Thursday, January 1, 2009

விடியலில் வந்த பட்டாம்பூச்சி"கணினி தேசம்" - மென்பொருள் துறையில் பணிபுரிவதால், அது சார்ந்த "அறிவுப் பகிர்வு" செய்யவே துவங்கினேன், அதுவும் ஆங்கிலத்தில் எழுதுவதாகத்தான் முடிவு. ஆனால் இதுநாள் வரையில் மென்பொருள் பற்றிய ஒரு சிறிய பதிவு கூட இல்லை. "Project Management Professional" பற்றிய ஒரு பதிவு மட்டுமே உண்டு.

நீங்கள் அறிவீர்களா, நான் பதிவுலகத்தை பார்க்காமல் பதிவுகளை எழுதத் துவங்கினேன் என்று?. தானாக ஒரு நண்பர் என் தளத்திற்கு வந்து பின்னூட்டமிட்டார் (எப்படி கண்டுபிடித்தார் என தெரியாது!!). அவரை தொடர்ந்து சென்று, அவருக்கு பின்னூட்டமிட்டவர்களைத் தொடர்ந்து சென்றேன். அஹா, இது ஒரு புதிய உலகம் என்பது விளங்கிற்று. இங்கே வழிநடத்தும் குருக்களும் தொடர்ந்து செல்லும் சிஷ்யர்களும் உண்டு, தோள் கொடுக்கும் தோழர்,தோழிகள் உண்டு, காதல் சொல்லும் கவிகளும் உண்டு. கோட்பாடுகளை எழுதுவதோடு நிற்காமல், செயலில் காட்டுபவர்களும் உண்டு.

பத்து ஆண்டுகளுக்கு மேலாய், கணினிக்குள் தலை புதைத்து, ஆங்கிலத்தில் அச்சடித்து, ஆங்கிலத்தில் உரையாடி, ஆங்கிலத்தொடே வாழ்ந்து என் தமிழ் அகராதியில் பல பக்கங்களை தொலைத்திருந்த எனக்கு, புதிய பாதையைக் காட்டியது இந்த வலைப்பூ உலகம். சில பதிவுகளை படிக்கும்போது அதன் வார்த்தைஜாலங்களும், மொழிச் செறிவும், தமிழைத் தொலைத்த என் மனதை குறுக வைத்தது.

தமிழில் படித்தால் மட்டும் போதாது என சிறு சிறு பதிவாகத் எழுதுகிறேன். இப்போது என்னையும் ஊக்கப்படுத்த சில பதிவர்கள் இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.


புத்தாண்டின் விடியலில் நண்பர் இரவீ மேலும் ஒரு ஊக்கமருந்தாய் "பாட்டாம்பூச்சி" தந்துள்ளார். அவருக்கு நன்றிகள் பல.


"பட்டாம்பூச்சி" விருதின் வழிமுறைப்படி விருது பெற்றவர்கள் மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

பகிர்ந்துகொள்ள நான் அழைக்கும் மூவர்...

"தமிழ்நெஞ்சம்" நமக்காக பல பயனுள்ள மென்பொருள் பற்றிய பதிவுகளை தருபவர். அயராது, தினம் ஐந்து பதிவுக்கு குறையாமல் இடுபவர். இந்த வருடத்தில் 795 இடுகைகள் (தமிழ்2000) என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

"கற்போம் வாருங்கள்" என நம்மை அழைத்து, சில முத்தான பதிவுகள் இடும், அதிரை ஜமால். இவர் பிற பதிவர்களுக்கு ஊக்கமளிக்கும் பின்னூட்ட பிதாமகர்!!

"தலை வணங்கா தமிழன்"- தமிழின் மீது இவருக்கிருக்கும் காதலை என்னென்று கூற. குறுந்தொகை பாடல்களுக்கு, உரை எழுத துவங்கினார், ஏனோ ஒரு மாதமாக எழுதுவதில்லை. அவர் மீண்டும் எழுத வேண்டும் என்பதற்காகவே இந்த பட்டாம்பூச்சியை அளிக்கிறேன் (மாட்ட வைச்சுடோம்ல!!).


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


தொலைந்த பக்கங்களின் தேடல் தொடரும்.

நன்றி.


15 comments:

அ.மு.செய்யது said...

உங்கள் வலைத்தளம் புத்தாண்டுக்கு புதுவண்ணம் தீட்டியது போல் ஜொலிக்கிறது.
ஆரம்பமே அசத்தலா ????

பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கட்டும் !!!!
வாழ்த்துக்கள் கணிணி !!!!!

கணினி தேசம் said...

//அ.மு.செய்யது said...

உங்கள் வலைத்தளம் புத்தாண்டுக்கு புதுவண்ணம் தீட்டியது போல் ஜொலிக்கிறது.
ஆரம்பமே அசத்தலா ????
//
புது வருஷத்துல புதுசா ஏதாவது செய்யனும்ல :-)..


// பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கட்டும் !!!!
வாழ்த்துக்கள் கணிணி !!!!!//

மிக்க நன்றி சகா.

Ravee (இரவீ ) said...

நன்றி குமார், உங்களிடம் பட்டாம்பூச்சிய பிடித்தவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Ravee (இரவீ ) said...

//அவரை தொடர்ந்து சென்று, அவருக்கு பின்னூட்டமிட்டவர்களைத் தொடர்ந்து சென்றேன். அஹா, இது ஒரு புதிய உலகம் என்பது விளங்கிற்று. இங்கே வழிநடத்தும் குருக்களும் தொடர்ந்து செல்லும் சிஷ்யர்களும் உண்டு, தோள் கொடுக்கும் தோழர்,தோழிகள் உண்டு, காதல் சொல்லும் கவிகளும் உண்டு. கோட்பாடுகளை எழுதுவதோடு நிற்காமல், செயலில் காட்டுபவர்களும் உண்டு. //

நல்ல நடை, நீங்க தொடர்ந்து சென்றதை சொல்லவில்லை - இந்த வரிகளில் உள்ள வார்த்தை பிரவேசம்.

Ravee (இரவீ ) said...

//தமிழ் அகராதியில் பல பக்கங்களை தொலைத்திருந்த எனக்கு//

நல்லா பாருங்க அது என் காணமல் போன அகராதியா கூட இருக்கலாம்.

தமிழ்நெஞ்சம் said...

புத்தாண்டும் அதுவுமாக தமிழ்நெஞ்சத்துக்கு வாழ்த்துத் தெரிவித்து மின்னஞ்சல் எழுதினீர்கள்.

இங்கே உங்கள் தளத்தின் டெம்ப்ளேட் அருமை.

ரிஷான் ஷெரீஃப் இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பிலிருக்கிறார் : அவரும் தமிழ்நெஞ்சத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டு இருக்கிறார்.

புதுவருட வாழ்த்துக்கள். நன்றி

கணினி தேசம் said...

// Ravee (இரவீ ) said...

நன்றி குமார், உங்களிடம் பட்டாம்பூச்சிய பிடித்தவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

நன்றி இரவீ

கணினி தேசம் said...

// Ravee (இரவீ ) said...
நல்ல நடை, நீங்க தொடர்ந்து சென்றதை சொல்லவில்லை - இந்த வரிகளில் உள்ள வார்த்தை பிரவேசம்.//

நெசமாத்தான் சொல்றீங்களா?

கணினி தேசம் said...

//Ravee (இரவீ ) said...

//தமிழ் அகராதியில் பல பக்கங்களை தொலைத்திருந்த எனக்கு//

நல்லா பாருங்க அது என் காணமல் போன அகராதியா கூட இருக்கலாம்.
//


ரொம்ப நல்லதா போச்சு...வாங்க சேர்ந்து தேடலாம்.

கணினி தேசம் said...

// தமிழ்நெஞ்சம் said...

புத்தாண்டும் அதுவுமாக தமிழ்நெஞ்சத்துக்கு வாழ்த்துத் தெரிவித்து மின்னஞ்சல் எழுதினீர்கள்.

இங்கே உங்கள் தளத்தின் டெம்ப்ளேட் அருமை.

ரிஷான் ஷெரீஃப் இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பிலிருக்கிறார் : அவரும் தமிழ்நெஞ்சத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டு இருக்கிறார்.

புதுவருட வாழ்த்துக்கள். நன்றி//

வாங்க தமிழ்நெஞ்சம்!!
வாழ்த்துக்கு...நன்றிகள்.

தங்களின் வலைப்பூவில் இடம்பெற்ற மென்பொருட்கள் சில எனக்கு பயனளித்தன.
அதற்கு நன்றி தெரிவிக்கத்தான் பட்டாம்பூச்சியை தங்களுக்கு அனுப்பியுள்ளேன்.

Ravee (இரவீ ) said...

///கணினி தேசம் said...

// Ravee (இரவீ ) said...
நல்ல நடை, நீங்க தொடர்ந்து சென்றதை சொல்லவில்லை - இந்த வரிகளில் உள்ள வார்த்தை பிரவேசம்.//

நெசமாத்தான் சொல்றீங்களா?///

அட உண்மைய சொன்னா நம்புங்கப்பா....

அதிரை ஜமால் said...

பட்டாம்பூச்சி பெற்றவருக்கும் பகிர்ந்தவருக்கும் வாழ்த்துக்கள்.

Template அழகு.

கணினி தேசம் said...

வாங்க அதிரை ஜமால்!

புது வருட விடுமுறைய கொண்டாட போய்ட்டீங்களா? ரெண்டு நாளா சத்தத்தையே காணோம்.

பட்டாம்பூச்சி வாங்கிய உங்களுக்கும் ....வாழ்த்துக்களும், நன்றிகளும்.

உங்க பட்டாம்பூச்சிய யாருக்கு குடுக்கறதுன்னு முடிவு பண்ணிடீங்கள?

புதியவன் said...

பட்டாம் பூச்சி விருது பெற்றதற்கும்
உங்களிடம் விருதை பெற்றவர்களுக்கும்
வாழ்த்துக்கள்...

கணினி தேசம் said...

//புதியவன் said...
பட்டாம் பூச்சி விருது பெற்றதற்கும்
உங்களிடம் விருதை பெற்றவர்களுக்கும்
வாழ்த்துக்கள்...
//

வாங்க புதியவன்,

வாழ்த்துக்கு நன்றி.