Thursday, December 18, 2008

ஒரு ஆதங்கம் !

திருந்தவே மாட்டாங்களா?
திரும்பத்திரும்ப கண்முன்னால் விபரீதங்கள் நடந்தாலும் திருந்தவே மாட்டாங்களா?

சமீபத்தில் ஊருக்கு சென்றபோது, கோழிக்கோடு சென்று அங்கிருந்து வாடகைக் காரில் கோவை சென்றேன். கோழிக்கோட்டில் விமானம் இறங்கியவுடன் மகன் பிறந்த செய்தி கிடைத்தது...என் வருகைக்கு காத்திராமல் பிறந்த குழந்தை எப்படி இருக்கும்? தங்கமணி நலமா? என்பது போன்ற ஆர்வத்தில் சென்றுகொண்டிருந்தேன் ( சரி மேட்டருக்கு வர்ர்ரேன்!! )

வழியில்.. ஒரு மாருதி 800 காரை கடந்து சென்றோம். வண்டியின் ஓட்டுனரைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தேன். காரணம்? ஓட்டிகொண்டிருந்தது ஒரு பால் வடியும் 10 ~12 வயது சிறுவன்!! அருகில்..அவன் தந்தைபோல, அவரின் மடியில் ஒரு பெண் குழந்தை. பின் சீட்டில் ஒரு சிறுவன் உட்பட மூன்றுபேராவது இருக்கும். அது மாலை ஐந்து மணி. எதிரில் நிறையை பள்ளிமாணவர்கள் வந்தார்கள். இத்தனை பேரையும்வைத்துக்கொண்டு சிறுவன் தன் திறமையை காட்டிகொண்டிருந்தான்.

அவர்கள் மீது எனக்கு அப்படி ஒரு கோபம் வந்தது (அனா ஒன்னும் பண்ணலை..ஹம்..!! )
என் ஓட்டுனர் சிறிதுநேரம் மலையாளத்தில் அவர்களை திட்டிகொண்டே வந்தார்.!!

அது எவ்வளவு ஆபத்தான விஷயம்? விடை கீழே....


இரண்டு நாட்கள் முன்பு புது-டில்லியில் பத்தாம் வகுப்பு மாணவன் Scorpio காரில், அதுவும் இரவு 12 மணிக்கு மேல், தன் நண்பர்களுன் சென்று எதிரே வந்த காரில் மோதி அதிலிருந்த குடும்பமே இல்லாமல் போனது.

இப்போது சிறுவன் சிறையில்! தந்தையின் பணத்தாலும், செல்வாக்காலும் வெளியில் வந்தாலும் இந்தக்கோர நிகழ்வு அவன் வாழ்க்கை முழுவதும் வருந்த வைக்கும் என்பது நிச்சயம்!!

மேலும் படிக்க கீழே சொடுக்கவும்
http://ibnlive.in.com/news/teen-arrested-in-delhi-road-accident-case/80561-3.html

இதனை தடுக்க வேண்டிய நம் சட்டத்தை பாருங்கள்..கேவலம்!!
http://ibnlive.in.com/news/delhi-road-accident-father-liable-for-3-month-jail/80635-3.html


இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாகி வருவது மிகவும் வருத்தத்திற்குரியது.

என்னதான் வசதி படைத்தவராக இருப்பினும் சிறுவர்களிடம் காரைக் கொடுக்கலாமா?
சிறுவன் கார் ஓட்டுவதை பெருமையாக நினைக்கிறார்கள் சில அறிவில்லாத பெற்றோர்கள்.
"விபரீதம் நடக்காதவரை இது போன்ற தவறுகள் மகிழ்விப்பது போல் மாயை தரும். அடுத்தவர் அறிவுரை கூட பொறாமையாகத்தான் தோன்றும்."


கார் ஓட்டுவது என்ன கம்ப சூத்திரமா, சிறு வயதிலிருந்து கற்றுக்கொடுக்க?

ஒரு வாரமோ இல்லை ஒரு மாதமோ போதுமே!


சிறு வயதில் கல்வி தவிர விளையாட்டு, இசை என செய்யக்கூடியவை எவ்வளவோ இறக்கிறது. அதை விட்டுவிட்டு பெரியவர்களின் காரியங்களில் இறங்கவைப்பது வீன்வேலைதான். சரி தானே?

சிறுவர்கள்...சிறுவர்களாக வாழட்டுமே!! மிகச்சில வருடங்கள் மட்டுமுள்ள அந்த வாழ்க்கையை ஏன் கெடுக்க வேண்டும்?

20 comments:

வால்பையன் said...

சிறுவனை அறுவை சிகிச்சை செய்ய வைத்த கொடுமையும் இங்கே நடந்திருக்கிறது.

கணினி தேசம் said...

வாங்க வால்பையன் !! முதல் வருகைக்கு நன்றி...

அமாம், மருத்துவ பெற்றோர் அதை சாதனையாக செய்தித்தாள்களுக்கு கொடுத்ததும்..பின்னர் அனைவரிடமும் வாங்கிக் கட்டிகொண்டதும்..படித்தேன்.


பின்னூட்டத்திற்கு மேலும் ஒரு நன்றி.

- இரவீ - said...

முற்றிலும் உண்மை குமார்,
சொல்பேச்சு கேளாமல், வீட்டில் யாருக்கும் தெரியாமல் இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்று - கடந்த நாலு நாட்களாக - உயிருக்கு போராடி பின் - மூக்கு முகம் இழந்து ராமசந்திரவில் சிகிச்சை பெரும் என் மாமா பய்யனுக்காக வீட்டில் அனைவரும் வருத்தப்பட்டு கொண்டுள்ளோம்.

கணினி தேசம் said...

@Ravee (இரவீ )

அப்பப்பா...படிக்கும்போதே ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.

விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்

- இரவீ - said...

பிரார்த்தனைக்கு நன்றி குமார்.

Poornima Saravana kumar said...

பெற்றோர்களுக்கு இதில் என்ன பெருமை என்று தான் புரியவில்லை!!
விளையாட்டு விபரீதம் ஆகிவிடும் என்று கேள்வி பட்டதில்லையோ!!

கணினி தேசம் said...

வாங்க PoornimaSaran

பின்னூட்டத்திற்கு நன்றி!!

- இரவீ - said...

//PoornimaSaran said...

பெற்றோர்களுக்கு இதில் என்ன பெருமை என்று தான் புரியவில்லை!!
விளையாட்டு விபரீதம் ஆகிவிடும் என்று கேள்வி பட்டதில்லையோ!!
//

என் பிள்ளை பெரிய டான்செர்... பெரிய பாடகன்..., படிப்பில் கெட்டிக்காரன், என்று மற்றவர் பெருமயடிதுகொள்ளும் போது - உண்டாகும் நப்பாசையாக கூட இருக்கலாம்.

Poornima Saravana kumar said...

// Ravee (இரவீ ) said...
//PoornimaSaran said...

பெற்றோர்களுக்கு இதில் என்ன பெருமை என்று தான் புரியவில்லை!!
விளையாட்டு விபரீதம் ஆகிவிடும் என்று கேள்வி பட்டதில்லையோ!!
//

என் பிள்ளை பெரிய டான்செர்... பெரிய பாடகன்..., படிப்பில் கெட்டிக்காரன், என்று மற்றவர் பெருமயடிதுகொள்ளும் போது - உண்டாகும் நப்பாசையாக கூட இருக்கலாம்.

//

நீங்க சொன்ன விசியத்துக்கு எல்லாம் பெருமைப் படலாம் தப்பில்லை. ஆனால் இந்த மாதிரி அடுத்தவகள் உயிருக்கு உலை வைக்கும் விசியத்தில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு??

- இரவீ - said...

//PoornimaSaran said...

// Ravee (இரவீ ) said...
//PoornimaSaran said...

பெற்றோர்களுக்கு இதில் என்ன பெருமை என்று தான் புரியவில்லை!!
விளையாட்டு விபரீதம் ஆகிவிடும் என்று கேள்வி பட்டதில்லையோ!!
//

என் பிள்ளை பெரிய டான்செர்... பெரிய பாடகன்..., படிப்பில் கெட்டிக்காரன், என்று மற்றவர் பெருமயடிதுகொள்ளும் போது - உண்டாகும் நப்பாசையாக கூட இருக்கலாம்.

//

நீங்க சொன்ன விசியத்துக்கு எல்லாம் பெருமைப் படலாம் தப்பில்லை. ஆனால் இந்த மாதிரி அடுத்தவகள் உயிருக்கு உலை வைக்கும் விசியத்தில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு??//

உண்மை தான், படிப்பில் ஆர்வம் உள்ளவனை படிக்க ஊக்குவிக்கலாம்,
விளையாட்டில் ஆர்வம் உள்ளவனை - விளையாட்டில் ஊக்குவிக்கலாம் ...

மேலே சொன்னது உங்களுக்கு சம்மதம் தானே?

அப்படி - விளையாட்டில் ஆர்வம் கொண்டு - மட்டை பந்து விளையாட சென்று (முறையாக - தகுந்த பாதுகாப்புடன் )- நண்பன் அடித்த பந்தை பிடிக்க சென்று - உயிரை (கிண்டி - காவலர் மைதானத்தில்) மாய்துகொண்ட சிறுவனின் பெற்றோர் செய்தது தவறா?

எப்பொழுது - தற்பெருமைக்காக - புகழுக்காக - தன் வாரிசுகளை பெற்றோர் நிற்பந்திக்கிரார்களோ அப்போதே - பக்க விளைவுகள் ஆரம்பித்து விடுகின்றன.

என் மகவு இப்படி செய்தது - அப்படி செய்தது என பெருமையடிக்க நீங்கள் ஆரம்பித்தால் ...
அன்றே நீங்கள் மற்றொரு மகவை துன்புறுத்த காரணம்ஆகிவிடுகின்றீர்.

இந்த பதிவின் (ஆதங்கத்தின்) வேரை தேடி தேடிசெல்லுகையில் எனக்கு தோன்றியது இது...

கணினி தேசம் said...

@ Ravee (இரவீ ) said...
@ PoornimaSaran said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைக் கூட முதலாவதாக வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இரண்டாவதாக வந்தால் அவமானமாக நினைக்கிறார்கள்.

உஸ்ஸப்பப்பா...!! என்னத்தா சொல்ல..!

Tech Shankar said...

உங்கள் பதிவு சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்கிறது.

சுற்றி வளைத்துச் சொல்லாமல் - என்ன நடந்தது என்பதை அப்படியே நேரடியாகக் காண்பது போலச் சொல்லிய விதம் அருமை.

சிறுவர்களுக்கு ஆசை இருக்கலாம் - வண்டி ஓட்டுவதற்கு.

ஆனால் அவர்களுக்கு வண்டியைத் தரக்கூடாது.

வெளிநாடுகளில் ஏரோப்ளேனை ஓட்டுவதற்குக் கூட சிறுவர்களை அனுமதித்தால் அது அவர்கள் கலாசாரம். அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை.

இங்கே விராலிமலையில் ஒரு சிறுவனிடம் கத்தியைக் கொடுத்து அறுவைசிகிச்சை மேற்கொள்ளச் சொன்னார் ஒரு மருத்துவர்.

இந்தச் செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவை.

கணினி தேசம் said...

@Sharepoint the Great said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..

டெல்லி சம்பவத்தை படித்தபின் என் கோபத்தையும் ஆதங்கத்தையும்.. கொட்டித் தீர்க்கவேண்டும்போல் இருந்தது. அதற்கு Blog- ஐ விட சரியான இடம் கிடைக்குமா?

அடுத்தவர்களை கண்டித்து திருத்த முடியாவிட்டாலும்...நாமாவது இதே தவறை செய்யாமலிருந்தால். சுகம்.

நட்புடன் ஜமால் said...

\\என்னதான் வசதி படைத்தவராக இருப்பினும் சிறுவர்களிடம் காரைக் கொடுக்கலாமா?
சிறுவன் கார் ஓட்டுவதை பெருமையாக நினைக்கிறார்கள் சில அறிவில்லாத பெற்றோர்கள். \\

ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பேட்டியெல்லாம் பார்த்த ஞாபகம்.

- இரவீ - said...

விடுமுறை எடுத்து - பதிவு எழுதுறேன்னு சொல்லிட்டு - சத்தம் போடாம இருந்தா நாங்க விட்டுடுவோமா ???

அ.மு.செய்யது said...

நல்ல பயனுள்ள பதிவு. பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

நன்றி தோழா !!!!!

கணினி தேசம் said...

//Ravee (இரவீ ) said...

விடுமுறை எடுத்து - பதிவு எழுதுறேன்னு சொல்லிட்டு - சத்தம் போடாம இருந்தா நாங்க விட்டுடுவோமா ???//

என்ன செய்வீங்க... ??

வீட்டுல சுட்டிய கைல தூக்கி கொடுத்துடறாங்க..அதன் புதுசா ஒன்னும் எழுதமுடியல. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

கணினி தேசம் said...

// அ.மு.செய்யது said...

நல்ல பயனுள்ள பதிவு. பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

நன்றி தோழா !!!!!//


முதல் வருகைக்கு நன்றி... அ.மு.செய்யது

பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

சென்னை டிராபிக் எப்படி இருக்கு?

புதியவன் said...

//சிறுவர்கள்...சிறுவர்களாக வாழட்டுமே!! மிகச்சில வருடங்கள் மட்டுமுள்ள அந்த வாழ்க்கையை ஏன் கெடுக்க வேண்டும்?//

மிகச் சரியான வார்த்தைகள்...
கடந்து சென்ற காலத்தையும் பருவத்தையும் திருப்பப் பெற முடியாது...
அந்த அந்த பருவத்தின் அனுபவங்கள்
கிடைப்பது தான் வாழ்க்கையை முறையாக
வாழ்ந்த திருப்தி தரும்...

கணினி தேசம் said...

// புதியவன் said...

//சிறுவர்கள்...சிறுவர்களாக வாழட்டுமே!! மிகச்சில வருடங்கள் மட்டுமுள்ள அந்த வாழ்க்கையை ஏன் கெடுக்க வேண்டும்?//

மிகச் சரியான வார்த்தைகள்...
கடந்து சென்ற காலத்தையும் பருவத்தையும் திருப்பப் பெற முடியாது...
அந்த அந்த பருவத்தின் அனுபவங்கள்
கிடைப்பது தான் வாழ்க்கையை முறையாக
வாழ்ந்த திருப்தி தரும்...//


வாங்க புதியவன்! கருத்துக்கு நன்றிகள்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.