Tuesday, March 24, 2009

வழக்கொழிந்த சொற்கள் (எதிர்ப்பதிவு!)

பதிவர் நண்பர்களுள் பலர் நாம் மறந்துபோன நல்ல தமிழ் சொற்களைப் பட்டியலிட்டு நினைவூட்டினர். அவர்களுக்கு என் நன்றிகள் பல.

அவற்றை தவறவிட்டவர்கள் படிக்க சுட்டிகள் கொடுத்துள்ளேன்...

நம்மால் தொலைக்கப்பட்டவை என சுட்டிக்காட்டுகிறார் பூர்ணிமா
இருப்பதும் இல்லாமல் இருப்பதும் என்கிறார் நட்புடன் ஜமால்.
வால் பையன் தன் பங்கிற்கு சொற்களை பட்டியலிட்டுள்ளார்.
அமிர்தவர்ஷினி அம்மாவின் பாட்டியலுக்கு இங்கே சொடுக்கவும்.
அமுதா அவர்களின் பாட்டியல் இங்கே.


என் பட்டியல் சற்று மாறுபட்டவை. இவையெல்லாம் நன்றாகவே வழக்கத்தில் இருப்பவைதான். இந்த சொற்களும், அதுசார்ந்த நம் வழக்கங்களும் ஒழிந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தொடுத்துள்ளேன்.


தீண்டாமை -- முதலாவதாக நாம் மறக்கப்பட வேண்டிய சொல். என்னதான் நாம் கணினி யுகம் என்று கூறிக்கொண்டாலும், வாழ்வில் புதிய சௌகரியங்கள் கண்டு அடுக்குமாடிகளில் குடிபுகுந்தாலும், பல நாடுகள் பறந்து திரும்பினாலும், இந்தச் சொல்லை மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டே இருக்கிறோம். நகர்ப்புறங்களில் கொஞ்சம் தாக்கம் குறைந்திருக்கிறதே தவிர நம்மைவிட்டு விலகவில்லை. இன்னும் பல பெரியார் பிறக்கவேண்டுமா?


வரதட்சணை - இது சட்டப்படி தவறு என எவ்வளவுதான் பிரச்சாரம் செய்தாலும், நம்மைவிட்டு நீங்காமல் இருக்கிறது. சிந்தித்துப் பார்த்தால், இந்த ஒரு சொல் மட்டும் இல்லையெனில் மக்கள் ஏன் கள்ளிப்பால் தேடிச் செல்கிறார்கள். இந்த ஒரு சொல்லால்தானே பெண் குழந்தைகளை வெறுப்பதும், பிறக்குமுன்னரே அழிக்கும் கொடூரங்களும் நடைபெறுகின்றன.

மலடி - குழந்தைப்பேறு என்பது ஆண், பெண் ஒரு பாலருக்கும் பொதுவானது. குழந்தை பெறுவதில் சிக்கல் என்றால் அதன் காரணம் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம். அப்படியிருக்க பெண்களை மட்டுமே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி வசைபாடும் சொல் இது. மருத்துவத்துறையில் நாம் பல-காத தூரங்கள் கடந்து வந்துவிட்டோம். குழந்தைப் பெற்றுக்கொள்ள மாற்று வழிகள் வந்துவிட்டன. அதனால், செக்கு மாடு போல் மீண்டும் மீண்டும் பெண்களை இந்தச் சொல்லால் அடிப்பது பெருங்குற்றம்.

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் புதியதாக "கல்யாணம்" என்றொரு தொடர் நாடகம் ஒளிபரப்புகிறார்கள். அதில் ஒரு தம்பதியினருக்கு ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லையாம். அதனால் கணவன் மனைவியை மலடி என்று சாடுவதாக வரும். குழந்தை இல்லாமையால் மனைவியின் தங்கையை திருமணம் செய்ய அவன் விரும்புவதாக காட்டுகின்றனர். வேடிக்கை என்னவெனில் கணவன் ஒரு நன்கு படித்த காவல்துறை அதிகாரியாம். இவ்வாறு எழுதிய கதாசிரியர் கிடைத்தால் சட்டையை பிடித்து உலுக்கி "டேய்! நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?" என கேட்கவேண்டும்.

"மெகா-தொடர்கள்" சினிமாவைக் காட்டிலும் மக்களிடம் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, அதனால்தான் இங்கே சுட்டிக்காட்டினேன்.


வஞ்சம் - நமக்கு ஒருவர் மீது ஏதோவொரு காரணத்தால் எரிச்சலோ, கோபமோ வந்தால் நேருக்குநேர் காட்டிவிடலாம் அல்லது பேசி தீர்த்துக்கொள்ளலாம். அதுவிடுத்து கோபத்தை மனதில் புதைத்து வைப்பது வஞ்சத்திற்கு விதைதூவும். சில நாட்களில் அது வேரூன்றி வளர்ந்து மரமாகி நிற்கும். ஐந்து நிமிடம் பேசி தீர்க்கவேண்டிய விடயங்களெல்லாம் மாதக்கணக்கில் ஏன் வருடக்கணக்கிலும் தொடரும், தொல்லைதரும். இருசாராருக்கும் நன்மைபயக்காத இந்த "வஞ்சம்" குழி தோண்டி புதைக்கப்படவேண்டும்.



அடிமை - அடிமை என்றால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை தனக்கு அடிமையாக்கி கொடுமை படுத்துவது மட்டுமல்ல. நம்மில் பலர் "குடிக்கு-அடிமை", "புகைக்கு-அடிமை", "கிரிக்கெட்-அடிமை", என பலவகையான அடிமைகளாகத்தான் இருக்கிறோம். நான் "இனிப்புக்கு அடிமை", ஒரு தட்டு நிறைய இனிப்பு வைத்தால் முழுவதுமாக முடிக்காமல் எழ என்னால் முடியாது. நண்பர் ஒருவர் "பதிவுலகத்தின் அடிமை" இரவெல்லாம் பதிவுகளைத் தேடித்தேடி படித்துக் கொண்டேயிருக்கிறார், தூக்கம் இழக்கிறார்.

இவ்வாறு அடிமையாய் இருப்பதால் வரும் நேரடி விளைவுகள் அனைவரும் அறிந்ததே. அனால், மறைமுகமாகவும் நிறைய இழக்க நேரிடுகிறது. உதாரணத்திற்கு சிலர் "தொலைக்காட்சிக்கு அடிமை" எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். நம் கண்களுக்கு நல்லதல்ல என்பது நேரடிவிளைவு. குடும்பத்தாருடன் பேசுவது குறைந்துபோகும், சோம்பேறித்தனம் நம்மில் குடிகொள்ளும் என்பதெல்லாம் மறைமுகமான விளைவுகள். மொத்தத்தில் எந்தவொரு விடயத்திற்கும் அளவுகோல் தேவை அன்பையும் சேர்த்து.


இன்னும் பல ஒழிக்கப்பட வேண்டிய சொற்கள் (வழக்கங்கள்) நம்முள் இருந்துகொண்டு மகிழ்ச்சியைப் குலைக்கின்றன. பட்டியலின் நீளம் கருதி இத்தோடு முடிக்கிறேன் (அப்பாடா!).


நன்றி.


52 comments:

நட்புடன் ஜமால் said...

வித்தியாசமான அனுகுமுறைதான்

நட்புடன் ஜமால் said...

நம்ம சுட்டியும் கொடுத்தற்கு நன்றிங்கோ

கணினி தேசம் said...

நட்புடன் ஜமால் said...

வித்தியாசமான அனுகுமுறைதான்

//

நன்றி ஜமால்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல சிந்தனை, வரவேற்கப்பட வேண்டியவை...

ஆ.ஞானசேகரன் said...

சாதியும், தீண்டாமையும் கண்டிப்பா மறக்கவேண்டிய சொல்... ஆனால்... வாரத்தில் குறைந்தது 7 நாட்கள் இந்த சொல்லை கேட்டுவிடுகின்றேன்.....

நட்புடன் ஜமால் said...

வஞ்சம் இருக்கு இலஞ்சம் எங்கே

நட்புடன் ஜமால் said...

வரதட்சணை கொடுமையே மிகப்பெரும் கொடுமையாக உள்ளது

நட்புடன் ஜமால் said...

\\மொத்தத்தில் எந்தவொரு விடயத்திற்கும் அளவுகோல் தேவை அன்பையும் சேர்த்து.\\

நல்லா சொன்னேள் போங்கோ ...

ஆ.ஞானசேகரன் said...

சாதிப் பற்றிய போக்கு, இந்தியாவில் மட்டும் இல்லங்க.. புலம்பெயர்ந்த நம்மவர்களிடம் மிக மிக அதிகமாக உள்ளது வெட்கப்பட வேண்டியது... மலேசியா, சிங்கபூரிலும் நான் பார்திருக்கின்றேன்... இலங்கைத் தமிழர்களின் சாதிய பேச்சுகள் அவர்களின் ஒற்றுமையை கெடுக்கும்படியாகவும் உள்ளது...

அமுதா said...

/*இந்த சொற்களும், அதுசார்ந்த நம் வழக்கங்களும் ஒழிந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தொடுத்துள்ளேன்.*/
வழக்கிலும் வழக்கதிலும் இருந்து ஒழிந்தால் நாடு முன்னேறும்.
நல்ல பதிவு.
எனது பதிவிற்கு சுட்டி அளித்தமைக்கு நன்றி

வெற்றி said...

கலக்கல் அனுகுமுறை. கொன்னுட்டீங்க பாஸ்.

கணினி தேசம் said...

ஆ.ஞானசேகரன் said...

சாதியும், தீண்டாமையும் கண்டிப்பா மறக்கவேண்டிய சொல்... ஆனால்... வாரத்தில் குறைந்தது 7 நாட்கள் இந்த சொல்லை கேட்டுவிடுகின்றேன்.....
//
:(((

//நட்புடன் ஜமால் said...

வஞ்சம் இருக்கு இலஞ்சம் எங்கே
//

அதுவும் டாப் 10 ஒழிக்கப்பட வேண்டியவைகளுள் ஒன்றுதான்

கணினி தேசம் said...

//ஆ.ஞானசேகரன் said...

சாதிப் பற்றிய போக்கு, இந்தியாவில் மட்டும் இல்லங்க.. புலம்பெயர்ந்த நம்மவர்களிடம் மிக மிக அதிகமாக உள்ளது வெட்கப்பட வேண்டியது... மலேசியா, சிங்கபூரிலும் நான் பார்திருக்கின்றேன்... இலங்கைத் தமிழர்களின் சாதிய பேச்சுகள் அவர்களின் ஒற்றுமையை கெடுக்கும்படியாகவும் உள்ளது...//

கடல் கடந்தும் சாதியை கொடி நாட்டுகிரார்களா? கொடுமை :(((

கணினி தேசம் said...

//அமுதா said...
வழக்கிலும் வழக்கதிலும் இருந்து ஒழிந்தால் நாடு முன்னேறும்.
நல்ல பதிவு.
//
நன்றி அமுதா

கணினி தேசம் said...

//ஆ.ஞானசேகரன் said...

நல்ல சிந்தனை, வரவேற்கப்பட வேண்டியவை...
//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஆ.ஞானசேகரன்

கணினி தேசம் said...

// நட்புடன் ஜமால் said...

\\மொத்தத்தில் எந்தவொரு விடயத்திற்கும் அளவுகோல் தேவை அன்பையும் சேர்த்து.\\

நல்லா சொன்னேள் போங்கோ ...
//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜமால்

கணினி தேசம் said...

// தேனியார் said...

கலக்கல் அனுகுமுறை. கொன்னுட்டீங்க பாஸ்.
//
முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி தேனியார்!

வால்பையன் said...

எதிர்பதிவுங்குற பேர்ல ஒரு அருமையான பதிவை போட்டு கலக்கிட்டிங்க தலைவா!

கணினி தேசம் said...

// வால்பையன் said...

எதிர்பதிவுங்குற பேர்ல ஒரு அருமையான பதிவை போட்டு கலக்கிட்டிங்க தலைவா!
//
:)))

வாங்க அருண், கருத்துக்கு நன்றி.!!

- இரவீ - said...

எங்கயோ போய்டீங்க பாஸ்,
நியாயமான வெளிப்பாடு.

- இரவீ - said...

என்ன தான் நியாயம் சொன்னாலும்,
நாங்க கும்மி அடிப்போம்
- திருந்த மறுக்கும் சங்க கோ ப சே .
ரவீ .

- இரவீ - said...

//பதிவர் நண்பர்களுள் பலர் நாம் மறந்துபோன நல்ல தமிழ் சொற்களைப் பட்டியலிட்டு நினைவூட்டினர். அவர்களுக்கு என் நன்றிகள் பல.//

என் சார்பாகவும் நன்றி .

- இரவீ - said...

//அவற்றை தவறவிட்டவர்கள் படிக்க சுட்டிகள் கொடுத்துள்ளேன்...//
மிக்க நன்றி.

- இரவீ - said...

//என் பட்டியல் சற்று மாறுபட்டவை. //
உங்கள மாதிரியே ... சரி..

- இரவீ - said...

// ஒழிந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தொடுத்துள்ளேன்.//
ஒழிய நினைப்பதை சாந்தமா தொடுப்பது உங்களால மட்டும் தான் முடியும்.

- இரவீ - said...

//வரதட்சணை - இது சட்டப்படி தவறு //
// இந்த ஒரு சொல்லால்தானே பெண் குழந்தைகளை வெறுப்பதும், //

உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சு, ஒரு பய்யன் பொரந்துட்டான்னு பேசுற பேச்ச பாரு .

- இரவீ - said...

//சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் புதியதாக "கல்யாணம்" என்றொரு தொடர் நாடகம் ஒளிபரப்புகிறார்கள்.//
இதெல்லாம் ஆரம்பிச்சுட்டீங்களா?

- இரவீ - said...

// "டேய்! நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?" என கேட்கவேண்டும்.//
என் கமெண்ட்டுக்கு இல்லையே ?

- இரவீ - said...

//"மெகா-தொடர்கள்" சினிமாவைக் காட்டிலும் மக்களிடம் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, //
சொல்லவே இல்ல ..

- இரவீ - said...

// ஏதோவொரு காரணத்தால் எரிச்சலோ, கோபமோ வந்தால் நேருக்குநேர் காட்டிவிடலாம் அல்லது பேசி தீர்த்துக்கொள்ளலாம்.//
நீங்க அத கூட செய்யாம - அசால்ட்டா போவீங்களே அது எப்டீன்னு எனக்கு சொல்லி குடுங்க. (உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும் - நெசமா).

- இரவீ - said...

// நான் "இனிப்புக்கு அடிமை", ஒரு தட்டு நிறைய இனிப்பு வைத்தால் முழுவதுமாக முடிக்காமல் எழ என்னால் முடியாது.//
அதான ... நீங்க சொல்லலைனா நான் சொல்லி இருப்பேன்.

- இரவீ - said...

// நண்பர் ஒருவர் "பதிவுலகத்தின் அடிமை" இரவெல்லாம் பதிவுகளைத் தேடித்தேடி படித்துக் கொண்டேயிருக்கிறார், தூக்கம் இழக்கிறார்.//
அவ்வ்வ்வ்வ் அவ் அவ்வவ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...

- இரவீ - said...

// மொத்தத்தில் எந்தவொரு விடயத்திற்கும் அளவுகோல் தேவை அன்பையும் சேர்த்து.//
மொத்தமான அளவு கோலா?
பேரு என்னனு சொல்லுங்க ... எந்த கடையில கிடைக்குது ?

- இரவீ - said...

//(அப்பாடா!).//
என்ன ஒரு பெருமூச்சு ... ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

- இரவீ - said...

//Ravee (இரவீ ) said...

//வரதட்சணை - இது சட்டப்படி தவறு //
// இந்த ஒரு சொல்லால்தானே பெண் குழந்தைகளை வெறுப்பதும், //

உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சு, ஒரு பய்யன் பொரந்துட்டான்னு பேசுற பேச்ச பாரு .//

இதுக்கு நானே மறுப்பு சொல்லிடறேன் - எனக்கே மனச்சாட்சி கேக்கல.

இது ஏதோ தீய சக்கதிகளின் பின்னூட்டம் - கண்டுக்காதீங்க.

அ.மு.செய்யது said...

//அதுசார்ந்த நம் வழக்கங்களும் ஒழிந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தொடுத்துள்ளேன்.
//

சூப்ப‌ர் க‌ணினி..வித்தியாச‌மான‌ சிந்த‌னை.

வ‌ழ‌க்கொழிய‌ வேண்டிய சொற்க‌ள்னு த‌லைப்பு வெச்சிருக்க‌லாம்ல‌.

அ.மு.செய்யது said...

//ஆ.ஞானசேகரன் said...
சாதிப் பற்றிய போக்கு, இந்தியாவில் மட்டும் இல்லங்க.. புலம்பெயர்ந்த நம்மவர்களிடம் மிக மிக அதிகமாக உள்ளது வெட்கப்பட வேண்டியது... மலேசியா, சிங்கபூரிலும் நான் பார்திருக்கின்றேன்... இலங்கைத் தமிழர்களின் சாதிய பேச்சுகள் அவர்களின் ஒற்றுமையை கெடுக்கும்படியாகவும் உள்ளது...
//

வெளிநாடுக‌ளில் கூடவா இந்த‌ கொடுமை ? விய‌ப்பாக‌ இருக்கிற‌து.

கணினி தேசம் said...

வாங்க இரவீ,

//எங்கயோ போய்டீங்க பாஸ்,
நியாயமான வெளிப்பாடு.//

எங்கயும் போகலை, இங்கயேதான் குந்திக்கினுகீறேன்!!

//என்ன தான் நியாயம் சொன்னாலும்,
நாங்க கும்மி அடிப்போம்
- திருந்த மறுக்கும் சங்க கோ ப சே .
ரவீ .
//
உங்களை யாரும் திருந்தச்சொல்லலையே!!

//என் பட்டியல் சற்று மாறுபட்டவை. //
உங்கள மாதிரியே ... சரி..
//
:-)))

கணினி தேசம் said...

வாங்க இரவீ,

Ravee (இரவீ ) said...
// ஒழிந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தொடுத்துள்ளேன்.//
ஒழிய நினைப்பதை சாந்தமா தொடுப்பது உங்களால மட்டும் தான் முடியும்.
//

எங்களுக்கும் கோபமெல்லாம் வரும். நீங்க இன்னும் பார்க்கலை. கர்ர்ர்ர்ர்ர்ர்!!

//
//வரதட்சணை - இது சட்டப்படி தவறு //
// இந்த ஒரு சொல்லால்தானே பெண் குழந்தைகளை வெறுப்பதும், //

உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சு, ஒரு பய்யன் பொரந்துட்டான்னு பேசுற பேச்ச பாரு .
//

இல்லாட்டியும் நிச்சயமா என் நிலைப்பாடு இதேதான்.


//
//சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் புதியதாக "கல்யாணம்" என்றொரு தொடர் நாடகம் ஒளிபரப்புகிறார்கள்.//
இதெல்லாம் ஆரம்பிச்சுட்டீங்களா?
//

அம்மா இங்கதானே இருக்காங்க, அவங்க பெரும்பாலான தொடர்களை பார்க்கறாங்க. சோ..நோ யெஸ்கேபிங் !!

//
// "டேய்! நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?" என கேட்கவேண்டும்.//
என் கமெண்ட்டுக்கு இல்லையே ?
//
உங்ககிட்ட பேச்செல்லாம் கிடையாது, நேரடியா ஆக்ஷன்தான்.

கணினி தேசம் said...

இரவீ,

// நீங்க அத கூட செய்யாம - அசால்ட்டா போவீங்களே அது எப்டீன்னு எனக்கு சொல்லி குடுங்க. (உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும் - நெசமா).
//
ஒரு மணிநேர வகுப்புக்கு 500 திர்காம், ஓகேவா ?

// நான் "இனிப்புக்கு அடிமை", ஒரு தட்டு நிறைய இனிப்பு வைத்தால் முழுவதுமாக முடிக்காமல் எழ என்னால் முடியாது.//
அதான ... நீங்க சொல்லலைனா நான் சொல்லி இருப்பேன்.
//
மாட்டிவிடுரதுன்னா அவ்வளவு சந்தோசம். ஏன்..ஏன்?

//
// நண்பர் ஒருவர் "பதிவுலகத்தின் அடிமை" இரவெல்லாம் பதிவுகளைத் தேடித்தேடி படித்துக் கொண்டேயிருக்கிறார், தூக்கம் இழக்கிறார்.//
அவ்வ்வ்வ்வ் அவ் அவ்வவ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...
//
நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரையும் குறிப்பிடவில்லை
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

//
// மொத்தத்தில் எந்தவொரு விடயத்திற்கும் அளவுகோல் தேவை அன்பையும் சேர்த்து.//
மொத்தமான அளவு கோலா?
பேரு என்னனு சொல்லுங்க ... எந்த கடையில கிடைக்குது ?
//
இந்த அளவுகோல் ஒவ்வொருவர் மனதிலும் இருக்குங்க. கடையில எல்லாம் கிடைக்காது.
(சொல்லியும் கேட்காம கடை கடையா போய், அடிவாங்கினா அதற்கு நான் பொறுப்பல்ல )

கணினி தேசம் said...

இரவீ,

//இதுக்கு நானே மறுப்பு சொல்லிடறேன் - எனக்கே மனச்சாட்சி கேக்கல.

இது ஏதோ தீய சக்கதிகளின் பின்னூட்டம் - கண்டுக்காதீங்க.
//

அந்த பயம் இருக்கட்டும்.

கணினி தேசம் said...

வாங்க அ.மு.செய்யது

//அ.மு.செய்யது said...
சூப்ப‌ர் க‌ணினி..வித்தியாச‌மான‌ சிந்த‌னை.
வ‌ழ‌க்கொழிய‌ வேண்டிய சொற்க‌ள்னு த‌லைப்பு வெச்சிருக்க‌லாம்ல‌.
//
கருத்துக்கு நன்றி நண்பா.

gayathri said...

வித்தியாசமான அனுகுமுறைதான் நல்ல சிந்தனை கணினி தேசம்

கணினி தேசம் said...

gayathri said...

வித்தியாசமான அனுகுமுறைதான் நல்ல சிந்தனை கணினி தேசம்
//

வருகைக்கு நன்றி Gayathri!!

ஹேமா said...

//ஞானசேகரன்...இலங்கைத் தமிழர்களின் சாதிய பேச்சுகள் அவர்களின் ஒற்றுமையை கெடுக்கும்படியாகவும் உள்ளது...//

அருமையாக் எங்கள் தமிழ் மக்களை உணர்ந்திருக்கிறார்.முற்றிலும் உண்மையான தகவல்.நன்றி ஞானசேகரன்.புலம்தான் பெயர்கிறார்களே தவிர,அந்த ஊத்தை உள்ளங்களைக் காவியபடிதானே...!

கணணி தேசம் அருமையான சொற்களும் அதன் விளக்கங்களும்.ஆனால் அநேகமாக இப்போதும் வழக்கத்தில் உள்ள சொற்களாகவே நான் விளங்கிக் கொண்டேன்.ஆனால் புரியாதவர்களுக்கு விளக்கங்கள் அருமை.

Tech Shankar said...

நல்ல பதிவு. ஏதோ என்னால் முடிஞ்சது ஒரு பின்னூட்டம்.

உங்களை உற்சாகப் படுத்த வேறு என்ன செய்ய?

கணினி தேசம் said...

//கணணி தேசம் அருமையான சொற்களும் அதன் விளக்கங்களும்.ஆனால் அநேகமாக இப்போதும் வழக்கத்தில் உள்ள சொற்களாகவே நான் விளங்கிக் கொண்டேன்.//

நன்றி ஹேமா.

ஆம், இவையல்லாம் வழக்கொழிய வேண்டும் என்பதே எண்ணம்.

கணினி தேசம் said...

//தமிழ்நெஞ்சம் said...

நல்ல பதிவு. ஏதோ என்னால் முடிஞ்சது ஒரு பின்னூட்டம்.

உங்களை உற்சாகப் படுத்த வேறு என்ன செய்ய?//

நன்றி தமிழ்நெஞ்சம்

இந்தத் தவறுகளை நாம் செய்யாமலிருந்தால் போதும்.

Anonymous said...

சிறந்த கருத்துக்கள்...
இந்தியாவில் மட்டும் அல்ல...உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பலரும் மறக்க வேண்டிய சொற்கள்தான் இவைகள். தங்களின் இந்த கருத்துகள் இன்னும் பலரை சென்றடைய என்னுடைய வாழ்த்துகள்.
நன்றி.

பழமைபேசி said...

அகோ, புதுசா எதனா பதியுங்க... இஃகிஃகி!!

கணினி தேசம் said...

//பழமைபேசி said...

அகோ, புதுசா எதனா பதியுங்க... இஃகிஃகி!!
//

போட்டாச்சு..!!

Tech Shankar said...

me the 52nd person