Tuesday, January 13, 2009

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்


தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்
நாளை பிறக்கவிருக்கும் தை...
வன்முறையை ஒடுங்கவைக்கும் ஆண்டாக,
தமிழீழ மக்களின் விடியலாக,
பொருளாதார சிக்கல்களை அவிழ்க்கும் ஆண்டாக,
அனைவர் உள்ளத்திலும் அமைதியும், சந்தோஷமும் பொங்கும் ஆண்டாக
அமைந்திட கனிவான வாழ்த்துக்கள்.


-=--=-=-=-=-=-=-=-=-=-=-=-=

செங்கதிர் எழுந்ததடி
எங்கும்ஒளி ஆனதடி
பொங்கல் திருநாளடியே என்னருந் தோழி - அதோ
பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந் தோழி

தெங்கில்இளம் பாளையைப்போல்
செந்நெல்அறுத் தார்உழவர்
அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி - அவர்
சங்கத்தமிழ் பாடிப்பாடி என்னருந் தோழி

கட்டடித்தே நெல்லளந்தே
கட்டைவண்டி ஏற்றுகின்றார்
தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி - அவர்
தோளைவையம் வாழ்த்திற்றடி என்னருந் தோழி

கொட்டுமுழக் கோடுநெல்லைக்
குற்றுகின்ற மாதர்எல்லாம்
பட்டுடை இழுத்துக்கட்டி என்னருந் தோழி - பாடும்
பாட்டெல்லாம் வெல்லமடி என்னருந் தோழி

முத்தமிழ் முழக்கமடி
எங்கணும் இசைக்கருவி
முத்தரிசி பாலில்இட்டார் என்னருந் தோழி - வெல்லக்
கட்டியுடன் நெய்யுமிட்டார் என்னருந் தோழி

தித்திக்கும் தேனும்பலாவும்
செவ்வாழையும் மாம்பழமும்
ஒத்துக்கலந் துண்டாரடி என்னருந் தோழி - அவர்
ஒக்கலும் மக்களுமாக என்னருந் தோழி

எங்கணும் மகிழ்ச்சியடி
எவ்விடத்தும் ஆடல்பாடல்
பொங்கலோ பொங்கல்என்றார் என்னருந் தோழி - நன்கு
பொங்கிற்றடி எங்குமின்பம் என்னருந் தோழி

திங்களிது தையடியே
செந்தமிழ ரின்திருநாள்
இங்கிதுபோல் என்றைக்குமே என்னருந் தோழி - துய்ய
இன்பம்நிலை கொள்ளவேண்டும் என்னருந் தோழி
~ பாரதிதாசனார்



இந்த நல்ல வேளையில், தன் இசையால் அனைவர் மனதையும் கொள்ளைகொண்ட நம் எ.ஆர்.ரஹ்மான் அமெரிக்கர்களில் மனதிலும் இடம்பிடித்து தங்க பூமி (Golden Globe) விருது பெற்றிருப்பது, மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருதினை பெரும் முதல் இந்தியராவார் என்பதால் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.




மீண்டும்.. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

நன்றி!

15 comments:

நட்புடன் ஜமால் said...

\\தமிழீழ மக்களின் விடியலாக,\\

பிரார்த்தனைகளுடன் ...

கணினி தேசம் said...
This comment has been removed by the author.
கணினி தேசம் said...

நட்புடன் ஜமால் said...

\\தமிழீழ மக்களின் விடியலாக,\\

பிரார்த்தனைகளுடன் ...
//

வாங்க ஜமால்,

நிச்சயம் சேர்ந்து பிரார்த்திப்போம்

அமுதா said...

பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் இணைக்க...

http://www.focuslanka.com

அ.மு.செய்யது said...

எல்லாம் ஓகே தான்...ஆனா அந்த நாலாவது போட்டோக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு ???

அ.மு.செய்யது said...

//வன்முறையை ஒடுங்கவைக்கும் ஆண்டாக,
தமிழீழ மக்களின் விடியலாக,
பொருளாதார சிக்கல்களை அவிழ்க்கும் ஆண்டாக,//

சமூக அக்கறையுடன் வாழ்த்து மெய்சிலிர்க்க வைக்கிறது...

அ.மு.செய்யது said...

//இந்த நல்ல வேளையில், தன் இசையால் அனைவர் மனதையும் கொள்ளைகொண்ட நம் எ.ஆர்.ரஹ்மான் அமெரிக்கர்களில் மனதிலும் இடம்பிடித்து தங்க பூமி (Golden Globe) விருது பெற்றிருப்பது, மகிழ்ச்சியளிக்கிறது.//

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்..இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்.

நன்றி சகா ..... வாழ்த்துகளுக்கு......!!!!!!!

கணினி தேசம் said...

அ.மு.செய்யது said...

எல்லாம் ஓகே தான்...ஆனா அந்த நாலாவது போட்டோக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு ???
//
அஹா....போறபோக்குல ஏதாவது கிளப்பி விட்டுறாதீங்க...சாமி..!!

(பாக்கறவங்களுக்கு ஊருல இருக்கற நினைப்பு வரவைக்க மட்டுமே போடப்பட்டுள்ளது)

படங்கள் அனைத்தும் உபயம் :கூகிள் !!

வால்பையன் said...

எண்ணம் போல் வாழ்க்கை அமைய சக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

கணினி தேசம் said...

/அ.மு.செய்யது said...

//இந்த நல்ல வேளையில், தன் இசையால் அனைவர் மனதையும் கொள்ளைகொண்ட நம் எ.ஆர்.ரஹ்மான் அமெரிக்கர்களில் மனதிலும் இடம்பிடித்து தங்க பூமி (Golden Globe) விருது பெற்றிருப்பது, மகிழ்ச்சியளிக்கிறது.//

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்..இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்.

நன்றி சகா ..... வாழ்த்துகளுக்கு......!!!!!!!//

சாதனைகள் செய்வோம்...சாதனைகள் செய்வோருக்கு ஊக்கமளிப்போம்!!!

கணினி தேசம் said...

நட்புடன் ஜமால்,
அமுதா,
அ.மு.செய்யது,
நிலா பிரியன்,
வால்பையன்

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

நன்றி

Poornima Saravana kumar said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

கணினி தேசம் said...

வாங்க பூர்ணிமா,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

கரும்பு கடிச்சீங்களா?

Tech Shankar said...

Happy Pongal and New Year.

Advanced Chithirai 1 valthugal