Monday, March 2, 2009

ஏன் இப்படி?

ஒரே குத்துதான் குத்தினாள்
அவன் வலியில் துடித்தான்
கத்தினான், கதறி அழுதான்

கனப்பொழுதில் எல்லாம்
நடந்தேறியது
ஏன் இப்படி?
எதற்கிந்த கொடூரம்
கொஞ்சமும் இரக்கமில்லாமல்


உதவ முடியாமல்
செய்வதறியாமல்
உறைந்து போய்
நான் நிற்க

"பீஸ் வெளியில கட்டிடுங்க"
என்றாள் எங்கள் ஐந்து
மாதக் குழந்தைக்கு
தடுப்பூசியிட்ட நர்ஸ்!!

அவளைத் திட்டிக்கொண்டே
பணத்தைக் கட்டிவிட்டு
வருவதற்குள் குழந்தை
வலி மறந்திருந்தான்
வழமையான புன்முறுவல் பூத்தான்
எனக்கும் வலி குறைந்தது.


16 comments:

நட்புடன் ஜமால் said...

அட ஊசியா!

கணினி தேசம் said...

@நட்புடன் ஜமால் said...

அட ஊசியா!

//

அமாங்க ஜமால், நேர்ல பார்க்கும்போது நமக்கு வலிக்கும்.

Poornima Saravana kumar said...

ஆ!! கவிதையாவே சொல்லிட்டீங்ளா??

நான் பரிக்‌ஷித்திர்க்கு தடுப்பூசி போடும் பொழுது ரூமிர்க்கு வெளியில் தான் நிற்ப்பேன்..

அவனின் வலியைப் பார்க்கும் சக்தி எனக்கு இல்லை:(((

கணினி தேசம் said...

வாங்க பூர்னிமா

//நான் பரிக்‌ஷித்திர்க்கு தடுப்பூசி போடும் பொழுது ரூமிர்க்கு வெளியில் தான் நிற்ப்பேன்..

அவனின் வலியைப் பார்க்கும் சக்தி எனக்கு இல்லை:(((//

அந்த பிஞ்சு கால அமுக்கிப் புடிச்சி குத்தும்போது.. அப்பப்பா!!
நமக்கே ஊசி குத்தின மாதிரி வலிக்கும்.

ட்ராப்ஸ் மட்டும் கொடுக்கறத்தா இருந்தா எவ்வளவு சுலபம்.

RAMYA said...

நான் கூட பயந்து பயந்து படிச்சேன்
அட என்னப்பா இது ஊசியா
நல்ல ரசனையோட எழுதி இருக்கீங்க
வாழ்த்துக்கள்.

RAMYA said...

வால்பையனின் பதிவில்
என் பதிலுக்கு தங்களின் ரசனை
எனக்கு மிகவும் உற்சாகமா இருந்தது
மிக்க நன்றி!!!

கணினி தேசம் said...

//RAMYA said...

நான் கூட பயந்து பயந்து படிச்சேன்
அட என்னப்பா இது ஊசியா
நல்ல ரசனையோட எழுதி இருக்கீங்க
வாழ்த்துக்கள்.//


வாங்க ரம்யா

முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி!

கணினி தேசம் said...

//RAMYA said...

வால்பையனின் பதிவில்
என் பதிலுக்கு தங்களின் ரசனை
எனக்கு மிகவும் உற்சாகமா இருந்தது
மிக்க நன்றி!!!//

உங்களைப்போன்றவர்கள் மேலும் எழுத ஊக்கபடுத்துவது தான் எங்கள் முழுநேரத் தொழில் :-))))

அமுதா said...

/*ஒரே குத்துதான் குத்தினாள்
அவன் வலியில் துடித்தான்
கத்தினான், கதறி அழுதான்*/
ஒரு நிமிஷம் பயந்துட்டேன்.

/*வழமையான புன்முறுவல் பூத்தான்*/
:-))

கணினி தேசம் said...

// அமுதா said...

/*ஒரே குத்துதான் குத்தினாள்
அவன் வலியில் துடித்தான்
கத்தினான், கதறி அழுதான்*/
ஒரு நிமிஷம் பயந்துட்டேன்.

/*வழமையான புன்முறுவல் பூத்தான்*/
:-))
//

வாங்க அமுதா

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி!

ஹேமா said...

வணக்கம் கணணி தேசம்.உங்கள் வீடு வந்திருக்கேன்.முதற் பக்கத்திலேயே இருந்த மூன்று பதிவுகளையும் ரசிதேன்.
கவிதை,அடுத்து அம்மாவின் வயிற்றுக்குள் ஒரு குழந்தையின் குறும்பு.சிந்தனைச் சிரிப்பாக இருந்தாலும் சிலசமயம் உண்மையாகவும் இருக்கலாம்

ஹேமா said...

.
//ஒரே குத்துதான் குத்தினாள்
அவன் வலியில் துடித்தான்
கத்தினான், கதறி அழுதான்

கனப்பொழுதில் எல்லாம்
நடந்தேறியது
ஏன் இப்படி?
எதற்கிந்த கொடூரம்
கொஞ்சமும் இரக்கமில்லாமல்

உதவ முடியாமல்
செய்வதறியாமல்
உறைந்து போய்
நான் நிற்க...//

கவிதை தொடங்கிய விதம் அருமை.என்ன சொல்ல வருகிறீர்கள் என்கிற குழப்பம்.மிச்சப் பகுதி குழப்பம் உடைத்த வரிகள் அருமை.

கணினி தேசம் said...

//ஹேமா said...

வணக்கம் கணணி தேசம்.உங்கள் வீடு வந்திருக்கேன்.முதற் பக்கத்திலேயே இருந்த மூன்று பதிவுகளையும் ரசிதேன்.
கவிதை,அடுத்து அம்மாவின் வயிற்றுக்குள் ஒரு குழந்தையின் குறும்பு.சிந்தனைச் சிரிப்பாக இருந்தாலும் சிலசமயம் உண்மையாகவும் இருக்கலாம்//

வாங்க ஹேமா

முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

கணினி தேசம் said...

//கவிதை தொடங்கிய விதம் அருமை.என்ன சொல்ல வருகிறீர்கள் என்கிற குழப்பம்.மிச்சப் பகுதி குழப்பம் உடைத்த வரிகள் அருமை.//

நீங்க கவிதை எழுதி பட்டம் வாங்கினவங்க.
நான் இப்போதான் ஒன்னங்க்லாஸ்!!

நன்றி !

goma said...

எதுவுமே அனுபவித்து எழுதினாலே அற்புதம்தான் .குழந்தைக்கு போட இருந்த ஊசியின் முனையில் ஒரு கவிதை .சூப்பர்.
அடுத்த பூஸ்டர் எப்போது?இன்னொரு கவிதை ஸ்ரிஞ்சிலிருந்து சொட்டுமே.

கணினி தேசம் said...

வாங்க Goma,

// எதுவுமே அனுபவித்து எழுதினாலே அற்புதம்தான் .குழந்தைக்கு போட இருந்த ஊசியின் முனையில் ஒரு கவிதை .சூப்பர்.
//

நன்றி !!


//அடுத்த பூஸ்டர் எப்போது?இன்னொரு கவிதை ஸ்ரிஞ்சிலிருந்து சொட்டுமே.//
இரண்டு மாதங்கள் கழித்து போடவேண்டும்.