட தேவலை, முன் சீட் ஜோடி பட்ட கஷ்டம்... ரொம்ப வேதனை,

சரி சூர்யா படம் - சந்தோசமா எல்லாரும் படம் பாப்பாங்க
நாமளும் சந்தோசமா இருக்கலாம்னு நம்பி வந்திருக்கணும்,...
இந்த ஜோடி சபிச்ச சாபம் - டைரக்டர சும்மா விடாதுன்னு நம்பறேன்.

கணினி தேசம் said...

//இந்த ஜோடி சபிச்ச சாபம் - டைரக்டர சும்மா விடாதுன்னு நம்பறேன்//

அதுமாதிரி ஜோடிங்க நாலு நாளுக்கப்பரமா இதே படத்துக்கு போகலாம். தொந்தரவே இருக்காது. ஏன்ன, யாருமே இருக்கமாட்டாங்க. ஹிஹி.!!

Ravee said...

//அதுமாதிரி ஜோடிங்க நாலு நாளுக்கப்பரமா இதே படத்துக்கு போகலாம். தொந்தரவே இருக்காது. //

இது நல்ல யுத்தியா இருக்கு,
தயவு செஞ்சு போஸ்டர்ல இந்த தகவலை கொடுக்க சொல்லுங்க,
நாலு ஜோடிக்கு - நல்லது செஞ்ச மாறியாவது இருக்கும்.

கணினி தேசம் said...

:-))))))

Sharepoint the Great said...

அடக்கடவுளே!