நேற்று காலை குடும்ப சகிதமாக துபாயிலுள்ள கோவிலுக்கு சென்றிருந்தோம். இந்நாட்டில் உள்ள ஒரேஒரு ஹிந்து கோவில் துபாய் நகரின் "பர் துபாய்" பகுதியில் இருக்கிறது. குளிரை பொருட்படுத்தாது காலை 6:45 மணிக்கெல்லாம் (ஷார்ஜாவில்) வீட்டை விட்டு இறங்கிவிட்டோம். சொல்லி வைத்தாற்போல் உடனே டாக்ஸி கிடைத்தது. வெள்ளிக்கிழமை ஆதலால் ரோடு காற்று வாங்கியது, பத்து நிமிடத்திற்குள் துபாய் நகரத்தினுள் இருந்தோம் (மாற்ற நாட்களில் இரண்டு மணிநேரம் ஆகுமாக்கும்!!). வழியில் மணிக்கூண்டில் வெப்பநிலை 15 டிகிரீ என்றது.
மணிக்கூண்டு (The popular Clock Tower)
கொசுறு: இருபது வருடத்திருக்கு முன் இப்படி இருந்தது ஓட்டுனரிடம் துபாய் அருங்காட்சியகத்திற்கு போகச்சொன்னோம். அதன் அருகில் கோவில் அமைத்துள்ளது. ஒரு கட்டிடத்தில் கிருஷ்ணர் கோவில் மற்றுமொரு கட்டிடத்தில் சிவன் கோவில் மற்றும் சீக்கியர் கோவில், அனைத்தும் வட இந்திய வழிமுறைப்படி இருக்கிறது.
இப்படியாக கோவிலுக்கு சென்றோம் வணங்கினோம். (பட் மேட்டர் என்னன்னா..)
அங்கே நம் பெரிய கவுண்டரை (பெ.க) பார்த்தோம். அவருடன் இருந்த நேரத்தில் நிகழ்ந்தவை கீழே தொகுத்துள்ளேன்.
பெ.க: "ஏனுங்க தம்பி நீங்க கோயம்பத்தூருங்களா" (கேட்டுக்கொண்டே நெருங்கினார்)
நான்: அட எப்பிடி கண்டுபுடிச்சீங்க?
பெ.க: நம்மூர் பசங்கள பாத்தா தெரியாதுங்களா. (நெத்தியில ஒட்டியிருக்கோ?)
மகனுக்கு இங்கதான் வேலை, ரெண்டு வாரம் வந்துட்டு போங்கப்பான்னு நெறைய காசு செலவு செஞ்சு கூட்டீட்டு வந்துருக்கான். அவனுக்கு வேலை அதிகமா அதான் இப்போ வரலை. (அவர் கண்களில் மகனின் பெருமையும், பூரிப்பும் நெகிழ வைத்தது)
(அறிமுகமேலாம் முடிந்தபிறகு...)
பெ.க: ஏனுங்க தம்பி நான் ஷார்ஜா போகோணும், இவத்தாலைக்கு இருந்து எப்பிடி போறது?
நான்: நாங்களும் ஷார்ஜா தான் போரோங்க. எங்க கூடவே வாங்க.
பெ.க: சரிப்பா, அங்க ஊர்காரன் ஒருத்தன் இருக்கான், பாக்க போறேன்.
ஏனப்பா, கோயில்கிட்ட படகெல்லாம் இருக்குன்னாங்க எங்க?
நான்: கோயிலுக்கு பின்னாடி இருக்குங்க வாங்க போய் பார்த்துட்டு, அந்த பக்கமே உக்கார்ந்து பிரசாதத்தையும் (பூரி + சென்னா மசால்!! ) சாப்பிட்டுட்டு வரலாம்.
சென்ற பின்..
பெ.க: அட..என்ன தம்பி, இவ்வளோ பெரிய ஆறு ஓடுது. பாலைவனத்துல எப்பிடிப்பா?
நம்ம பவானி ஆறு அளவுக்கு இருக்கே.
நான்: இது துபாய் கிரீக்'னு (Dubai Creek) சொல்வாங்க. கடல் தண்ணிய ஆறு மாதிரி திருப்பி விட்டிருக்காங்க. துபாய்க்கு அழகு சேர்க்கரதுல இது ரொம்ப முக்கியமானதுங்க.
இந்த சின்ன சின்ன படகாட்டமா இருக்கறதுல, இந்த ஊர்க்காசு ஒரு ரூபா குடுத்த அந்த பக்கமா கொண்டுபோய் விடுவாங்க. இதுக்கு பேரு ஆப்ரா (Abra). அது பத்தாம ஏசி படகு (Water Bus) விட்டிருக்காங்க அதுக்கு நாலு ரூபா.
ஆப்ரா படகுகள்
சொகுசு படகு (Water Bus)
(மேலும் கொஞ்சம் மொக்கை போட்டுக்கொண்டே பிரசாதம் சாப்பிடோம்)
நான்: கிளம்பலாங்களா?
பெ.க: சரிப்பா... எப்பிடி போறதுன்னு சொல்லவே இல்ல?
நான்: பஸ்ல தாங்க.
பெ.க: ஏனுங்க தம்பி பஸ்ஸா? துபாயில அதெல்லாம் இல்லைனாங்க.
நான்: நல்லாவே இருக்கு, பத்து நிமிஷம் நடந்தா பஸ் ஸ்டாண்ட் வந்துடும்.
(பழைய டெக்ஸ்டைல் மார்கெட் வழியாக நடந்து பஸ் ஸ்டாண்ட் சென்று அடைந்தோம் )
பெ.க: பரவாயில்லை ரொம்ப பெருசாதான் இருக்கு. அனா எல்லாம் நம்மூர்க்காரங்களா இருக்காங்க.
நான்: அமாங்க, நம்ம நாட்டுக்காரங்கதான் இங்க அதிகம் வேலைக்கு வராங்க.
நான்: அங்க கடைசீல அடுக்குமாடி பஸ் தெரியுதுங்களா, அதுதான் ஷார்ஜா போற பஸ். ஆளுக்கு ஐஞ்சு ரூபா தான்.
பெ.க: அடேங்கப்பா! இவ்வளோ கூட்டமா? ஏம்பா, வரிசைல நின்னா ரொம்ப நேரம் ஆகும் போல. (முழித்தார்!!) பொழுது சாயறதுக்குள்ள வந்து சேரணுமே.
பெ.க: எல்லா பஸ்லயும் சன்னல வேற சாத்தீருக்காங்க.. இல்லன்ன துண்டை போட்டு சீட்டு புடிச்சிரலாம்.
(மேலும்..கவலையடைந்தார்)
நான்: கவலைப்படாதீங்க கவுண்டரே! லேடீஸ் கூட வந்தா, வரிசை எல்லாம் நிக்கவேண்டாம்..நேராபோய் ஏறிக்கலாம். அதுவும் எங்க குழந்தை வேற கைல இருக்கு..எங்க கூட வாங்க.
பெ.க: அட, இது கூட நல்லாஇருக்கே.
(ஏறிக்கொண்டோம்...பஸ் கிளம்பியது.. இருபது நிமிடத்தில் அவருக்கான இடம் வந்ததும் இறக்கி விட்டோம்)
பெ.க: உங்கள பாத்ததுல சந்தோசம்ப்ப, ஊருக்கு வந்த கண்டிப்பா வீட்டுக்கு வாங்க, தென்னந்தோப்பு இருக்கு எளனி சாப்பிடலாம். (சொல்லிக்கொண்டே இறங்கிச்சென்றார்)
அவரைப்பார்ததில் எங்களுக்கும் சந்தோசம் என நினைத்துக்கொண்டே வீடு சேர்ந்தோம்.
முற்றும்.
டிஸ்கி 1: இதனால சகலமானவர்களுக்கும் அறிவிக்கறது என்னன்னா துபாயில பஸ் ஸ்டாண்ட் இருக்கு..இருக்கு..இருக்கு.!! (அப்ப விவேகானந்தர் குறுக்கு தெரு இருக்கான்னு கேட்டு டார்ச்சர் பண்ணக்கூடாது!).
டிஸ்கி 2: அனா "மீனா" பஜார் இருக்கு. ரொம்ப பிரபலம் கூட. மீனா எப்போ வந்தாங்கன்னுதான் தெரியலை
டிஸ்கி 3: துபாய் உள்ளூர் பஸ், எங்க ஏறி எங்க இறங்கினாலும் ரெண்டு ரூபா தான். ஒரு வாட்டி ரெண்டு மணி நேரம் போனோம்..அதுக்கும் ரெண்டு ரூபா தான். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... ரொம்ப நல்லவங்க..!
டிஸ்கி 4: ஆப்ரா படகுல தினமும் முப்பது ஆயிரம் பேர் பயணிக்கறாங்க.
(நம்ம தண்ணியில மிதக்கரா மாதிரி போறது ஒரு தனி சுகம் தான் போங்க)

29 comments:
இருபது வருஷத்துக்கு முன்னாடி - நம்ம ஆபீச்சு அங்க இல்லையா?
இன்னைக்கு அனுமன் ஜெயந்தி ... நல்லவேள நியாபக படுத்துநீக...
6:45???
அர்த்த ராத்திரில அப்படியென்ன வேல?
// Ravee (இரவீ ) said...
இருபது வருஷத்துக்கு முன்னாடி - நம்ம ஆபீச்சு அங்க இல்லையா?//
இருந்தது, அனா இந்த பத்துல கவர் ஆகலை.
//பெரிய கவுண்டரை (பெ.க) பார்த்தோம்//
யே.... சின்ன கவுண்டர் VS பெரிய கவுண்டர்.
// Ravee (இரவீ ) said...
இன்னைக்கு அனுமன் ஜெயந்தி ... நல்லவேள நியாபக படுத்துநீக...//
அப்படியா..எனக்கு தெரியாதே!!
// Ravee (இரவீ ) said...
6:45???
அர்த்த ராத்திரில அப்படியென்ன வேல?//
உங்களுக்கு மட்டும் சூரியன் 11 மணிக்கு தான் உதிக்குமே!
உங்களையெல்லாம்...
எங்க சுட்டி கூட ஒரு நாள் இருந்து பாருங்க, முழுசா மூணு மணிநேரம் தொடர்ந்தாப்பல தூங்க விடமாட்டான்.
நீங்க கோயம்புத்தூரா? சும்மா அள்ளி விடுறது ...
//Ravee (இரவீ ) said...
//பெரிய கவுண்டரை (பெ.க) பார்த்தோம்//
யே.... சின்ன கவுண்டர் VS பெரிய கவுண்டர்.//
இங்க என்ன சண்டையா நடக்குது?
நாங்கதான் வெள்ளைக்கொடி வேந்தனாச்சே!
//நம்மூர் பசங்கள பாத்தா தெரியாதுங்களா. (நெத்தியில ஒட்டியிருக்கோ?)//
அட நான் பார்த்தப்ப வேறல்ல ஒட்டியிருந்துது... :) :))))
//Ravee (இரவீ ) said...
நீங்க கோயம்புத்தூரா? சும்மா அள்ளி விடுறது ...//
எங்களை பொருத்தவரைக்கும் கோவை திருப்பூர் எல்லாம் ஒரே ஊர் மாதிரிதான்.
இப்பதான் மாவட்டம் பிரிச்சிட்டாங்க.
//Ravee (இரவீ ) said...
//நம்மூர் பசங்கள பாத்தா தெரியாதுங்களா. (நெத்தியில ஒட்டியிருக்கோ?)//
அட நான் பார்த்தப்ப வேறல்ல ஒட்டியிருந்துது... :) :))))//
இந்த குசும்பு தான வேண்டாங்கறது.
//இது துபாய் கிரீக்'னு (Dubai Creek) சொல்வாங்க. கடல் தண்ணிய ஆறு மாதிரி திருப்பி விட்டிருக்காங்க. துபாய்க்கு அழகு சேர்க்கரதுல இது ரொம்ப முக்கியமானதுங்க.//
அழகு மட்டும் இல்ல, என் தனிமைக்கும் - இந்த இடமே பல நாள் மருந்தளித்தது.
உங்க நல்ல மனசுக்கு - சுமாரா இருக்குற பஸ்ஸ்டாண்ட் கூட உங்க போட்டோல சூப்பரா இருக்கு.
//அங்க கடைசீல அடுக்குமாடி பஸ் தெரியுதுங்களா, அதுதான் ஷார்ஜா போற பஸ். ஆளுக்கு ஐஞ்சு ரூபா தான்//
சாதரண பஸ் கூட இருக்கு, ஏன் இப்படி ஒரு விளம்பரம் ?
//கவலைப்படாதீங்க கவுண்டரே! லேடீஸ் கூட வந்தா, வரிசை எல்லாம் நிக்கவேண்டாம்..நேராபோய் ஏறிக்கலாம்.//
எனக்கு தெரிஞ்சு - இங்க லேடீஸ்கு கிடைச்ச ஒரு நல்ல விஷயம்.
//Ravee (இரவீ ) said...
உங்க நல்ல மனசுக்கு - சுமாரா இருக்குற பஸ்ஸ்டாண்ட் கூட உங்க போட்டோல சூப்பரா இருக்கு.//
ஒரு கைல சுட்டிய வைச்சுகிட்டே எடுத்தது. அதான் காரணம்!
//ஏறிக்கொண்டோம்...பஸ் கிளம்பியது.. இருபது நிமிடத்தில் அவருக்கான இடம் வந்ததும் இறக்கி விட்டோம்//
ஒரு காப்பித்தண்ணி வச்சு குடுக்காம அனுபிட்டியலே அப்பு ...
// Ravee (இரவீ ) said...
எனக்கு தெரிஞ்சு - இங்க லேடீஸ்கு கிடைச்ச ஒரு நல்ல விஷயம்.
//
கண்டிப்பா.
// Ravee (இரவீ ) said...
ஒரு காப்பித்தண்ணி வச்சு குடுக்காம அனுபிட்டியலே அப்பு ...
//
வழியிலேயே இறங்கிட்டதால..பாசத்த காட்ட முடியலை
//கணினி தேசம் said...
// Ravee (இரவீ ) said...
6:45???
அர்த்த ராத்திரில அப்படியென்ன வேல?//
உங்களுக்கு மட்டும் சூரியன் 11 மணிக்கு தான் உதிக்குமே!
உங்களையெல்லாம்...
எங்க சுட்டி கூட ஒரு நாள் இருந்து பாருங்க, முழுசா மூணு மணிநேரம் தொடர்ந்தாப்பல தூங்க விடமாட்டான்.//
நல்லா யோசிச்சு சொல்லுங்க - நான் இருக்கும் போது கூடவா ...
// Ravee (இரவீ ) said...
நல்லா யோசிச்சு சொல்லுங்க - நான் இருக்கும் போது கூடவா ...
//
தூங்கற சமயத்துல வந்ததால உங்களுக்கு சரியா தெரியல.
எல்லாம் நல்லா தான் இருக்குங்க !!!! இருந்தாலும் நம்ம சென்னையில இருக்க ரத்தக் கறை ( உபயம்: பான்பராக்) பஸ் ஸ்டாப்புகள அடிச்சுக்க முடியுமா ? என்பவர்கள் என் கட்சி !!!!!
// அ.மு.செய்யது said...
எல்லாம் நல்லா தான் இருக்குங்க !!!! இருந்தாலும் நம்ம சென்னையில இருக்க ரத்தக் கறை ( உபயம்: பான்பராக்) பஸ் ஸ்டாப்புகள அடிச்சுக்க முடியுமா ? என்பவர்கள் என் கட்சி !!!!!//
வாங்க அ.மு.செய்யது!
கவலைப்படாதீங்க.. இங்கயும், ஆங்காங்கே ரத்தக் கறை ( உபயம்: அதே பான்பராக்) சுவர்கள் இருக்கத்தான் செய்கிறது. நம்ம மக்கள் எங்க போனாலும் முத்திரை பதிக்காம விடுவாங்களா.
@அ.மு.செய்யது!
சென்னை பேருந்தும், லோக்கல் ட்ரெயின் பயணமும் மறக்க முடியுமா? ஏழு வருடம் என் வாழ்வில் என்னோடு பயணித்தவைகள் ஆயிற்றே!!
அருமையாச்சொல்லிட்டியளே ...
ம்ம்ம் ...
ஒரு ஆறு வருடம் அபுதாபியில் தான் இருந்தேன்
பழைய ஞாபகங்களை கொண்டு வந்துவிட்டீர் ...
\\ நாங்கதான் வெள்ளைக்கொடி வேந்தனாச்சே!\\
அம்பூட்டு நல்லவரா நீங்க ...
// அதிரை ஜமால் said...//
வாங்க அதிரை ஜமால்!!
// அருமையாச்சொல்லிட்டியளே ... ம்ம்ம் ...//
நன்றிங்கோ !!
// ஒரு ஆறு வருடம் அபுதாபியில் தான் இருந்தேன்
பழைய ஞாபகங்களை கொண்டு வந்துவிட்டீர் ...//
ஆஹா அப்படியா.. சொல்லவேஇல்லை!
நான் ஒரு வாட்டிதான் அபு தாபி போயிருக்கேன்!
@ அதிரை ஜமால் said...
\\ நாங்கதான் வெள்ளைக்கொடி வேந்தனாச்சே!\\
அம்பூட்டு நல்லவரா நீங்க ...//
நாங்க அஹிம்ஷா வாதியாக்கும்.. (யாரு அடிவாங்கறது,அதான் )
:-))))
Post a Comment