Sunday, December 28, 2008

புத்தாண்டு நினைவுகள்

மார்கழிக் குளிர்
தெருக்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்
சென்னையில் "கலை" நிகழ்ச்சிகள் களைகட்டுதல்
தேய்பிறையில் டிசம்பர் மாதம்
இவை அனைத்தும் நமக்கு சொல்வது
ஆண்டின் இறுதியை நெருங்கிவிட்டோம் என்று.
புது வருடம் நமக்காக இன்பமும், துன்பமும்,
மர்மங்களும், மாற்றங்களும்,
பழைய வினாக்களுக்கு விடைகளும்
மேலும் பல புதிய வினாக்களையும்
தாங்கி வந்து கொண்டிருக்கிறது.


ஆங்கிலப் புத்தாண்டுகளை வரவேற்பதில் பலருக்கு பல கருத்துக்கள். என்னைப் பொறுத்தவரை ஆங்கில காலண்டர்'ஐயே நாம் பெரும்பாலும் உபயோகிப்பதால், ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்பதில் தவறில்லை.

வரும் Dec'31 இரவில் என்ன செய்யப் போகிறோம் என சிந்திக்கும் முன், இதுவரை எனைக் கடந்த புத்தாண்டுகளில் என்னவெல்லாம் செய்தோம், யாருடன் எங்கு கொண்டாடினோம் என நினைவலைகளை புரட்டிப் பார்த்து அசைபோட்டுப் பார்த்தேன். ஒருவித மகிழ்வைத்தந்தது. அவற்றுள் குறிப்பிடும்படியான நிகழ்வுகள் மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

1992
என் நினையு சரியாக இருப்பின், புத்தாண்டு இரவு கேக் சாப்பிட்டு கொண்டாடியது 1992 க்குத்தான் (அப்போ நாங்க SSLC !). என்னுடைய அண்ணன்னும் ஒரு நண்பரும் புத்தாண்டு கொண்டாட்டங்களை பார்க்க சைக்கிளில் சென்றனர். ரோட்டில் கத்திக்கொண்டும் கலாட்டா செய்தும் செல்பவர்களை, காவலர்கள் லத்தியால் அடித்து விரட்டியதைப் பார்த்து, நல்ல பிள்ளையாக திருப்பூர் டவுன் ஹால் எதிரிலுள்ள சுகன்யா பேக்கரியில் ஹனி கேக் வாங்கிக்கொண்டு பத்திரமாய் வீடு திரும்பினர்.
இதில் நான் செய்தது கேக்'ஐ சாப்பிட்டது மட்டுமே..ஹிஹி.!! (யாரு, கூட்டமா கிளம்பி வர்றது...வேணாம்..!)



1998
வீட்டிற்கு வெளியில் சென்று நான் கொண்டாடிய முதல் புத்தாண்டு!

திருப்பூரிலிருந்து 20 கி.மி. தொலைவில் உள்ள கொடுவாயில் இருக்கும் நண்பனின் இடத்தில் கொண்டாடுவதென அழைத்துச் சென்றார்கள்.
ஊருக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்றோம். தோட்டத்தின் நடுவே இருந்த சிறு வீட்டின் மும்பு காரை நிறுத்திவிட்டு காத்திருந்தோம் (இருட்டுக்குள்ள என்னதாண்டா செய்யப்போறோம்னு எனக்கு யோசனை!!) சிறிது நேரத்தில் மேலும் ஒரு காரில் நண்பனின் நண்பர்கள் வந்திறங்கினர். அறிமுகத்திற்கு பிறகு சட்டென அந்த காரின் டிக்கியை திறந்தனர். அஹா, பார்த்தால் ஒரு மினி பார் அளவிலான அயிட்டங்கள்!! காரில், பாட்டு சத்தமாக போடப்பட்டது, பார்ட்டி ஆரம்பமானது. அவரவருக்கு பிடித்த பானத்தை எடுத்துக் கொண்டனர். நானும் இன்னும் இரு நண்பர்களும் ஜூஸ் மட்டும் எடுத்துகொண்டோம் (ரொம்ப நல்லவனாக்கும், நெசமா!!). கொஞ்சம் கொஞ்சமாக சுருதி (பேச்சில்) ஏறியது, கலாய்ப்புக்களும், கிண்டல்களுமாக நகர்ந்தது. பரோட்டாவும் சிறு பக்கெட்டில் குருமாவும் உணவு! பொறுமையாக தட்டில் போட்டு குருமா ஊற்றி சிலர் சாப்பிட,ஒருவர் பரோட்டாவை எடுத்து.. அப்படியே குருமாவில் முக்கி சாப்பிட்டார் (ஓ..இது சுலபமான வழியா இருக்கே!!).

சிறிது நேரத்தில் நண்பர்களுக்கு சுருதி குறைய ஆரம்பித்தது. சரி, சீக்கிரமாக கிளம்பிவிடலாம் என தோன்றியது. அப்போது ஒருவர் மற்றவர்களிடன் "மச்சான், உனக்கு என்ன வேணும்டா சொல்லு நான் இருக்கேன்.. இந்த செயின் வேணுமா.. இந்தா வச்சுக்க, டேய்..இந்தாடா இந்த மோதிரத்த நீ வச்சுக்க.." என பேசியதோடு நிறுத்தாமல், நிஜமாகவே கழட்டி கொடுத்தார். நாங்களெல்லாம் அவரை சமாதானப்படுத்தி அருகிலிருந்த கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்தோம். கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார். அமைதிக்குப்பின் புயல் என்பது போல், திடீரென எழுந்தவர், பந்தல் தடுப்பை தாண்டிக் குதித்து ஓடினார். ஓடினவர் கம்பகாட்டுக்குள் நேராக ஓடினார். சிலர் அவரைத் துரத்திக்கொண்டு "அடப்பாவி டேய் அந்தபக்கதாண்ட கிணறு இருக்கு" என கத்திக்கொண்டே ஓடினர். "ஆஹா, புது வருஷம் நமக்கு காவல்நிலயத்துலதான் விடியும் போல" என பயந்தேன். நண்பர்கள் ஓடினவரை பத்திரமாக கொண்டுவந்தவுடன்தான் பயம்விட்டது. அவர்தான் தோட்டத்தின் சொந்தக்காரராம்!! ஏன் ஓடினார் என யாருக்கும் புரியவில்லை.

பார்ட்டி போதும்டா சாமி என கிளம்பினோம்.


மில்லேனியம்
சென்னைவாசியாகி இரண்டு ஆண்டுகள் முடிவடையும்நேரம் அது. அதற்குள் சென்னை பல புதிய நண்பர்களை கொடுத்திருந்தது. புத்தாண்டு இரவன்று, கீழ்ப்பாக்கத்தில் இருந்த பில்லியார்ட்ஸ் பாயிண்ட் (Billiards Point) சென்றோம். அங்கேயே, புதுவருட பிறப்பை பார்த்துவிட்டு நண்பர்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிவிட்டு பின்னிரவு இரண்டு மணிக்குமேல் கிளம்பி மெரீனா கடற்கரை சென்றோம். அந்த நேரத்திலும் சோர்வடையாது கூச்சலிட்டு வழ்த்திகொண்டிருந்தனர். வேடிக்கை பார்ப்பதில் ஒரு மணி நேரம் கழிந்திருக்கும், காவலர் இருவர் எங்களை நெருங்கி "கிளம்புங்கப்பா நேரமாச்சு, கொண்டாடுனவரைக்கும் போதும், கிளம்புங்க...!!" என்றார். சரி சார்..சரி..சார் "Happy New Year" சார் என்றோம். "எந்த பிரச்சனையும் இல்லாம, இங்க இருக்கிறவங்க பத்திரமா வீடுபோய் சேர்ந்தாதான்ப்பா எங்களுக்கு New Year" என்றார். நெகிழ்வுடன் அங்கிருந்து கிளம்பினோம்.

அடுத்த நிறுத்தம், எத்திராஜ் சாலையில் இருந்த சாமியானா ஹோட்டல்! (தற்போது இல்லை)
விடியற்காலை நான்கு மணிக்கு புத்தாண்டின் முதல் உணவாக தோசையும் காபியும்.



அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!!


டிஸ்கி 1: ரொம்ப மொக்கை போட வேண்டாம்னு 2000 க்கு மேல எழுதலை.

18 comments:

- இரவீ - said...

முன்னூட்டிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

- இரவீ - said...

//அவற்றுள் குறிப்பிடும்படியான நிகழ்வுகள் மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.//
அப்ப - மற்ற வருடங்களில் சம்திங் சம்திங்...

- இரவீ - said...

//நான் செய்தது கேக்'ஐ சாப்பிட்டது மட்டுமே//
இது தான் அந்த குறிப்பிடும் படியான நிகழ்வா???... சரி சரி.

- இரவீ - said...

//இருட்டுக்குள்ள என்னதாண்டா செய்யப்போறோம்னு எனக்கு யோசனை!!//
என்னத்த எதிர்பார்தீங்க?

- இரவீ - said...

//ஒருவர் பரோட்டாவை எடுத்து.. அப்படியே குருமாவில் முக்கி சாப்பிட்டார்//
சொல்லவே வேண்டாம், இது நீங்க தான்.

- இரவீ - said...

//ஏன் ஓடினார் என யாருக்கும் புரியவில்லை//
அப்ப எல்லாருமே ஸ்ருதியில இருந்தீங்களா ??? (பேச்சு .. பேச்சு ஸ்ருதி)

- இரவீ - said...

//அடுத்த நிறுத்தம், எத்திராஜ் சாலையில் இருந்த சாமியானா ஹோட்டல்! (தற்போது இல்லை)//
ஏன், நீங்க சாப்ட்டு பணம் குடுக்காததால ஹோட்டல மூடிட்டாங்களா?

- இரவீ - said...

டிஸ்கி 2: இதுக்கு மேல கலாய்ச்சா - எனக்கு டேஞ்சரு .
Advance New Year Wishes to you all.

நட்புடன் ஜமால் said...

\\There are a terrible lot of lies going about the world, and the worst of it is that half of them are true.\\

உங்கள் தலத்தில் படித்தேன் ...

டிஸ்கி1: இதற்கும் இந்த பதிவுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லை.

டிஸ்கி2: மேலே கூறபட்ட டிஸ்கி1 நிஜமாலுமே உண்மை ...

கணினி தேசம் said...

@ அதிரை ஜமால் said...

டிஸ்கி2: மேலே கூறபட்ட டிஸ்கி1 நிஜமாலுமே உண்மை ...
//

ஹா.ஹா.!! அநியாத்துக்கு மொக்கையோ?

கணினி தேசம் said...

@ Ravee (இரவீ ) said...
//அடுத்த நிறுத்தம், எத்திராஜ் சாலையில் இருந்த சாமியானா ஹோட்டல்! (தற்போது இல்லை)//
ஏன், நீங்க சாப்ட்டு பணம் குடுக்காததால ஹோட்டல மூடிட்டாங்களா? //

ச்சே.ச்சே..!! பணம் கொடுத்ததெல்லாம் நண்பர்கள்தான். எனக்கு சிரமமே தரலை.

கணினி தேசம் said...

//@Ravee (இரவீ ) said...
//அவற்றுள் குறிப்பிடும்படியான நிகழ்வுகள் மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.//
அப்ப - மற்ற வருடங்களில் சம்திங் சம்திங்...
//

:))

கணினி தேசம் said...

@Ravee (இரவீ ) said...
//நான் செய்தது கேக்'ஐ சாப்பிட்டது மட்டுமே//
இது தான் அந்த குறிப்பிடும் படியான நிகழ்வா???... சரி சரி.
//

நடந்தைதானே சொல்லமுடியும்.. மசாலா எதுவும் சேர்க்கலை!

அ.மு.செய்யது said...

நாம் ஆங்கில காலண்டரைத் தான் பின்பற்றுகிறோம்.அதற்காக இந்த புத்தாண்டைக் கொண்டாட ஆங்கிலக் கலாச்சரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமா ??
இந்தியனிடமிருந்து பண்பாட்டை மட்டுமல்ல மற்ற நல்ல விஷயங்களையும் கற்றுக் கொண்டன மற்ற மேற்கத்திய நாடுகள்.ஆனால் அவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பது தான் வருந்தத் தக்க விஷயம்.
ஒரு ந‌ல்ல ச‌ந்தோஷ‌மான‌ ப‌திவுக்கு இவ்வ‌ள‌வு சீரிய‌ஸான‌ க‌ருத்துரை வ‌ழ‌ங்கிய‌த‌ற்காக‌ ம‌ன்னிப்பு கோருகிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//அவற்றுள் குறிப்பிடும்படியான நிகழ்வுகள் மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.//
அப்ப - மற்ற வருடங்களில் சம்திங் சம்திங்...

நான் கேட்க நினைத்தது, முன்னவர் சொன்னதால் வழிமொழிகிறேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கணினி தேசம் said...

வாங்க அ.மு.செய்யது

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

//இந்தியனிடமிருந்து பண்பாட்டை மட்டுமல்ல மற்ற நல்ல விஷயங்களையும் கற்றுக் கொண்டன மற்ற மேற்கத்திய நாடுகள்.ஆனால் அவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பது தான் வருந்தத் தக்க விஷயம்.//

உண்மையான விஷயம். இதைப்பற்றி தனி பதிவே எழுதலாம்.

//ஒரு ந‌ல்ல ச‌ந்தோஷ‌மான‌ ப‌திவுக்கு இவ்வ‌ள‌வு சீரிய‌ஸான‌ க‌ருத்துரை வ‌ழ‌ங்கிய‌த‌ற்காக‌ ம‌ன்னிப்பு கோருகிறேன்.//

என்னைப் பொறுத்தவரை.. "வாழ்க்கை வாழ்வதற்கே". என நினைப்பவன். நாமும் சந்தோசமாக இருக்க வேண்டும், நம்மைச் சுற்றத்தாரும் முடிந்த அளவு சந்தோசமாக இருக்கு உதவ வேண்டும்.

சந்தோசமாக இருக்க, பகிர்ந்துகொள்ள புத்தாண்டும் ஒரு தருணம், அவ்வளவே.

கணினி தேசம் said...

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா!

முதல் வருகைக்கு நன்றி...


//அப்ப - மற்ற வருடங்களில் சம்திங் சம்திங்...//
எப்பிடித்தான் கண்டுபுடிக்கரீங்களோ..!!

தங்களுக்கும் அமித்துவுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

அ.மு.செய்யது said...

//சந்தோசமாக இருக்க, பகிர்ந்துகொள்ள புத்தாண்டும் ஒரு தருணம், அவ்வளவே.//

கண்டிப்பாக நானும் அக்கருத்தை வழிமொழிகிறேன்.இருப்பினும் நான் அவ்வாறு எழுதக் காரணம்
அமுதா என்பவர் எழுதிய‌ "உங்களுக்குத் தெரியுமா? " என்ற பதிவு தான்.(http://nandhu-yazh.blogspot.com/)
புத்தாண்டை இப்படியும் கொண்டாடலாம் என்று உணர்த்திய வார்த்தைகள்.