Wednesday, January 7, 2009

சேமிப்போம்

பொங்கல் திருவிழா நெருங்கிக்கொண்டிருக்கிறது, ஒவ்வொருவரும் என்ன வாங்குவது என திட்டமிட்டு கொண்டிருப்பார்கள்.

"இந்த வாட்டி கண்டிப்பா மூணு செட் எடுத்துரனும்"

"கண்டிப்பா..எனக்கு ஐஞ்சு சேலைக்கு குறையாம வாங்கணும்"

"இந்த மொபைல் ரொம்ப போர்..புதுசு மாத்திரனும்"


இப்படியெல்லாம் யோசிப்பவர்களுள் நீங்களும் ஒருவரா? இந்த பதிவு உங்களுக்குத்தான் !
(அப்ப மத்தவங்க எல்லாம் கிளம்பரதான்னு, கேக்கக்கூடாது.. )


மூன்று சட்டை வாங்குபவருக்கும்.. நான்கு சேலை வாங்குபவருக்கும்..வீட்டில் போதுமான அளவு உடைகள் இல்லையா என்ன? ஆறு மாதம் முன்னால் வாங்கியவை பீரோவில் தூங்க மேலும் புதிய உடைகள் வாங்கி அடுக்குவதால் யாருக்கு என்ன பயன்?


இப்போதெல்லாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது தன் செல்-பேசியை மாற்றாவிட்டால் சிலருக்கு பூமி சுற்றுவது நின்றுவிடுவது போல நினைப்பு.

இதுபோல...நம்மிடம் இருக்கும் பொருள் நல்ல பயனளிக்கும்போதே அதை தூக்கி தூரப்போட்டுவிட்டு மீண்டும் புதியதாய் வாங்குவது சாதாரணமாகி விட்டது.


இன்னும் சொல்வதென்றால், நாம் உணவகங்களில் சாப்பிடும்போது பரிமாறிய உணவை முழுமையாய் சாப்பிடுகிறோமா? பாதி உணவை அப்படியே வைத்துவிட்டு வருவதில்லையா. அமெரிக்கர்கள் 30 சதவிகித உணவை வீணாக்குகிறார்கள் (செய்தி) இது வீனடிப்பத்தின் உச்சக்கட்டம்.

இப்படியெல்லாம் வீணடிப்பதால் என்னவாகும்? நம் இயற்கை வளங்களை மின்னல் வேகத்தில் தீர்த்துகொண்டிருக்கிறோம். அதாவது ஆயிரம் வருடத்திற்கான வளத்தை நூறு வருடங்களிலேயே தின்று ஏப்பம் விடுகிறோம். இயற்கை வளங்கள் என்றால் கனிம, எண்ணை, மரங்கள் மட்டுமல்ல. இவற்றைக்கொண்டு மனிதனால் உருவாக்கப்படும் அனைத்துமே உபயோகத்தில் இருக்கும்வரை வளங்கள் தான் (உ.தா. மின்-விளக்கு எரியும் வரை வளம்தான், உடையாத பழைய நாற்காலியும் வளம்தான்).


Trend/Fashion மாறுகிறது? காலத்திற்கேப்ப நாமும் மாற வேண்டாமா? பழைய பொருட்களையே எப்படி உபயோகப்படுத்துவது?

நிற்க.!

காலம் எப்போது மாறியது? அது மாறவே இல்லை..என்றுமே ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான், சூரியன் இன்னும் கிழக்கில்தான் உதிக்கிறான். ஆகா காலம் மாறிவிட்டது எனும் வாக்கியம் முற்றிலும் தவறானது. மனிதன்தான் மாறியிருக்கிறான். அவன் தேவைகளை அவ்வப்போது மாற்றிகொள்கிறான் அவ்வளவே!


வியாபாரிகள் அதிக விற்பனை செய்வதற்காக கவர்ச்சிகரமான விளம்பரங்களை தருகின்றனர். பொருட்களின் செயல்பாடுகள் மாறாது, வெளித்தோற்றத்தை மட்டும் மாற்றி தருகின்றனர். மக்களும் அப்பாவியாக வாங்கிக்கொண்டே இருக்கின்றனர்.


(பதிவு நீண்டுக்கிட்டே இருக்கா?)

சரி..நான் சொல்வது இதுதான்.


"ஒரு பொருளை வாங்கினால், கட்டாயம் பயன்படுத்துங்கள், வீணடிக்காதீர்கள்"

"இரண்டு பீரோ நிறைய ஆடைகள்...அடுக்கி வைப்பவர்கள், அவர் வாழ்நாளில் அவற்றை ஒவ்வொன்றையும் உபயோகிக்கிறாரா? நிச்சயம் இல்லை..சரிதானே?" இந்த தவறையும் செய்யாதீர்கள், தேவைக்கேற்ப வாங்குங்கள்.


"ஒரண்டு வாங்கினால், ஒன்று இலவசம் போன்ற கவர்ச்சியான விளம்பரங்களால் தேவையற்ற பொருளை வீட்டில் சேர்க்காதீர்கள், அது குப்பையை வீட்டினுள் பத்திரப்படுத்துவதன் சமம்"

இந்த சேமிப்பு நமக்கான சேமிப்பு அல்ல, மனித சமுதாயத்தின் சேமிப்பு!


என்ன திடீர்னு கருத்து கந்தசாமி ஆகிட்டேன்னு பார்க்கறீங்களா?

சில மாதங்கள் முன்பு ஒரு குறும்படம் பார்த்தேன் "Story of Stuff". அதன் தாக்கம்தான் இந்த பதிவு.

நீங்களும் கண்டிப்பாக ஒருமுறையாவது பாருங்கள்.
http://www.storyofstuff.com/


பகுதி 1


பகுதி 2


பகுதி 3


பகுதி 4


பகுதி 5


பகுதி 6


பகுதி 7




நன்றி


28 comments:

- இரவீ - said...

//"ஒரு பொருளை வாங்கினால், கட்டாயம் பயன்படுத்துங்கள், வீணடிக்காதீர்கள்"//

" வாங்கிய பொருளை பயன்படுத்தாதவன் - திருடனுக்கு சமம் " இது யாரோ சொன்னதுன்னு என் குரு எனக்கு சொல்லுவார்.

என் குரு சொன்ன இன்னொரு விஷயம் : "நீ ஒரு புத்தகத்தை வாங்கும் போது அதன் மதிப்பு ஒன்று எனில் - அதை நீ படித்த பிறகு இன்னொருவனுக்கு கொடுத்தால் - அந்த புத்தகத்தின் மதிப்பு இரட்டிக்கும் என்பார்".

மிக அருமையான பதிவு ...

- இரவீ - said...

இனி தமாசு ...
//"இந்த வாட்டி கண்டிப்பா மூணு செட் எடுத்துரனும்"

"கண்டிப்பா..எனக்கு ஐஞ்சு சேலைக்கு குறையாம வாங்கணும்"//

அட உங்க தங்கமணி கேட்டாங்களா?

- இரவீ - said...

//"இந்த மொபைல் ரொம்ப போர்..புதுசு மாத்திரனும்"//

இது உங்க புலம்பல் தான் ...

- இரவீ - said...

//ஆறு மாதம் முன்னால் வாங்கியவை பீரோவில் தூங்க மேலும் புதிய உடைகள் வாங்கி அடுக்குவதால் யாருக்கு என்ன பயன்?//

உங்க திருப்பூருக்கே ஆப்பு வக்கிறீங்களே அப்பு?

- இரவீ - said...

//இப்போதெல்லாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது தன் செல்-பேசியை மாற்றாவிட்டால் சிலருக்கு பூமி சுற்றுவது நின்றுவிடுவது போல நினைப்பு.//

உங்களுக்கு வவுத்தெரிச்சல் ... நாங்க என்ன பண்ணுறது ?

- இரவீ - said...

//நிற்க.!.//
காலவளிக்குது ... மேல இருந்து ஒரு பழைய நாற்காலிய எடுத்து போடுறது ...

கணினி தேசம் said...

வாங்க இரவீ !

மொத போனி..நீங்கதான்

கணினி தேசம் said...

@Ravee (இரவீ ) said...
" வாங்கிய பொருளை பயன்படுத்தாதவன் - திருடனுக்கு சமம் " இது யாரோ சொன்னதுன்னு என் குரு எனக்கு சொல்லுவார்.
//

உங்க குரு நல்ல விசயமா சொல்லிக்கொடுத்தும்...
:-))

கணினி தேசம் said...

Ravee (இரவீ ) said...

இனி தமாசு ...
//"இந்த வாட்டி கண்டிப்பா மூணு செட் எடுத்துரனும்"

"கண்டிப்பா..எனக்கு ஐஞ்சு சேலைக்கு குறையாம வாங்கணும்"//

அட உங்க தங்கமணி கேட்டாங்களா?
//
இங்க நான்தான் செலவாளி!!

கணினி தேசம் said...

Ravee (இரவீ ) said...
உங்க திருப்பூருக்கே ஆப்பு வக்கிறீங்களே அப்பு?
//

எல்லாருமா சேர்ந்து நமக்கு நாமே மொத்தாமா ஆப்பு வைச்சுக்கிறோம்..
heh!!

நான் தேவைக்கற்ப வாங்குங்கன்னு தான் சொல்றேன்.. வாங்கவே வேண்டாம் என்றில்லை.

கணினி தேசம் said...

// Ravee (இரவீ ) said...

//இப்போதெல்லாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது தன் செல்-பேசியை மாற்றாவிட்டால் சிலருக்கு பூமி சுற்றுவது நின்றுவிடுவது போல நினைப்பு.//

உங்களுக்கு வவுத்தெரிச்சல் ... நாங்க என்ன பண்ணுறது ?
//
என் செல்-பேசிக்கு வயசு ஐந்து!!

Ravee (இரவீ ) said...

//நிற்க.!.//
காலவளிக்குது ... மேல இருந்து ஒரு பழைய நாற்காலிய எடுத்து போடுறது ...
//

உஸ்.அப்பப்பா...!!

அ.மு.செய்யது said...

// இப்போதெல்லாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது தன் செல்-பேசியை மாற்றாவிட்டால் சிலருக்கு பூமி சுற்றுவது நின்றுவிடுவது போல நினைப்பு.//

நான் என்னோட 1100 நோக்கியா மொபைலை க‌ட‌ந்த‌ 4 ஆண்டுக‌ளாக வைத்திருக்கிறேன்.

அ.மு.செய்யது said...

//மனிதன்தான் மாறியிருக்கிறான். அவன் தேவைகளை அவ்வப்போது மாற்றிகொள்கிறான் அவ்வளவே!//

உண்மை தான்... மாற்றம் என்ற ஒன்றைத் தவிர அனைத்துமே மாற்றத்திற்குட்பட்டவை.

கணினி தேசம் said...

//அ.மு.செய்யது said...

// இப்போதெல்லாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது தன் செல்-பேசியை மாற்றாவிட்டால் சிலருக்கு பூமி சுற்றுவது நின்றுவிடுவது போல நினைப்பு.//

நான் என்னோட 1100 நோக்கியா மொபைலை க‌ட‌ந்த‌ 4 ஆண்டுக‌ளாக வைத்திருக்கிறேன்.
//

வாங்க அ.மு.செய்யது,

நீங்க என் இனம்! :))))))

கணினி தேசம் said...

அ.மு.செய்யது said...
உண்மை தான்... மாற்றம் என்ற ஒன்றைத் தவிர அனைத்துமே மாற்றத்திற்குட்பட்டவை.

//

நல்ல பாய்ண்டா இருக்கே..நோட் பண்ணிக்கிறேன்.

அ.மு.செய்யது said...

//இன்னும் சொல்வதென்றால், நாம் உணவகங்களில் சாப்பிடும்போது பரிமாறிய உணவை முழுமையாய் சாப்பிடுகிறோமா? பாதி உணவை அப்படியே வைத்துவிட்டு வருவதில்லையா.//

இது மட்டுமின்றி ஸ்டார் ஓட்டல்களில் ஒருத்தர்க்கு 800ரூ ,900ரூ கொடுத்து ட்ரீட் என்ற பெயரில் வீணடிக்கிறோமோ ?? அந்த பணத்தை பசியால் வாடும் 20 ஏழைக்குழந்தைகளுக்கு வயிறார உணவளிக்க எத்தனை பேருக்கு மனம் இடம் கொடுக்கிறது ???

நட்புடன் ஜமால் said...

சேமிப்போம் - கணினி தேசம்

இப்படி பார்த்தவுடன்

ஏதோ GB கணக்குல சொல்லுவீங்கன்னு பார்த்தா ...

நட்புடன் ஜமால் said...

\\"இந்த மொபைல் ரொம்ப போர்..புதுசு மாத்திரனும்"\\

மாதம் ஒன்று வாங்கும் ஆள் நான்.

இதை கொடுத்து அது

அதை கொடுத்து இது

இப்படி ...

நட்புடன் ஜமால் said...

\\நாம் உணவகங்களில் சாப்பிடும்போது பரிமாறிய உணவை முழுமையாய் சாப்பிடுகிறோமா?\\

சரியாகச்சொன்னீர்கள்.

இந்த கூத்து நீங்கள் இருக்கும் தேசத்தில் மிக அதிகமாக நடைபெறும்.

அந்நாட்டில் உள்ள நம்மவர்கள் கூட இந்த கூத்தினை செய்வார்கள்.

நட்புடன் ஜமால் said...

\\"ஒரு பொருளை வாங்கினால், கட்டாயம் பயன்படுத்துங்கள், வீணடிக்காதீர்கள்"\\

நல்ல கருத்து ...

நட்புடன் ஜமால் said...

மொத்தத்தில் தங்கள் கருத்தினை சேமிப்போம் ...

நட்புடன் ஜமால் said...

\\ஏழைக்குழந்தைகளுக்கு வயிறார உணவளிக்க எத்தனை பேருக்கு மனம் இடம் கொடுக்கிறது ???\\

சரியான கேள்வி செய்யத்.

நாம் முதலில் தொடங்குவோம் ...

கணினி தேசம் said...

//நட்புடன் ஜமால் said...
சேமிப்போம் - கணினி தேசம்

இப்படி பார்த்தவுடன்

ஏதோ GB கணக்குல சொல்லுவீங்கன்னு பார்த்தா ...

//
வாங்க ஜமால்..!!

கணினி தேசம் said...

நட்புடன் ஜமால் said...
\\"இந்த மொபைல் ரொம்ப போர்..புதுசு மாத்திரனும்"\\

மாதம் ஒன்று வாங்கும் ஆள் நான்.

இதை கொடுத்து அது

அதை கொடுத்து இது

இப்படி ...
//
ஓ...அவரா நீங்க ...!!

கணினி தேசம் said...

நட்புடன் ஜமால் said...
\\நாம் உணவகங்களில் சாப்பிடும்போது பரிமாறிய உணவை முழுமையாய் சாப்பிடுகிறோமா?\\

சரியாகச்சொன்னீர்கள்.

இந்த கூத்து நீங்கள் இருக்கும் தேசத்தில் மிக அதிகமாக நடைபெறும்.

அந்நாட்டில் உள்ள நம்மவர்கள் கூட இந்த கூத்தினை செய்வார்கள்.
//
வணிக-வளாகத்துல இருக்கற Food-court -ல, சிலர் உணவை அப்படியே வைத்து செல்வதை பார்க்கும் போது வயிறு எரியும்.

எவ்வளவு சாப்பிட முடியும் என்று வாங்கும் முன் ஒரு நொடி யோசித்தால், இவற்றை தவிர்க்கலாமே.

கணினி தேசம் said...

நட்புடன் ஜமால் said...
\\ஏழைக்குழந்தைகளுக்கு வயிறார உணவளிக்க எத்தனை பேருக்கு மனம் இடம் கொடுக்கிறது ???\\
சரியான கேள்வி செய்யத்.
நாம் முதலில் தொடங்குவோம் ...
//
"ஆனா எனக்கு இதுவரைக்கும் யாரும் பைவ் ஸ்டார் ஹோட்டல்'ல பார்ட்டி கொடுத்ததே இல்லை :(("

நானும் உங்கள் பக்கம்தான்.. ஒவ்வொருமுறை ஊருக்கு செல்லும்போதும் நிச்சயம் "ஒரு-உதவி" என முடிவு செய்துள்ளேன்.

கணினி தேசம் said...

நட்புடன் ஜமால் said...
மொத்தத்தில் தங்கள் கருத்தினை சேமிப்போம் ...
//

நன்றிகள் பல ஜமால்,
வருகைக்கும்..விளக்கமான பின்னூட்டத்திற்கும்.

- இரவீ - said...

//கணினி தேசம் said...

நானும் உங்கள் பக்கம்தான்.. ஒவ்வொருமுறை ஊருக்கு செல்லும்போதும் நிச்சயம் "ஒரு-உதவி" என முடிவு செய்துள்ளேன்//

அதனால்தான் ஊருக்கு போரதில்லேயா?