குழந்தை வாய்ப்பேச பத்து மாதம்
ஆகும் என்கிறது அறிவியல்,
எங்கள் சுட்டி உரையாடுகிறான்
நான்காம் மாதத்திலேயே!
கவனிக்காதிருந்தால் நம்மை அழைப்பதும்
அருகில் சென்று வினாவினால்-
படுத்திருந்தது போதும் என்னை
மேலே தூக்கிக்கொள் என்பான்,
தூக்கியபின் வீட்டை சுற்றிக்காட்டு என்பான்,
நில்லாமல் நடந்துகொண்டே இருக்கவைப்பான்,
கை ஓய்ந்து படுக்கவைத்தால்
சுற்றியது போதாதென்பான்.
பசி என்பான், தூங்கவை என்பான்.
இன்னும் பல பேசிக்கொண்டே இருக்கிறான்,
முகபாவம் என்பதையே மக்கள் மறந்து வாழும்போது -
சந்தோசம், சிணுங்கல், சிரிப்பு, கொஞ்சல்,
கெஞ்சல், கோபம், அழுகை
என முகபாவங்களை தெளிவாகக்
காட்டிப் பேசுகிறான் எங்கள் சுட்டி.
நம்மிடம் மட்டுமல்லாது, விளையாட்டு
பொருட்களையும் நண்பனாய் பாவித்து பேசுகிறான்.
அனைத்தும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அல்ல,
குழந்தைகளால் மட்டுமே பேசக்கூடிய
அந்த தெய்வீக மழலை மொழியில்!
எங்கள் சுட்டி உரையாடுகிறான்
நான்காம் மாதத்திலேயே!
கவனிக்காதிருந்தால் நம்மை அழைப்பதும்
அருகில் சென்று வினாவினால்-
படுத்திருந்தது போதும் என்னை
மேலே தூக்கிக்கொள் என்பான்,
தூக்கியபின் வீட்டை சுற்றிக்காட்டு என்பான்,
நில்லாமல் நடந்துகொண்டே இருக்கவைப்பான்,
கை ஓய்ந்து படுக்கவைத்தால்
சுற்றியது போதாதென்பான்.
பசி என்பான், தூங்கவை என்பான்.
இன்னும் பல பேசிக்கொண்டே இருக்கிறான்,
முகபாவம் என்பதையே மக்கள் மறந்து வாழும்போது -
சந்தோசம், சிணுங்கல், சிரிப்பு, கொஞ்சல்,
கெஞ்சல், கோபம், அழுகை
என முகபாவங்களை தெளிவாகக்
காட்டிப் பேசுகிறான் எங்கள் சுட்டி.
நம்மிடம் மட்டுமல்லாது, விளையாட்டு
பொருட்களையும் நண்பனாய் பாவித்து பேசுகிறான்.
அனைத்தும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அல்ல,
குழந்தைகளால் மட்டுமே பேசக்கூடிய
அந்த தெய்வீக மழலை மொழியில்!
22 comments:
// கை ஓய்ந்து படுக்கவைத்தால்
சுற்றியது போதாதென்பான்.
பசி என்பான், தூங்கவை என்பான்.
இன்னும் பல பேசிக்கொண்டே இருக்கிறான் //
இந்த கணிணிதேசத்தில் இந்த கோரிக்கைகள் தான் நம்மை மகிழ்விக்கிறது ??
அருமையான பதிவு நண்பா !!!
வாங்க அ.மு.செய்யது
//இந்த கணிணிதேசத்தில் இந்த கோரிக்கைகள் தான் நம்மை மகிழ்விக்கிறது ??//
நிச்சயமாக. அலுவலகத்திலிருந்து..ஓடோடி வருவது இதற்காகத்தானே !!
//அருமையான பதிவு நண்பா !!!//
நன்றி சகா!
//எங்கள் சுட்டி உரையாடுகிறான்
நான்காம் மாதத்திலேயே!//
காலம் மாறிப்போச்சு - உங்களைபோலவே அமைதிஸ்வரூபமா இருக்கமுடியாது பாருங்க, அதான் வேற ஒண்ணுமில்ல.
//கவனிக்காதிருந்தால் நம்மை அழைப்பதும்//
உங்களுக்கு அவ்ளவு தைரியம் வந்துடுச்சா?
//படுத்திருந்தது போதும் என்னை
மேலே தூக்கிக்கொள் என்பான்,
தூக்கியபின் வீட்டை சுற்றிக்காட்டு என்பான்,
நில்லாமல் நடந்துகொண்டே இருக்கவைப்பான்,
கை ஓய்ந்து படுக்கவைத்தால்
சுற்றியது போதாதென்பான்.
பசி என்பான், தூங்கவை என்பான்.//
சரியான மக்கு அப்பா நீங்க ... ஒன்னு ஒண்ணா உங்க பய்யன் சொல்லிதரவேண்டி இருக்கு ....
//முகபாவம் என்பதையே மக்கள் மறந்து வாழும்போது //
இது என்னை எந்தவிதத்திலும் குறிப்பிடவில்லை.
//நம்மிடம் மட்டுமல்லாது, விளையாட்டு
பொருட்களையும் நண்பனாய் பாவித்து பேசுகிறான்//
பிரித்து பார்க்கும் எண்ணம் வளரும்போதே வளர்க்கப்படுகிறதோ (வளரும்போதே உருவாக்கி விரிவாக்க படுகிறதோ)???
//அனைத்தும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அல்ல//
கண்டிப்பா இல்லை... ஏன்னு எனக்கு நல்லா தெரியும்.
உங்க பதிவு, புதிய வலையட்டை எல்லாம் நல்லா இருக்கு.
/*அனைத்தும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அல்ல,
குழந்தைகளால் மட்டுமே பேசக்கூடிய
அந்த தெய்வீக மழலை மொழியில்! */
:-))
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
// Ravee (இரவீ ) said...
//எங்கள் சுட்டி உரையாடுகிறான்
நான்காம் மாதத்திலேயே!//
காலம் மாறிப்போச்சு - உங்களைபோலவே அமைதிஸ்வரூபமா இருக்கமுடியாது பாருங்க, அதான் வேற ஒண்ணுமில்ல.
//
இரவீ என்னது "அமைதிஸ்வரூபமா"...எங்க வீட்டுல அப்படி எதுவும் சொல்லிடாதீங்க, சண்டைக்கு வந்துருவாங்க.
//Ravee (இரவீ ) said...
//கவனிக்காதிருந்தால் நம்மை அழைப்பதும்//
உங்களுக்கு அவ்ளவு தைரியம் வந்துடுச்சா?//
மும்முரமா வலைப்பூ பார்க்கும் நேரம்.
//Ravee (இரவீ ) said...
சரியான மக்கு அப்பா நீங்க ... ஒன்னு ஒண்ணா உங்க பய்யன் சொல்லிதரவேண்டி இருக்கு ....
//
வேணாம்..!!
Ravee (இரவீ ) said...
//அனைத்தும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அல்ல//
கண்டிப்பா இல்லை... ஏன்னு எனக்கு நல்லா தெரியும்.
//
கண்டிப்பாக "கன்னடம்" இல்லை.
Ravee (இரவீ ) said...
//முகபாவம் என்பதையே மக்கள் மறந்து வாழும்போது //
இது என்னை எந்தவிதத்திலும் குறிப்பிடவில்லை.
//
குற்றமுள்ள நெஞ்சு... அதான், கேர்காமலே குறுகுறுக்குது...
// Ravee (இரவீ ) said...
//நம்மிடம் மட்டுமல்லாது, விளையாட்டு
பொருட்களையும் நண்பனாய் பாவித்து பேசுகிறான்//
பிரித்து பார்க்கும் எண்ணம் வளரும்போதே வளர்க்கப்படுகிறதோ (வளரும்போதே உருவாக்கி விரிவாக்க படுகிறதோ)???//
ரொம்ப ரொம்ப ஓவரா யோசிக்கறீங்க.. உடம்புக்கு நல்லதில்லை.
// Ravee (இரவீ ) said...
உங்க பதிவு, புதிய வலையட்டை எல்லாம் நல்லா இருக்கு.//
நன்றிங்கோ.!!
அமுதா said...
:-))
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
//
வாங்க அமுதா.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
///கணினி தேசம் said...
Ravee (இரவீ ) said...
//முகபாவம் என்பதையே மக்கள் மறந்து வாழும்போது //
இது என்னை எந்தவிதத்திலும் குறிப்பிடவில்லை.
//
குற்றமுள்ள நெஞ்சு... அதான், கேர்காமலே குறுகுறுக்குது...
///
அட நான் உங்கள பத்தி சொல்லவே இல்ல ... இதுக்கெல்லாம் நெஞ்சு குறுகுறுப்பு அடையாதீங்க... :)) (இது எப்படி இருக்கு?)
//இரவீ என்னது "அமைதிஸ்வரூபமா"...எங்க வீட்டுல அப்படி எதுவும் சொல்லிடாதீங்க, சண்டைக்கு வந்துருவாங்க.//
இப்படி நீங்க சொன்னா - நான் உங்க வீட்டுக்கு வந்து "அமைதிச்வருபம்னு" சொல்லி - உங்களுக்கு நல்ல பேரு கிடைக்கும்னு - கனவுல கூட நினைக்காதீங்க ...
நான் வந்தா தங்கமணி Vs ரங்கமணி மேட்ச் தான்.
சரி - உம் அல் குவைன் ஷேக் - காலமானதால் விடுமுறை இருக்கு - எப்ப வீட்டுக்கு வர?
என்ன மொழியில் சிந்திக்கும் இவன் யோசனை ?? :)
ரமணன்... said...//
வாங்க ரமணன்!
முதல் வருகைக்கு நன்றி...
//என்ன மொழியில் சிந்திக்கும் இவன் யோசனை ?? :) //
நல்ல கேள்வி.. என்னவா இருக்கும்? கொஞ்சம் யோசிக்க டைம் குடுங்க...
Post a Comment