Thursday, December 4, 2008

வரம்


சுற்றியுள்ள பொருட்களை கணக்கெடுக்கும்; நிறங்களைத் தேடும் கண்கள்,
காற்றில் மிதிவண்டி சுற்றும் கால்கள்,
வானத்தை தொட எத்தனிக்கும் கைகள்,
நாம் பேசினால் கூடவே தனக்கே உரிய "ங்கா..ங்கா.." ஊ..ஊ..." என
மென்மையான மழலைமொழியில் கூறும் பதில்கள்.

இவை அனைத்துக்கும் மேல் மெய்மறக்க வைக்கும் புன்னகை.

இதெல்லாம் ஏழு மணிநேர ரயில் பயணம் பின் நான்கு மணிநேர விமானப்பயணம் செய்து என் கைகளில் வந்து சேர்ந்த எங்கள் மூன்று மாத குழந்தையிடம் காண்கிறேன்.

தூங்கும் கோணத்திலும், இடது கையை உபயோகிப்பதிலும், ஏன் சோம்பல் முறிப்பதிலும் கூட என்னையே காண்கிறேன்.


உலக அதிசயங்கள் ஏழு என்பர். அனால், நான் ஒன்றே ஒன்று தான் என்பேன். அது, கருவாகி உயிராகி பூமியில் ஜனனம் செய்யும் குழந்தை ஒன்று மட்டும் தான்.


19 comments:

anujanya said...

குழத்தை வந்து சேர்ந்த இன்பத்தில் இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். ஹரன் பிரசனாவின் 'குழந்தையின் வீடு' என்னும் இந்தக் கவிதையும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.


அனுஜன்யா

கணினி தேசம் said...

வாங்க அனுஜன்யா !

//ஹரன் பிரசனாவின் 'குழந்தையின் வீடு' //
நிச்சயம் படிக்கிறேன்.

- இரவீ - said...

மிக மிக அருமை ...
இததான் அணு அணுவா ரசிக்கிரதுனு சொல்லுவாங்களோ ?

கணினி தேசம் said...

நன்றி இரவீ!!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்.

\\உலக அதிசயங்கள் ஏழு என்பர். அனால், நான் ஒன்றே ஒன்று தான் என்பேன். அது, கருவாகி உயிராகி பூமியில் ஜனனம் செய்யும் குழந்தை ஒன்று மட்டும் தான்\\

புரிந்து கொள்ள முடியாத இரகசியம், நிச்சியம் அதிசயம் தான்

கணினி தேசம் said...

வாங்க அதிரை ஜமால்,

பின்னூட்டத்திற்கு நன்றி.

இதுபோன்ற தருணத்தில்தான் நமக்குமேல் ஒருவன் இருக்கிறான் என்பது உறுதிபடுத்தப்படுகிறது. மனம் மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொண்டே இருக்கிறது.

Poornima Saravana kumar said...

//உலக அதிசயங்கள் ஏழு என்பர். அனால், நான் ஒன்றே ஒன்று தான் என்பேன். அது, கருவாகி உயிராகி பூமியில் ஜனனம் செய்யும் குழந்தை ஒன்று மட்டும் தான்//

ரிப்பீட்டே...

Poornima Saravana kumar said...

ஹை எங்கள் குட்டிக்கும் 3 மாதங்கள் தான் ஆகிறது.. செப்டெம்பர் 1ம் தேதி பிறந்தார்..

Poornima Saravana kumar said...

உங்கள் குழந்தை பெயர்???

கணினி தேசம் said...

// PoornimaSaran said...

உங்கள் குழந்தை பெயர்???//

வாங்க PoornimaSaran !!

எங்கள் சுட்டியின் பெயர் விஷ்ணு.......!! விஷ்ணு......!! விஷ்ணு.....!! (Echo வாக்கும்!)

கணினி தேசம் said...

//ஹை எங்கள் குட்டிக்கும் 3 மாதங்கள் தான் ஆகிறது.. செப்டெம்பர் 1ம் தேதி பிறந்தார்..//

வாழ்த்துக்கள்.! Happy Parenting!


சரி.. நீங்க கோவை-வாசியா? எங்க சுட்டி பிறந்தது கோவை GKNM ல தான். :-)

பின்னூட்டத்திற்கு நன்றி.!!

Poornima Saravana kumar said...

// கணினி தேசம் said...
//ஹை எங்கள் குட்டிக்கும் 3 மாதங்கள் தான் ஆகிறது.. செப்டெம்பர் 1ம் தேதி பிறந்தார்..//

வாழ்த்துக்கள்.! Happy Parenting!


சரி.. நீங்க கோவை-வாசியா? எங்க சுட்டி பிறந்தது கோவை GKNM ல தான். :-)

பின்னூட்டத்திற்கு நன்றி.!!

//

ஆமாங்க கோவை தான்.எங்க சுட்டி பிறந்தது கோவை Sheela ல ..

நட்புடன் ஜமால் said...

\\Blogger கணினி தேசம் said...

வாங்க அதிரை ஜமால்,

பின்னூட்டத்திற்கு நன்றி.

இதுபோன்ற தருணத்தில்தான் நமக்குமேல் ஒருவன் இருக்கிறான் என்பது உறுதிபடுத்தப்படுகிறது. மனம் மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொண்டே இருக்கிறது.\\

நிச்சியமாக

Tech Shankar said...

congrats.

தமிழ் தோழி said...

முதலில் உங்களுக்கு வாழ்த்துசொல்லிவிடுகிரேன்.

தமிழ் தோழி said...

நல்ல பதிவை பதித்து உள்ளீர்கள்.

தமிழ் தோழி said...

//உலக அதிசயங்கள் ஏழு என்பர். அனால், நான் ஒன்றே ஒன்று தான் என்பேன். அது, கருவாகி உயிராகி பூமியில் ஜனனம் செய்யும் குழந்தை ஒன்று மட்டும் தான்.//

நீங்கள் சொல்லுவது உன்மைதான்.

கணினி தேசம் said...

//தமிழ் தோழி said...

முதலில் உங்களுக்கு வாழ்த்துசொல்லிவிடுகிரேன்.//




வாங்க தமிழ்தோழி
முதல் வருகைக்கு நன்றி..
வாழ்த்துக்கு மேலும் ஒரு நன்றி!

கணினி தேசம் said...

//தமிழ் தோழி said...

//உலக அதிசயங்கள் ஏழு என்பர். அனால், நான் ஒன்றே ஒன்று தான் என்பேன். அது, கருவாகி உயிராகி பூமியில் ஜனனம் செய்யும் குழந்தை ஒன்று மட்டும் தான்.//

நீங்கள் சொல்லுவது உன்மைதான்.
//

தினமும் குழந்தையை பார்க்கப்பார்க்க... அதிசயத்திற்கும்..மேலே ஏதாவது வார்த்தை சொல்லவேண்டும் போல் இருக்கிறது.