Friday, February 27, 2009

பழக்கூடை



விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடும் நாளிலிருந்து மனதில் ஒரு குதூகலம், மகிழ்ச்சி வந்து தங்கிவிடும். பிரயாணம் செய்யும் நாள் நெருங்க நெருங்க அவ்வுணர்வு அதிகரித்து ஊர் சேர்கையில் இரட்டிப்பாகிவிடும். இது ஒவ்வொரு முறையும் நான் அனுபவிப்பது, அடிக்கடி பயணித்தாலும் கூட!

இந்தமுறையும் இவை எல்லாம் அனுபவித்து திருப்பூர் சென்று திரும்பியிருக்கிறேன். அதுசார்ந்த சில அனுபவங்களும் செய்திகளும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.


"பழசா புதுசா?"
முதல் முறையாக சென்னை தவிர்த்து, பெங்களூர் வழியாக சென்றேன் (துபாய் - பெங்களூர் - கோயம்புத்தூர் ). பெங்களூர் புதிய விமான நிலையம் எப்படி இருக்கிறது எனப் பார்க்க ஆர்வத்தோடு சென்றேன், ஓரளவு வசதியாகத்தான் இருந்தது, பாராட்டுக்கள். ஆனால் அதன் உள்-கட்டமைப்பு, குன்றிய வெளிச்சம் மற்றும் தேர்வு செய்த நிறங்களின் காரணத்தினால் எனக்கு என்னவோ ஒரு பழைய கட்டிடம் போலவே தோன்றியது.

"திகில்"
திருப்பூர், நான் சைக்கிளிலும் பைக்கிலும் சுற்றித் திரிந்த நகரம் என்றாலும், இம்முறை பைக் ஓட்டும்போது கொஞ்சம் திகிலாக இருந்தது. போக்குவரத்து நெரிசல் வழமைபோல் இருக்கிறது அது மாறவில்லை.
தாறுமாறாக ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதா, இல்லை தெருக்கள் குறுகி விட்டதா இல்லை வண்டிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா, விளங்கவில்லை.

" திருப்பூர் ரோட்டுல வண்டி ஓட்டுறது கொஞ்சம் குஷ்டமப்பா ச்சீ..கஷ்டமப்பா!! தனி மாவட்டமா அறிவிச்சாச்சு, இனிமேலாவது போக்குவரத்து நிலைமைய சீர் செய்வாங்களா?"


"வசூல் தளபதிகள்"
தனி மாவட்டம் என்றவுடன் திருப்பூர் முழுக்க வைத்திருந்த "மாவட்ட துவக்க விழா" விளம்பர பலகைகள்தான் நினைவுக்கு வருகிறது. தளபதி(?) ஸ்டாலின் வருகிறாராம். மேட்டர் என்னவென்றால் தளபதி வருகிறார் பராக் பராக் என்று சொல்லி ஒவ்வொரு கம்பெனியிலும் வசூல் வேட்டை நடக்கிறது. குறைந்தது ரூ.10,000/-. பெரிய கம்பெனி என்றால் கன்னாபின்னா வென்று தொகை அதிகரிக்கும்.

"யாரு காசுல யார் கொண்டாடுறது? என்ன கொடுமை சரவணா இது?"

"தில்லுமுல்லு டீச்சர்"
பள்ளியில் இரண்டாவது ரேங்க் வாங்கும் பையன், முதலிடத்தை பிடிக்க என்ன யோசனை சொல்வோம்? "அவன் செய்யும் சிறு தவறு என்ன என்பதை கண்டறிந்து, திருத்திக்கொள்ள வழி செய்வோம்" இல்லையா? அனால் எங்களூரில் ஒரு டீச்சர் தன் மகன் முதலிடம் பிடிக்க இன்னொரு சுலபமான முறையை கையாள்கிறார்.

மகனின் வகுப்பு ஆசிரியரை எப்படியோ சரிசெய்து வகுப்பில் முதலிடம் பிடிக்கும் பெண்ணுக்கு மதிப்பெண்களை குறைக்கச் செய்கிறார் (எப்பிடி ஐடியா சோக்காக்கீதா?).

அந்த முதலிடம் பிடிக்கும் பெண் எங்கள் உறவுக்காரப் பெண். பள்ளி தலைமையிடம்
இந்த தில்லிமுல்லு பற்றி ஒரு முறை முறையிட்டும் ஆசிரியர்கள் திருந்தவில்லை.
நான் ஊரில் இருந்தபோது "தில்லு முல்லு" பற்றி தலைமை ஆசிரியருக்கு மேலும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்கள், பயனளிக்குமா தெரியவில்லை.


"பயன்தரா வசதிகள்"
எப்படியோ சொந்தபந்தங்களைப் பார்த்துவிட்டு, நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு விடுமுறை முடிந்து கிளம்பினோம். கோவையிலிருந்து ஷார்ஜா வருவதாய் திட்டம். அதிகாலை 3:30 விமானத்திற்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்து பயணச்சீட்டு, லக்கேஜ் சோதனை, சுங்கம் என அனைத்து formalities முடித்துக்கொண்டு காத்திருப்பு அறையில் அமர்ந்தபோது மணி 1:30. ஷார்ஜாவில் பனிமூட்டம் காரணமாக விமானம் காலை 6:15 மணிக்குத்தான் கிளம்பியது, ஆக ஐந்து மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. "இதுல மேட்டர் இன்னான்னா, ஒரு காபி டீ சாப்பிடக்கூட வசதி இல்லை. நிலையத்தின் வெளிப்புற (யாருமே காத்திருக்காத) ஹாலில் "Coffee Day" மற்றும் சில கடைகள் உள்ளன ஆனால், விமானத்திற்காக காத்திருக்கும் பயணிகளுக்கு உள்ளே பச்சை தண்ணி மட்டும்தான், நிர்வாகம் இத்துனூண்டு கூட யோசிக்காதா? "



நன்றி!


6 comments:

நட்புடன் ஜமால் said...

\\விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடும் நாளிலிருந்து மனதில் ஒரு குதூகலம், மகிழ்ச்சி வந்து தங்கிவிடும். பிரயாணம் செய்யும் நாள் நெருங்க நெருங்க அவ்வுணர்வு அதிகரித்து ஊர் சேர்கையில் இரட்டிப்பாகிவிடும். இது ஒவ்வொரு முறையும் நான் அனுபவிப்பது, அடிக்கடி பயணித்தாலும் கூட!
\\

மிக(ச்)சரியான விடயம்.

எனக்குள்ளும் இப்போ ...

நட்புடன் ஜமால் said...

\\ஒவ்வொரு கம்பெனியிலும் வசூல் வேட்டை நடக்கிறது. குறைந்தது ரூ.10,000/-. பெரிய கம்பெனி என்றால் கன்னாபின்னா வென்று தொகை அதிகரிக்கும்.\\

அடக்கொடுமையே ...

கணினி தேசம் said...

//
மிக(ச்)சரியான விடயம்.

எனக்குள்ளும் இப்போ ...//

வாங்க ஜமால்

அப்போ ஹாஜர பார்க்கப் போறீங்களா?
ஒரே கொண்டாட்டம்தான்.

நட்புடன் ஜமால் said...

\\
அப்போ ஹாஜர பார்க்கப் போறீங்களா?
ஒரே கொண்டாட்டம்தான்.\\

ஆமாம் நண்பரே ...

Anonymous said...

அடுத்த முறை வரும்பொழுது மெயில் அனுப்புங்கள் நேரில் சந்திப்போம்.

வெளினாட்டு விமான நிலையங்களைப் பார்த்தவர்களுக்கு பெங்களூர் பெரிதாகத் தோன்றாது. எனக்குப் பிடித்திருந்தது.
அதே போல் முன்ம்பை விமான நிலையம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கணினி தேசம் said...

@வடகரை வேலன் said...
//

வாங்க வேலன்,


// அடுத்த முறை வரும்பொழுது மெயில் அனுப்புங்கள் நேரில் சந்திப்போம்.
//
நிச்சயம் சந்திப்போம். திருப்பூரில் பதிவர்கள் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்வோம் :-)))


//வெளினாட்டு விமான நிலையங்களைப் பார்த்தவர்களுக்கு பெங்களூர் பெரிதாகத் தோன்றாது. எனக்குப் பிடித்திருந்தது.
அதே போல் முன்ம்பை விமான நிலையம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
//

சென்னை விமான நிலையத்தின் "புறப்பாடு" தளம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பெங்களுரு நிலையத்தின் வசதிகள் போதுமான அளவு இருக்கிறது அவற்றுள் குறையேதும் சொல்லவில்லை.. உள்-கட்டமைப்பு, வெளிச்சம் நன்றாக இருந்திருக்கலாம். அவ்வளவே.


வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி !!